காலம் கடந்தாலும் உரிமத்தை புதுப்பிக்க கூடுதல் கட்டணம் தேவையில்லை: உயர்நீதிமன்றம்

காலம் கடந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படும் போது, அபராதம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் செலுத்த வகை செய்யும் மத்திய அரசின் 2 சட்டவிதிகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.

By Azhagar

கடந்த 2016ம் ஆண்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், வாகன ஓட்டுநர் உரிமம், சர்வதேச ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு, பதிவு சான்று புதுப்பிப்பு, ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கான உரிமம் புதுப்பிப்பு மற்றும் காலம் கடந்து புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கான கட்டணங்களை நான்கு மடங்காக உயர்த்தி அறிவிப்பாணை வெளியிட்டது.

ஓட்டுநர் உரிமம் புதுபிப்பதற்கு கூடுதல் கட்டணம் ரத்து

மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பானையை ரத்துசெய்யக்கோரி தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தனர்.

ஓட்டுநர் உரிமம் புதுபிப்பதற்கு கூடுதல் கட்டணம் ரத்து

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிகள் 32 மற்றும் 81-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, விதிகளை மீறும்பட்சத்தில் அபாராதம் விதைக்கப்படும் என புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்க மத்திய அரசு சட்டத்தில் இடமில்லை என மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டுயிருந்தனர்.

ஓட்டுநர் உரிமம் புதுபிப்பதற்கு கூடுதல் கட்டணம் ரத்து

மத்திய அரசு சார்பில் வழக்கில் அஜாரான வழக்கறிஞர் தனது வாதத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு வாகன சட்டத்தில் உள்ள விதிகளில் மாற்றங்கள் செய்ய அனைத்து விதிகளும் உள்ளது எனவும், மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து மனுதாரர்கள் சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என வாதிட்டார்.

ஓட்டுநர் உரிமம் புதுபிப்பதற்கு கூடுதல் கட்டணம் ரத்து

இருவேறு தரப்புகளின் வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் செய்த சட்டதிருத்தம் குறித்த புதிய உத்தரவை பிறப்பித்தனர்.

ஓட்டுநர் உரிமம் புதுபிப்பதற்கு கூடுதல் கட்டணம் ரத்து

சலுகைகாலம் முடிந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத்தான் மனுதார்கள் எதிர்க்கிறார்கள் என்றும் அதை ஏற்று மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் விதிகள் 32 மற்றும் 81-ல் மத்திய சட்டத்துறை அமைச்சகம் கொண்டு வந்த புதிய திருத்தங்களை ரத்து செய்யப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் புதுபிப்பதற்கு கூடுதல் கட்டணம் ரத்து

மேலும், அரசு தரப்பில் இருந்து எந்தவொரு கூடுதல் சேவையும் அளிக்காதபோது, அபராதம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அதிகாரம் கிடையாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Madras High Court canceled a notification levying additional fee as penalty by the Union Ministry of Road Transport and Highways for delayed renewal of driving licence, registration and submission of NOC for ownership transfer for motor vehicles.
Story first published: Wednesday, April 5, 2017, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X