20 வயதிலேயே கார் வாங்கிய இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? மொத்த இந்தியாவும் இப்போ இவர் பெயரை தான் சொல்லுது!!

டெஸ்ட் கிரிக்கெட் (Test Cricket)-இல் இந்திய ஆண்கள் அணிக்கு சமீப காலமாக கெட்ட நேரமாக உள்ளது. தொடர் தோல்விகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வெகுவாக குறைந்துள்ளன. தொடர் தோல்விகளுக்கு மத்தியில், இந்திய அணியின் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) உருவெடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி டொயோட்டா (Toyota) கார் ஒன்றின் உரிமையாளர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது புது, புது கார் & பைக்குகளை வாங்குவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். அவர்கள் வாங்குவதை எல்லாம் பார்த்தால், விலையுயர்ந்த கார் & பைக்குகளாகவே இருக்கும். ஆனால், தனது நிதானமான ஆட்டத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்துவரும் இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி வைத்திருப்பது விலை குறைவான டொயோட்டா கார் ஆகும்.

nitish kumar reddy s toyota hyryder

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரை நிதிஷ் குமார் ரெட்டி 2023 செப்டம்பர் மாதத்தில் வாங்கி இருந்தார். குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று அர்பன் க்ரூஸர் காரை டெலிவிரி பெறும் படங்களையும் அந்த சமயத்தில் நிதிஷ் குமார் ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட இந்த படங்கள் மட்டுமின்றி, நிதிஷ் குமார் ரெட்டியின் மற்ற இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கும் லைக் மற்றும் கமெண்ட்கள் தற்போது குவிந்து வருகின்றன. ஆனால், கார் வாங்கிய சமயத்தில் ஷோரூமில் நேரில் பார்க்கும்போது கூட பலருக்கு நிதிஷ் குமார் ரெட்டியை அடையாளம் தெரியவில்லை. ஏனெனில், அந்த சமயத்தில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே நிதிஷ் கலந்துக் கொண்டிருந்தார்.

இவர் முற்றிலும் கருப்பு நிறத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரை வைத்துள்ளார். அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இன் பிரபலமான பிரெஸ்ஸா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். பிரெஸ்ஸாவை போல் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரும் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது.

மேலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் ஹைரைடர் காரை கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.74 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் வரையில் உள்ளன.

நிதிஷ் குமார் ரெட்டி வாங்கிய சமயத்தில் காரின் விலை இன்னும் குறைவாக இருந்திருக்கும். கேமிங் கிரே, ஸ்போர்டியன் ரெட், எண்டிசிங் சில்வர், லுசண்ட் ஆரஞ்ச் மற்றும் கேஃப் வொயிட் என 5 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த டொயோட்டா கார் கிடைக்கிறது. விற்பனையில் இந்த காருக்கு எம்ஜி அஸ்டர் (MG Astor), ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) மற்றும் சிட்ரோன் ஏர்கிராஸ் (Citroen Aircross) உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023இல் கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி வாங்கிய டொயோட்டா காரின் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்றால், ரசிகர்கள் மனதில் இவர் எந்த அளவிற்கு வலுவாக இடம்பிடித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. இனி வரும் காலங்களில் இதனை காட்டிலும் விலைமிக்க கார்களை நிதிஷ் குமார் ரெட்டி வாங்குவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2025, 21:49 [IST]
English summary
Nitish kumar reddy owned toyota urban cruiser hyryder bought in 2023
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+