இந்த பெண் புல்லட் ப்ரூஃப் கார் இல்லாம வெளிய போறதே இல்லபோல.. கணவன் பயன்படுத்தி வந்தது அவங்க கைக்கு மாறிருச்சு!
இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பமாக முகேஷ் அம்பானி குடும்பம் உள்ளது. இவர்கள் வாழும் ஆடம்பரமான வாழ்க்கை பற்றி சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. இருப்பினும், இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்தவகையில், ஓர் புடவை வாங்குவதற்காக மும்பையில் இருந்து பெங்களூரு வந்ததன் காரணமாக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தற்போது டிரெண்டாக தொடங்கி இருக்கின்றார். 'புடவை வாங்குவதற்காக அவரு அங்கே இருந்து பெங்களூரு வந்தாரு' என பலரும் சிலாகிக்குக் கொண்டிருக்கின்றனர்.
உடுத்தும் ஆடைக்கும், பயன்படுத்தும் பொருட்களுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய ஓர் பெண்மணியாக நீதா அம்பானி இருக்கின்றார். இதனாலேயே அவர் அவ்வப்போது பேசு பொருளாகவும் மாறிவிடுகின்றார். ஏனெனில் அவர் பயன்படுத்தும் சின்ன சின்ன பொருட்கள்கூட விலை உயர்ந்ததாகவும், அரிய வகை ஒன்றாகவும் இருக்கும்.

அந்தவகையிலேயே, தனித்துவமான புடவையை தேடி அவர் பெங்களூரு வந்திருக்கின்றார். விஷயம் அது அல்ல அவர் பெங்களூருவில் வலம் வர பயன்படுத்திய கார்தான் இப்போது பலரின் வாயை பிளக்கச் செய்திருக்கின்றது. நீதா அம்பானி பயன்படுத்தியது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்ட் (Mercedes-Benz S600 Guard) கார் மாடல் ஆகும்.
இதன் ஒரே ஒரு யூனிட்டின் மதிப்பே ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். இதை ஏதோ வழக்கமான சொகுசு கார் மாடல் மட்டுமே என நினைத்து விடாதீர்கள். இந்த கார் அதையும் தாண்டி சிறப்பான ஒன்று. அப்படி என்ன சிறப்பு இருக்கு இந்த காரில்?, மேலும், ஏன் இதன் விலை பத்து கோடி இருக்கின்றது என்றும் நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் இதோ,

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்ட் அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த கார் மாடல் மட்டுமல்ல, அது அதீத பாதுகாப்பை வழங்கும் திறன்மிக்கதும்கூட. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இந்த கார் ஓர் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்டது. இத்தகைய காரிலேயே அவர் புடவை எடுக்க பெங்களூருவில் வலம் வந்திருக்கின்றார்.
முன்னதாக இந்த காரை முகேஷ் அம்பானி பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது நீதா அம்பானியின் பயன்பாட்டிற்கு இந்த கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த கார் போதாது என்று என்எஸ்ஜி கமாண்டோக்களின் பாதுகாப்பு படையும் அவருடைய பாதுகாப்புக்காக அங்கே குவிக்கப்பட்டு இருந்தது.
முகேஷ் அம்பானி தற்போது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி (BMW 7-Series Hi Security) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்680 குவார்டு (Mercedes-Benz S680 Guard) கார்களின் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார். இவையும் புல்லட் மற்றும் வெடிகுண்டுகளில் இருந்து பயணிகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டவை என்பது கவனிக்கத்தகுந்தது.
அதேநேரத்தில், பென்ஸ் எஸ்600 குவார்டு-ம் பயணிகளுக்கு பாதுகாப்பு தருவதில் எந்த விதத்திலும் குறைந்த கார் மாடல் அல்ல. இதன் பாதுகாப்பு திறன் என்பது இரும்பு கவசத்தைவிடவும் பலமடங்கு அதிகமாக இருக்கும். விஆர்10 (VR10) வகை பாதுகாப்பு அமைப்பையே இந்த கார் கொண்டிருக்கின்றது.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் காருக்கு 2 மீட்டர் இடைவெளியில் 15 கிலோ எடையுள்ள டிஎன்டி வெடித்தாலும் அதற்குள் இருப்பவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இத்தகைய உச்சபட்ச பாதுகாப்பு திறனை வழங்கக் கூடிய ஓர் கார் மாடலே பென்ஸ் எஸ்600 குவார்டு ஆகும்.
இந்த மற்ற வழக்கமான கார்கள் இருந்தால் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதேபோல், விஷ வாயு தாக்குதலில் இருந்தும் இந்த கார் பயணிகளை பாதுகாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, பஞ்சரே ஆனாலும் பல கிமீ தூரம் வரை நிற்காமல் இந்த வாகனம் பயணிக்கும்.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 6.0 லிட்டர் வி12 பை-டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 523 பிஎச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதீத பாதுகாப்பு திறன்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காரை தற்போது நீதா அம்பானி பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றார். மேலும், இவை உச்சபட்ச பாதுகாப்பை வழங்கும் என்கிற காரணத்தினாலேயே ஒன்றல்ல நான்கு வரை இந்த கார் மாடலை அம்பானி குடும்பம் பயன்படுத்தி வருகின்றது.


Click it and Unblock the Notifications









