விஐபிகள் இனி சைரன் வச்ச கார்ல போக முடியாது! மத்திய அரசு பெரிய ஆப்பு வைக்க போறாங்க!

இந்தியாவில் விஐபி கார்களுக்கான சைரன் சிஸ்டத்தை நீங்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஒலி மாசுவை குறைக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விஐபி கார்களுக்கு சைரன் என்பது தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமாக இருக்கிறது. பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நபர்கள் எல்லாம் இந்த சைரன் வைத்த கார்களை தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் சாலையில் செல்லும்போது அவர்களுக்கு தனி வழி கிடைக்கிறது. மற்றும் சாலை விதிகளில் இருந்து சில விலக்குகள் கிடைக்கிறது.

vip siren change

இதனால் உயர் பதவியில் இருப்பவர்கள் தற்போது தங்கள் கார்களில் சைரனை பொருத்தி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சகலன் சத்தம் ஒலி மாசுவை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதற்கு இது ஒரு தீர்வு காண வேண்டுமென நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை இருந்து வருகிறது. .

இந்நிலையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள ஒரு மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசும் போது இந்தியாவில் விஐபிகளுக்கு வழங்கப்படும் சைரன் சிஸ்டத்தை நீக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்.

அதற்கு பதிலாக புல்லாங்குழல் தபேலா சங்கு ஆகிய இசைக்கருவிகளில் இருந்து வரும் சத்தத்தை வைத்து புதிய சைரன் சத்தத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறினார் இந்த சத்தத்தை இனி சயன்களில் பொருத்தி சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த சத்தம் ஒலி மாசுவை ஏற்படுத்தாமல் சத்தம் எழுப்பும் என்பதால் ஒலி மாசு குறையும். இந்த சைரன் சத்தத்தை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.இதனால் விரைவில் இந்தியாவில் சைரன் ஒலி எழுப்பும் சத்தம் மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

இந்த சைரன் சத்தம் மாற்றம் என்பது விஐபிகள் காருக்கான மாற்றம் மட்டுமே இந்தியாவில் தற்போது தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களிலும் சைரன் பொருத்தப்படுகிறது. இந்த சைரன் சத்தம் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஏற்படும். இதனால் ஒலி மாசு ஏற்பட்டாலும் அதைப்பற்றி மத்திய அரசு பெரிதாக பரிசீலனை செய்யவில்லை.

இந்த இரு வாகனங்களுக்கும் அதிகமான சைரன் சத்தம் தேவை என்பதால் இது உயிர் காக்கும் விஷயம் என்பதால் இந்த இடத்தில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு விரும்பவில்லை. ஆனால் உயர் பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், அவர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் வாகனங்களில் மட்டும் மாற்றி அமைக்கப்பட்ட சைரன் சத்தம் மாற்றப்படவுள்ளது.

தற்போது புதிய சைரன் சத்தத்தை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களையும் ஆய்வு பணியில் இறக்கியுள்ளது. இவர்கள் குறிப்பிட்ட சத்தத்தை ஆய்வு செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள் என தெரிகிறது. இது எப்பொழுது வரும் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சைரன் சத்தம் என்பது அதிக ஒலி மாசுவை ஏற்படுத்தும் விதமாக தான் இருக்கிறது. இதனால் இந்த சத்தத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மத்திய அரசு இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது தான். புதிதாக கொண்டுவரப்படும் புதிய சைரன் ஒலியில் ஒலி மாசு ஏற்படாத அளவுக்கு குறைந்த டெசிபலில் சத்தம் இருக்கும் அதே நேரம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Tuesday, August 15, 2023, 11:19 [IST]
English summary
Nitin gadkari aims to silence vip vehicle sirens mulling over flute sounds as a substitute
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+