இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க... ரொம்ப ஜாஸ்தியா இருக்கு... மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக்...

நிதி அயோக் எலெக்டரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க சொல்லியுள்ளது.இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

இந்தியாவில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசும் கச்சா எண்ணெய்யின் தேவையை குறைக்க எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவித்து வருகிறது. மக்களும் இன்று நிலவி வரும் பெட்ரோல் டீசல் விற்பனையை ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்கள் லாபம் தான் என்கிற ரீதியில் யோசித்து எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

அதற்கு தகுந்தார் போல பல பெரிய நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளில் எலெக்டரிக் வேரியன்ட்களையும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்காகவே புதிய தயாரிப்புகளையும் வெளியிட துவங்கிவிட்டனர். ஆனால் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் முக்கியமான சிக்கல் இதன் விலை பெட்ரோல்/டீசல் வாகனங்களை ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறது.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

இதனால் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. இது ஒட்டு மொத்தவிற்பனையில் 10 சதவீதத்தை கூட எட்டிப்பிடிக்க முடியவில்லை.தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயான் பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

இந்த பேட்டரிகளின் விலை தான் பெரும்பாலான வாகனத்தின் ஒட்டு மொத்த விலையில் 25-35 சதவீத விலையின் அடக்கமாக இருக்கிறது. உதாரணமாக ரூ10 லட்ச ரூபாய்க்கு ஒரு எலெக்டரிக் கார் வாங்கினார்ல அதில் ரூ2.5-3.5 லட்சம் வரையில் பேட்டரிக்காக செலவிட வேண்டியதுஉள்ளது. எலெக்ட்ரிக் வாகனத்தின் விலையை குறைக்க வேண்டும் என்றால் பேட்டரியின் விலையை கட்டாயமாக குறைக்க வேண்டும்.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

மத்திய அரசு இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் இதன் ஒரு கட்டமாக தற்போது மத்திய அரசுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்கும் நிதி அயோக் அமைப்பு தற்போது லித்தியம் அயான் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அறிவுத்தியுள்ளது. அதன்படி அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

எலெக்டரிக் வாகனங்களை பொருத்தவரை தற்போது பேட்டரிகளுக்கு 18 சதவீதமும், ஒட்டு மொத்த வாகனத்திற்கு 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டிற்கு முன்பு வரை எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக இருந்தது. அதன் பின்பு 18 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பேட்டரிகளுக்கான வரியை குறைக்கும் முயற்சி துவங்கியுள்ளது.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

தற்போது ஜிஎஸ்டியில் குறைந்த ஸ்லாப் ஆன 5 சதவீத வரிக்குள் எலெக்டரிக் வாகன பேட்டரிகள் வந்துவிட்டால் எலெக்டரிக் வாகனங்களில் விலை மேலும் குறையும். இது ரூ10 லட்சம் மதிப்பிலான காரின்விலையை ரூ30 -40 ஆயிரம் வரை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். அதே நேரம் இந்த விலை குறைப்பு கார்களை விட ஸ்கூட்டர்களுக்கு நல்ல பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

இந்தியாவில் எலெக்டரிக் வாகனங்களுக்கான எதிர்காலம் அதிகமாக இருக்கிறது இதனால் பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை களம் இறக்க முயற்சி செய்து வருகின்றனர். டெஸ்லா நிறுவனம் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட எலெக்டரிக் கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசு அதற்கு சமரசம் ஆகவில்லை. இதனால் இந்த திட்டத்தை டெஸ்லா கைவிட்டுள்ளது.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியை குறைங்க . . . ரொம்ப ஜாஸ்தியா இருக்கு . . . மத்திய அரசுக்கு குட்டு வைத்த நிதிஅயோக் . . .

வரும் ஆண்டுகளில் இந்தியாவில் தயார் செய்யப்படும் எலெக்டரிக் கார்கள் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக விலை குறையும் பட்சத்தில் எதிர்காலத்தில் சாலைகளில் பெட்ரோல்/டீசல் கார்களை விட எலெக்டரிக் கார்களே அதிகம் ஓடும் என எதிர்பார்க்கலாம். இந்த காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Niti aayog suggested center to reduce GST Slab on EV Batteries know full Details
Story first published: Thursday, June 9, 2022, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X