அமெரிக்கா, சீனா எல்லாம் ஓரம்போ! முதலிடத்தை பிடிக்கப்போகும் இந்தியா!

அமெரிக்கா, சீனாவை எல்லாம் ஓரம்கட்டி விரைவில் ஆட்டோமொபைல் துறையில் இந்தியா நம்பர் 1 இடம் பிடிக்கும் என மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் பேசியள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இது இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டில் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா தற்போது ஆட்டோமொபைல் மார்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய 3வது மார்கெட்டாக இந்தியா தான் இருக்கிறது. 3வது இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்க தள்ளி இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 2 இடத்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

Nitin Gadkari

தற்போது இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டில் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ22 லட்சம் கோடியாக இருக்கிறது. இதுவே அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு ரூ78 லட்சம் கோடியாக இருக்கிறது. சீனாவின் மதிப்பு ரூ47 லட்சம் கோடியாக இருக்கிறது.

இது குறித்து நிதின்கட்கரி பேசும் போது இவர் கடந்த 2014ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்தியா வெறும் ரூ7.2 லட்சம் கோடி என்ற துறை மதிப்பை தான் ஆட்டோமொபைல் செக்டாரில் வைத்திருந்தது. தற்போது அது ரூ22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அமெரிக்கா, சீனாவின் மதிப்பையும் தாண்டி இந்தியா மிகப்பெரிய மார்கெட்டாக நம்பர்1 இடத்திற்கு செல்லும் என பேசினார்.

Nitin Gadkari

மேலும் இவர் கூறும்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் 4.5 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளனதாகவும், இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பை உருவாக்கிய துறையாக ஆட்டோமொபைல் துறை தான் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவில் ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தரும் துறையாகவும் ஆட்டோமொபைல் துறை தான் இருப்பதாக கூறினார்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் தான் மிகப்பெரிய உற்பத்தி துறையாக இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள 40 சதவீத மக்கள் தொகை ஆட்டோமொபைல் செக்டாரில் ஏதோ ஒரு விதத்தில் தொடர்ப்பில் இருப்பதாகவும்இதானல் பொறுப்புணர்வுடன் ஆட்டோமொபைல் துறை செயல்பட திட்டமிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Nitin Gadkari

தற்போது பெட்ரோலுக்கு வெளிநாட்டை சார்ந்து இருப்பதை குறைக்க பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை மத்திய அரசு சாத்தியமாக்கியுள்ளது. இதை விரைவில் 27 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து அதன் விற்பனையை அதிகரித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு இப்படியாக வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததற்கும் இடையில் இந்தியா மிகப்பெரிய மார்கெட்டாக மாறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவையும் சீனாவையும் பின்னுக்கு தள்ளும் வகையில் இந்தியா வளரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2025, 12:15 [IST]
English summary
Nitin gadkari indian auto industry global leader goal
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X