2024ல் நாம் நினைத்தது நடக்காது! மத்திய அமைச்சரே நடக்குறதுலாம் சரியில்லைன்னு ஒத்துக்கிட்டார்!
இந்தியா 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 50 சதவீத சாலை விபத்தைக் குறைக்கும் இலக்கை இந்தியா எட்டாது என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். பல்வேறு விஷயங்கள் சரியாக நடக்காததால் இந்த இலக்கை எட்டிப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் மிகப்பெரிய வாகன விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மூன்று லட்சம் பேர் வரை ஊனமாகின்றனர்.

இந்தியாவில் நடக்கும் இந்த சாலை விபத்துகளால் இந்தியாவின் ஜிடிபி 3 சதவீதம் வரை பாதிக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துக்களை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு ஏற்றது.
இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்பொழுது அவர் 2024 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துக்களை 50 சதவீதம் குறைக்க வாய்ப்பில்லை எனக் கூறினார். இதற்குக் காரணமாகப் பல சம்பவங்கள் எதிர்பார்த்த நிலையில் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை எட்ட முடியாததற்கு முக்கியமான காரணமாக இருப்பது விரிவான திட்ட அறிக்கையில் உள்ள பிரச்சனைதான் என்ன சொல்கிறார். மேலும் அவர் கூறும் போது : "விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பவர்கள் திட்டத்தின் மதிப்பீட்டை முடிந்த அளவுக்குக் குறைக்கவே நினைக்கின்றனர் இதனால் தரமான சாலைகள் அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் வருகிறது.
திட்ட மதிப்பீடு குறைவதால் சாலையில் பாதுகாப்பு அம்சங்களைக் குறைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சாலையில் அமைக்கப்படும் தரமான சிக்னல்கள் கூட சாலை விபத்தை பெரும் அளவு குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திட்ட மதிப்பீட்டின் குறைப்பால் தரமான சிக்கல்களைப் பொருத்துவதற்கான சாத்தியங்கள் இல்லாமல் போகிறது.

இந்தியாவில் ஐந்து முக்கியமான Eகள் சரியாக இருந்தால் சாலை விபத்துக்கள் குறைக்க முடியும் சாலை இன்ஜினியரிங் (E), எமர்ஜென்சி(E), ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (E), எஜுகேஷன் (E), என்போர்ஸ்மென்ட் (E) ஆகிய விஷயங்கள்தான் சாலை விபத்தைக் குறைக்க முக்கியமான காரணிகளாக இருக்கிறது. இதை சரி செய்வது மூலம் தான் விபத்துக்களை குறைக்க முடியும்.
அதே நேரம் சாலை விபத்துக்களைக் குறைக்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். சாலை இன்ஜினியரிங் பொறுத்தவரை இந்தியா சிவில் இன்ஜினியரிங்கில் இன்னும் மேம்பட வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது. கடந்த 9 ஆண்டுக் கால எனது அனுபவத்தில் தற்போது சாலை விபத்துகளைக் குறைக்க எனக்கு வழி கிடைத்து விட்டது." எனக் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிக அதிகமாக நடக்கிறது. இதைக் குறைக்க வேண்டிய உச்சக்கட்ட கட்டாய சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது. சாலை விபத்துக்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே வீழ்ச்சி அடையச் செய்து விடும். இதனால் மத்திய அரசு விரைவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவு குறைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









