ஐந்தாண்டுகளில் பெட்ரோலை ரீ-பிளேஸ் செய்ய மத்திய அரசு திட்டம்! அப்படினா வண்டில எதபோட்டு ஓட்டுறது? இதோ பதில்!
மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலை ரீ-பிளேஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக் கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், விரைவில் இந்தியாவில் பெட்ரோல்களுக்கு முடிவு கட்டப்பட இருப்பதாக அதிரடி தகவலை வெளியிட்டார். இந்த தகவல் பெட்ரோல்-டீசல் வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் என இரண்டிற்கும் இறுதி விழாக் கொண்டாடப்பட இருப்பதையே அவர் இவ்வாறாக தெரிவித்தார். இது பல்வேறு கேள்விகளை மக்கள் மத்தியில் எழும்ப செய்திருக்கின்றது. அரசு, பெட்ரோல்-டீசல் வாகனங்களே இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றதோ என்கிற கேள்வியே பலரிடத்தில் எழும்பியிருக்கின்றது.

இதற்கான பதிலையும் மத்திய அமைச்சர் அந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அவர் நாட்டில் இனி பயோ-எத்தனால் எரிபொருளுக்கு முக்கியத்தும் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இவை தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதேபோல், வாகன இயக்கத்திற்கான பசுமை ஹைட்ரஜனைத் தயாரிக்கும் பணிகளும் நாட்டில் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றையே முக்கிய எரிபொருளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக வழக்கமான பெட்ரோல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும் என அரசு நம்புகின்றது. ஏற்கனவே, அரசு வாகன உற்பத்தியாளர்களிடம் ஃப்ளெக்ஸ்-எரிபொருளில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளது. ஆகையால், கூடிய விரைவில் பெட்ரோல் வாகனங்களுக்கு டாட்டா காட்டும் நிலை நாட்டில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எத்தனால் என்றால் என்ன?
அமைச்சரின் பேச்சால் பலரிடையே எத்தனால் என்றால் என்ன என்ற கேள்வி எழும்பியுள்ளது. அது என்ன என்பதன் சுருக்கத்தைப் பார்க்கலாம், வாங்க.
எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் என இது அழைக்கப்படுகின்றது. இதனை ஆல்கஹாலாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு அதிக உயர் எரி திறனும் உள்ளது. மேலும், இது ஓர் கரிம இரசாயன (organic chemical) கலவையாகும். இருப்பினும், பெட்ரோலை விட அதிக ஆக்டேன் எண் மற்றும் குறைவான உமிழ்வு உள்ளீட்டு பண்புகளை கொண்டிருக்கின்றது. ஆகையால், பெட்ரோல் மற்றும் டீசலை விட மிக சிறந்த எரிபொருளாக அது செயல்படும்.

எத்தனால் கலந்த பெட்ரோல் உலகில் உள்ள பல நாடுகளில் விற்கப்படுகின்றன. இந்தியாவிலும் விரைவில் அது பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் தகவல்களை வெளியிட்டிருக்கின்றார். அதேவேலையில் ஏற்கனவே சில வாகனங்கள் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கா தயாராக இருக்கின்றன.

எத்தனை சதவீதம் பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படும்?
பல்வேறு நிலைகளில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுகின்றன. இருப்பினும், இ90 மற்றும் இ85 ஆகிய இரு முறைகளே பிரபலமானதாக உள்ளன. 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதையே இது உறுதிப்படுத்துகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இ90 என்பது 90 சதவீதம் பெட்ரோலும், 10 சதவீதம் எத்தனால் கலப்படம் என்பதையும், இ85 என்பது 85 சதவீதம் பெட்ரோலும், 15 சதவீதமும் எத்தனால் கலப்படம் என்பதையும் குறிக்கும்.

அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இ70-இ75 நிலைகளில் எத்தனால் கலக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் இரண்டு சதவீதம் என்கிற முறையிலேயே எத்தனால் கலப்படம் ஆரம்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10 சதவீதமாக அது அதிகரிக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான நாடுகள் அதை 10 சதவீதமாக உயர்த்தியிருக்கின்றன.

எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்:
எத்தனால் பெட்ரோலைவிட விலை குறைவு. எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ. 61 ஆக உள்ளது. இதனை பெரும்பகுதியாக பெட்ரோலில் பயன்படுத்தும்போது அதன் விலை பல மடங்கு குறைவாகும். மேலும், வெளிநாடுகளில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வதையும் இதன் வாயிலாகக் குறைக்க முடியும். இவையே எத்தனால் பயன்பாட்டினால் ஏற்படும் முக்கிய நன்மைகள் ஆகும்.


Click it and Unblock the Notifications