உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இந்தியா தான் தயார் செய்யும்! அமைச்சர் சொன்ன ரகசியம்!

இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தயார் செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு வைத்துள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் மதிப்பு ரூபாய் 25 லட்சம் கோடியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குஜராத் மாநிலத்தில் அம்மாநிலத்திற்கான முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது பேசிய அவர் இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களை பசுமையான தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துவதற்காக அதில் அதிகமான முதலீடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிகமாக முதலீடு செய்யவில்லை என்றால் உலக வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுத்து செல்ல முடியாது என கூறியுள்ளார்.

nitin gadkari

சமீபத்தில் தான் இந்தியா உலக அளவிலான மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியது. ஜப்பனை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிக வாகனங்கள் விற்பனையாவதாக அறிக்கைகள் தெரிய வந்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு அளவை உயர்த்தி இந்தியாவில் ரூ 25 லட்சம் கோடி மதிப்பிலான ஆட்டோமொபைல் மார்க்கெட்டை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இப்படி செய்தால் உலகிலேயே அதிகமான ஆட்டோ மொபைல்களை உருவாக்கும் நாடாக இந்தியா தான் நம்பர் 1 இடத்தில் இருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவில் ஏற்படும் ஒட்டுமொத்த மாசுவில் 40 சதவீதம் போக்குவரத்து வாகனங்களால் ஏற்படும் மாசு எனவும் இதனால் நாம் குறைந்த விலையில் மாசு இல்லாத அதே நேரத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

nitin gadkari

இந்தியாவில் தற்போது போக்குவரத்து துறை செக்டார் என்பது மிக சவாலான விஷயங்களை சந்தித்து வருகிறது. ஒரே நேரத்தில் மாசுவை கட்டுப்படுத்தும் வகையிலான வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் அதே நேரம் வாகனங்களின் விலை அதிகமாகி விடக்கூடாது. வாகனங்களின் விலை அதிகமாகிவிட்டால் மக்கள் மத்தியில் வாகனங்கள் வாங்கும் திறன் குறைந்து விடும்.

அதே நேரத்தில் மக்கள் பயன்படுத்தும் வகையிலான வாகனங்களையும் தயாரிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பதால் இப்படியான தீர்வுகளை தேடி இந்தியா மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த தேர்தலில் இந்தியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஸ்கூட்டர் செக்மெண்டில் இன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாக துவங்கி விட்டன.

nitin gadkari

எலெக்ட்ரிக் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக இதுவரை துவங்கவில்லை. இதற்கு கார்களின் விலை மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பெட்ரோல் கார்களின் விலைக்கு எலெக்ட்ரிக் கார்கள் வராததால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை வாங்க அதிக தயக்கம் இருக்கிறது. ஆனால் ஸ்கூட்டர்களை பொறுத்தவரை கிட்டத்தட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான விலையில் தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த லித்தியதில் 6 சதவீதம் ஜம்மு காஷ்மீரிலேயே இருப்பதால் இந்தியாவிலேயே லித்தியத்தை எடுத்து பேட்டரிகளை தயார் செய்யும் ஆலையை நம்மால் ஏற்படுத்தி விட முடியும். இதற்கான பணிகளை தற்போது மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இது மட்டும் சாத்தியமாகிவிட்டால் உலக அளவில் உள்ள எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கு சவால் விடும் வகையில் நாம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வந்து விட முடியும். இதை மட்டும் நாம் சாத்தியமாக்கி விட்டால் பெட்ரோல் வாகனங்களில் பயன்பாடு வேகமாக குறைந்து விடும். இதுகுறித்தும் நிதின் கட்கரி இந்த கூட்டத்தில் பேசினார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாக இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் அதிகமான பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது. இதை தொடர்ந்து அதிகப்படுத்தினால் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்கும் நாடாக இந்தியா மாறுவதில் எந்த தயக்கமும் இல்லாமல் இருக்கும். இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் நிலையில் இதை சாத்தியமாக என்ன வழிகள் உண்டு என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 13, 2024, 7:00 [IST]
English summary
Nitin gadkari india auto manufacturing hub
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X