இன்னும் 3 மாசம் தான் ரோட்டுல இருக்குற குண்டு குழி எல்லாம் சரி பண்ண போறாங்க! மத்திய அரசு அதிரடி பிளான்!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நீக்கி குழிகள் இல்லாத சாலைகளை அமைக்க மத்திய போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த குழிகளை சரி செய்வதற்காக குறுகிய கால காண்ட்ராக்ட் ஒன்றையும் வழங்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் போக்குவரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை தான் மிகப்பெரிய முதுகெலும்பு என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. ஒருவர் ஒரு ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல நெடுஞ்சாலைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. குறிப்பாக சரக்கு வாகனங்கள் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து வேகமாக இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல தேசிய நெடுஞ்சாலைகளை நம்பியே இருக்கிறது.

pothole free highways

இந்த தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த அரசு ஆங்காங்கே சுங்க சாவடிகளை அமைத்து அதன் மூலம் கட்டண வசூல் செய்து வருகிறது. அரசு என்னதான் கட்டணம் பெற்றாலும் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பது குறித்து சில புகார்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே தான் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் பள்ளமேடுமாக இருப்பதாகவும் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள சுமார் 1.46 லட்சம் கிலோமீட்டர் தூரத்திலான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு சின்ன பள்ளம் கூட இல்லாமல் எல்லாம் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

pothole free highways

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்த வரை மூன்று விதமான வகையில் செயல்படுகிறது. பில்ட் ஆபரேட் டிரான்ஸ்பர் (BOT), பிரெக்ரூட்மெண்ட் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் (EPC), ஹைபிரிட் அனுவிட்டி மாடல் (HAM) இந்த மூன்று விதமான முறைகளில் தான் இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதில் இபிசி எனப்படும் பிரெக்ரூட்மெண்ட் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் மாடலில் தான் பிரச்சனை இருக்கிறது.

இந்த மாடலில் கட்டமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் தனியாருக்கு கான்ட்ராக்ட் மூலம் சாலை கட்டமைக்க கான்ட்ராக்ட் ஒதுக்கப்பட்டது தனியார் நிறுவனங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த சாலையை கட்டமைத்து அதை அரசிடம் ஒப்படைத்து விடுகின்றனர். பின்பு அரசு அங்கு டோல் கேட்களை அமைத்து கட்டண வசூல் செய்கிறது. இதன்படி அமைக்கப்பட்ட சாலைகள் எல்லாம் பராமரித்துக்கும் தனியார் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற ரீதியில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

pothole free highways

ஆனால் பிஓடி என்ற முறைப்படி கட்டமைக்கப்பட்ட சாலைகளில் காண்ட்ராக்டர் அந்த சாலையை கட்டமைத்தவுடன் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கான பராமரிப்பையும் அவர்தான் செய்ய வேண்டும். இதை எல்லாம் சேர்த்து தான் ஒப்பந்தம் செய்யப்படும். இப்படியாக கட்டமைக்கப்படும் சாலைகள் சரியாக பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் சரியாக பராமரிப்பு இல்லாத சாலைகள் நேரடியாக அரசின் பராமரிப்பின் கீழ் இருப்பதால் அந்த சாலைகளை மீண்டும் சரியாக பராமரித்த ஒப்பந்தம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி இது குறுகிய கால ஒப்பந்தமாக மாற்றப்பட்டு சாலை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அவர்கள் சாலையை முறையாக பராமரிக்கையின் பட்சத்தில் சாலையில் இனி குண்டு குழிகள் இல்லாத சூழ்நிலை ஏற்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகிறது.

தற்போது மத்திய அரசு பிஓடி எனப்படும் பில்டு ஆபரேட் டிரான்ஸ்ஃபர் என்ற விதிமுறையின் கீழ் தான் தற்போது நெடுஞ்சாலைகளை கட்டமைக்க ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பு அந்த சாலைகளை கட்டமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கே இருக்கிறது. இதனால் அந்நிறுவனங்கள் தரமான சாலைகளை அமைக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இப்படியாக குழிகள் ஏற்பட இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் மழை, அதிகமான மழைப்பொழிவு இருப்பதால் மண்ணரிப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட இடங்களில் மேடு-பள்ளங்கள் அதிகம் உண்டாகிறது. இரண்டாவது காரணம் விபத்துக்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும் விபத்து நடந்தால் அந்த விபத்து காரணமாக ரோடு சேதமடைகிறது. பின்னர் அது சரி செய்யாமல் விடப்படும் நிலையில் அந்த சேதம் தொடர்ந்து பெரிதாகி கொண்டே இருக்கிறது.

இனி இந்த பிரச்சனைகள் இல்லாமல் தவிர்க்கவே இப்படியான குறுகிய கால காண்ட்ராக்ட் திட்டத்தை மத்திய போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி வரும் டிசம்பர் முதல் இந்தியாவில் குண்டு குழிகள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலைகளை காணவே முடியாது என தெரியவந்துள்ளது.பிரச்சனை ஏற்பட்டவுடன் ஆரம்பித்திலேயே காண்ட்ராக்டர்கள் இதை சரி செய்துவிடுவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக முக்கிய கட்டமைப்பாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சாலைகள் மிகப்பெரிய பங்கை வைக்கின்றன. இந்நிலையில் இந்த சாலைகளில் குண்டு குழியுமாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நிச்சயம் பாராட்டலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 29, 2023, 15:28 [IST]
English summary
Nitin gadkari aims for pothole free highways by decembers end unveils upcoming policy
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X