பெட்ரோல், டீசலை எல்லாம் மக்கள் மறந்துடுவாங்க போலயே! மத்திய அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 1 கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகும் என்றும் இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த இவி எக்ஸ்போ 2023 கண்காட்சி நிகழ்ச்சியை கலந்து கொண்டவர் இவ்வாறு பேசியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் இவி எக்ஸ்போ-2023 என்ற நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு குறித்து பேசினார். அதில் அவர் பல முக்கியமான தகவல்களை எல்லாம் கூறினார் அரசின் கொள்கைகள் குறித்தும் எதிர்காலத்தில் வெற்றி வாகனங்களின் பயன்பாடு எந்த அளவிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு முனைகிறது என்பது குறித்தும் பேசினார்.

Nitin Gadkari

மத்திய அரசு தற்போது மாசு இல்லா ஆற்றலை பயன்படுத்தவே விரும்புவதாகவும் அதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் வாகன துறையில் தற்போது உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களை ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற பல்வேறு வகையில் ஊக்கமளித்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கான தொழில்நுட்பத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பதாகவும் அவர் பேசினார்.

மேலும் அவர் கூறும் போது இந்தியாவில் ஒரு 2030 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகவும் சூழ்நிலை ஏற்படும் என்றும் இந்த எலெக்ட்ரிக் வாகனதுறையில் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறியிருந்தார். தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 34.54 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இன்னும் 7 ஆண்டுகளில் இது மூன்று மடங்காக மாறும் என அவர் கூறியுள்ளார்.

Nitin Gadkari

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் மொத்தம் 1,52,601 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளன. இது கடந்த 2022 ஆம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு வெறும் 1,21,592 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாக கடந்த மே மாதம் தான் 1,52,420 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த விற்பனையை கடந்த நவம்பர் மாத விற்பனை நெருங்கி விட்டது. 2024 ம் ஆண்டு புதிய சாதனை படைக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகும்.

இந்தியாவில் ஃபேம் 2 மானியம் கடந்த ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்ட பின்பு எலெக்ட்ரிக் டூவீலர் செக்மெண்டில் விற்பனை ஓரளவு மந்தமானது. தற்போது அந்த மந்த நிலை மீண்டு வந்துள்ளது. தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை ஓரளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2024 மிகப்பெரிய சாதனை படைக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை அதிகரிக்கும். அதற்கு புதிய இடத்துக்கு வாகனங்களின் வருகை முக்கிய காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பொறுத்த வரை 13,87,114 வாகனங்கள் கடந்த 11 மாதங்களில் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்தாண்டு விற்பனையை ஒப்பிடும்போது 50 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. இந்த விற்பனை என்பது இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், கமர்சியல் வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனையை உள்ளடக்கியதாகும்.

இந்தியாவில் மெல்ல மெல்ல பெட்ரோல்,டீசல் வாகனங்களின் விற்பனை குறைந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் தேர்வு செய்வதில் தற்போது இருக்கும் மிகப்பெரிய தயக்கமே நீண்ட தூர பயணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒத்து வராது என்பதால் அதை தேர்வு செய்ய தயங்கி வருகின்றனர். குறைந்த தூர பயன்களுக்காக மட்டும் வாகனம் வாங்குபவர்களுக்கு வாகனங்கள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது.

நீண்ட தூர பயணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களில் சிறந்த தீர்வை கொண்டுவர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது ஓரளவு பயனளித்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயன் கிடைக்குமா என தெரியவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்யும் நபர்கள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி பெட்ரோல் போடுவது போல எலெக்ட்ரிக் வாகனத்தை நிறுத்தி சார்ஜ் ஏற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழில்நுட்பம் வளர வளர இந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யப்பட்டு விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூர பயணத்திற்கும் குறைவான துரை பயணத்திற்கும் என பெட்ரோல் வாகனங்களில் அனைத்து தேர்வுகளையும் எலெக்ட்ரிக் வாகனங்களும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் என்பது சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 27, 2023, 16:29 [IST]
English summary
Nitin gadkari envisions 1 crore ev sales 5 crore jobs by 2030
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+