Just In
- 12 min ago
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன பென்ஸ் கார்.. யார் வாங்கினார்கள் தெரியுமா?
- 58 min ago
டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியீடு... இவ்ளோ சிறப்பு வசதிகள் இருக்கா!..
- 2 hrs ago
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- 2 hrs ago
"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா
Don't Miss!
- Movies
முழுதாக செம்பியாக மாறிய கோவை சரளா... பிரபு சாலமன் இயக்கத்தில் காமெடி குயின்!
- News
20 லட்சம் பேருக்கு கொரோனா இருந்தால் என்ன.. அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகும் வடகொரியா.. பரபர பின்னணி
- Finance
இலங்கை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. பள்ளி, அலுவலகம் விடுமுறை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க தங்கள் மனைவியை மனதளவில் ரொம்ப கொடுமைப்படுத்துவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
தோனிக்கு இன்று கடைசி போட்டி.. சிஎஸ்கே அணியின் சீசன் முடிகிறது.. வெற்றியுடன் தொடரை முடிப்பாரா தோனி?
- Technology
உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய ஹோண்டா காரை பார்த்து ரசித்த நிதின் கட்காரி... இந்த காரின் ஹைலைட் என்னனு தெரிஞ்சா நீங்களும் மயங்கீருவீங்க
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, புதிய ஹோண்டா காரை பார்த்து ரசித்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசலால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவதையடுத்து, மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மாற்று எரிபொருள் வாகனங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக வெகு சமீபத்தில் டொயோட்டா மிராய் (Toyota Mirai) காரை அவர் பயன்படுத்த தொடங்கினார். இது ஹைட்ரஜன் (Hydrogen) மூலம் இயங்க கூடிய கார் ஆகும். இந்த சூழலில், புதிய ஹோண்டா சிட்டி இ:ஹெச்இவி (Honda City e:HEV) காரை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது பார்வையிட்டுள்ளார்.

ஹோண்டா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்த சிட்டி ஹைப்ரிட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரை காட்டுவதற்காக, ஹோண்டா நிறுவனத்தின் குழு தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை அவரது இல்லத்தில் சந்தித்தது. அப்போதுதான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை பார்வையிட்டார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை பார்வையிடும் புகைப்படங்களை ஹோண்டா நிறுவனம் தனது சமூக வலை தள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அவர் பார்வையிட்டது வெள்ளை நிற ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் ஆகும். டிசைனை பொறுத்தவரை கிட்டத்தட்ட பெட்ரோல் மாடலை போலவேதான், புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரும் உள்ளது.

எனினும் ஸ்டாண்டர்டு மாடலை காட்டிலும் ஸ்போர்ட்டியாக காட்டுவதற்காக சில நுட்பமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், வெகு சமீபத்தில்தான் ஹோண்டா நிறுவனம் புதிய சிட்டி ஹைப்ரிட் காரின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் விலை 19.50 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இது சற்று அதிக விலையாக தோன்றினாலும், சிட்டி ஹைப்ரிட் காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்டி ஹைப்ரிட் காரை எவ்வளவு பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்? என்பதை ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் தற்போது வந்துள்ள ஆர்டர்களை முடிப்பதற்கே 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய சிட்டி ஹைப்ரிட் கார் ஒரு லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. இது சிறப்பான மைலேஜ் என்பதில் சந்தேகமில்லை. புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரின் முக்கியமான ஹைலைட்களில் ஒன்றாக இதனை கூறலாம். ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து விட்டோம்.

அப்போது புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் கார் எங்கள் பல்வேறு விதங்களில் கவர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்டு வரும் தொகையை குறைப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது. இதன் காரணமாகவே மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இதில், எத்தனால் மற்றும் ஹைட்ரஜன் போன்றவையும் அடங்கும். ஆனால் இந்த இன்ஜின்கள் இந்தியாவில் பிரபலமாவதற்கு இன்னும் அதிக காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹைப்ரிட் கார்கள் மாற்றத்திற்கு எளிதாகவும், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் இருக்கும். கார்களின் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிப்பதற்கும் ஹைப்ரிட் நல்ல வழியாக கருதப்படுகிறது.

ஆனால் ஹைப்ரிட் கார்களுக்கு மத்திய அரசு இன்னும் அதிக வரி சலுகைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், சிட்டி ஹைப்ரிட் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் ஹோண்டா குழுவினர் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து ஹைப்ரிட் கார்களுக்கு சலுகைகள் குறித்த அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வெளியாகுமா? என பலர் மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஹைப்ரிட் கார்களுடன், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களும் தற்போது இந்திய சந்தையில் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.
-
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
-
97,000 ரூபாவுக்கே 150கிமீ பயணிக்கும் இ-ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஒடிசி... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!
-
காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம்... லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு...