முதல் முறையா தெரிந்த முகம்! படை பரிவாரங்களுடன் 15 கோடி ரூபாய் காரில் வந்தது அவரா! மகாராணி கணக்கா இருக்காங்க!
உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம் என்பதால், அவரது மனைவி நீதா அம்பானி (Nita Ambani), ஆடம்பரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நீதா அம்பானி பயணம் செய்யும் கார்கள் அனைத்தும், சொகுசு வசதிகள் நிரம்பியதாகவே இருக்கும். ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி (Rolls Royce Phantom VIII EWB) காரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இது நீதா அம்பானி புதிதாக வாங்கியுள்ள ஆடம்பர கார் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரை நீதா அம்பானி வாங்கியது தொடர்பான செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வாசகர்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது இந்த காரில் நீதா அம்பானி பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரில் நீதா அம்பானி பயணம் செய்வதை உறுதி செய்துள்ள முதல் வீடியோ இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்து நீதா அம்பானி பயணம் செய்துள்ளார். அப்போது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரை சுற்றிலும், பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றுள்ளன.
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரை, நீதா அம்பானி, பிங்க் நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த கலர் ஆப்ஷனை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quartz) என குறிப்பிடுகிறது. நீதா அம்பானி வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரின் விலை 12 கோடி ரூபாய் ஆகும்.

இத்தனைக்கும் இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். போதாக்குறைக்கு நீதா அம்பானி அவரது விருப்பத்திற்கு ஏற்ப காரில் பல்வேறு மாற்றங்களையும் செய்திருப்பார். இந்த காரின் உட்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள 'NMA' என்ற எழுத்துக்கள் இதற்கு ஒரு உதாரணம். 'Nita Mukesh Ambani' என்ற பெயருடைய சுருக்கம்தான் 'NMA' ஆகும். இதுபோன்ற பல்வேறு மாடிஃபிகேஷன்கள் காரணமாக நீதா அம்பானி வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை குறைந்தபட்சம் 15 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரில், மிகவும் சக்தி வாய்ந்த 6.75 லிட்டர் வி12 ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 571 பிஹெச்பி பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும். இதன் மூலம், இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் இதுதவிர இன்னும் பல்வேறு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீதா அம்பானி மட்டுமல்லாது, அம்பானி குடும்பமே விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்து வருகிறது. சமீபத்தில் முகேஷ் அம்பானி-நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி (Anant Ambani), துபாயில் ஷாப்பிங் செய்துள்ளார். இதற்காக அவர் பயன்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஆகும்.
இங்கே மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நீதா அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் VIII இடபிள்யூபி காரை போலவே, ஆனந்த் அம்பானியின் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை சுற்றிலும், பாதுகாப்பிற்கு ஏராளமான கார்கள் அணிவகுத்து வந்தன என்பதுதான். முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் ஆடம்பரத்திற்கு இவை எல்லாம் சிறிய உதாரணங்கள் மட்டுமே!


Click it and Unblock the Notifications








