நீதா அம்பானிக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்து ஆச்சரியப்படுத்திய முகேஷ் அம்பானி.. இப்பவும் லவ்ஸு குறையல!
இந்தியாவின் பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி இடத்தில் இல்லாத சொகுசு காரே இருக்க முடியாது என கூறிவிடலாம். அந்த அளவிற்கு மிக அதிக எண்ணிக்கையில் அவரிடத்திலும், அவரின் குடும்பத்தாரிடத்திலும் சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே தன்னுடைய மனைவிக்கு முகேஷ் அம்பானி மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அந்த சொகுசு காரில் நீதா அம்பானி ஏற்கனவே தன்னுடைய பயணத்தை மேற்கொள்ள தொடங்கிவிட்டார் என்றும், அதை உறுதிப்படுத்தும் விதமாக, அவர் அந்த புத்தம் புதிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் வலம் வரக் கூடிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. அது என்ன கார்? அதன் சிறப்புகள் என்ன? குறிப்பாக அதன் விலை எவ்வளவு? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரோல்ஸ் ராயஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Cullinan Black Badge) எனும் அரிய வகை காரையே முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானிக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 8.2 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே அம்பானி, நீதாவிற்கு பரிசாக வழங்கி, அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். மேலும், இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான பரிசு சம்பவமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

வரவிருக்கும் பண்டிகைத் தினத்தை முன்னிட்டு இந்த சொகுசு கார் பரிசளிப்பு நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஆனால், பரிசளிப்பிற்கான துள்ளியமான காரணம் இதுவரை தெரியவரவில்லை. ஏற்கனவே, முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடத்தில் அதிக எண்ணிக்கையில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றநிலையில், மேலும் ஓர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, வழக்கமான கல்லினன் கார் மாடலைக் காட்டிலும் இந்த கல்லினன் பிளாக் பேட்ஜ் மிக அதிக அழகான மற்றும் கவர்ச்சியான கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் இந்த காருக்கு கருப்பு நிறத்தால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அழகு சேர்த்திருக்கின்றது.

ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி (Spirit of Ecstasy)க்குகூட அது கருப்பு நிறத்தைச் சேர்த்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, அதிக பவர்ஃபுல் மோட்டாரான 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வழக்கமான கல்லினன் கார் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மோட்டாரைக் காட்டிலும் இது அதிக ட்யூன்-அப்பிற்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் ஆகும்.
வழக்கமான கல்லினனில் உள்ள மோட்டார் வெறும் 571 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும். ஆனால், இந்த சிறப்பு பதிப்பான பிளாக் பேட்ஜ் கல்லினனில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டாரானது அதிகபட்சமாக 600 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இதுதவிர, சொகுசு அம்சங்களும் இந்த காரில் கடல் போல வழங்கப்பட்டு இருக்கின்றது. காற்றோட்டம் மற்றும் மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, முழுக்க முழுக்க லெதரால் அலங்கரிக்கப்பட்ட உட்பக்கம், தியேட்டர் போன்ற பெரிய திரை, மிக சிறந்த ஆடியோ சிஸ்டம், பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக சிறிய ஃப்ரிட்ஜ், மிக சிறந்த கூலிங் சிஸ்டம் என இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மிகப் பெரிய கார் காதலர்களாக இருக்கின்றனர். சமீபத்திலேயே இவர்களின் குடும்பத்தினர் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்காக அதிக பாதுகாப்பை வழங்கும் வசதிகள் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு கார் மாடலை வாங்கினர். இதன்விலை ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த நிலையிலேயே அடுத்த ஓர் பத்து கோடி ரூபாய் விலை உள்ள கார்களை அவர்கள் வாங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









