தமிழகத்தை அடுத்து மஹாராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

தமிழகத்தைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும் குடி மகன்களுக்கான பரிசோதனையை நிறுத்தக்கூறி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

நாட்டில் அதிகம் அரங்கேறும் போக்குவரத்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு ட்ரிங்க் அண்ட் டிரைவ் (மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல்) போக்குவரத்து விதிமீறலே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

பெரும்பாலும் இந்த விதிமீறல் மாலை மற்றும் இரவு நேரங்களில்தான் அதிகம் நடைபெறுகின்றது. ஆகையால், இந்நேரங்களில் வாகன தணிக்கை மூலம் ட்ரிங்க் அண்ட் டிரைவ் மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களையும் போலீஸார் கண்கானித்து வருகின்றனர்.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

குறிப்பாக, இதுபோன்ற நேரங்களில் ஓர் நபர் மது அருந்தியிருக்கிறாரா, இல்லையா என்பதை கண்டறிவதற்காக ப்ரீத் அனலைசர் எனப்படும் மதுவின் அளவை குறியிடும் கருவியைப் பயன்படுத்துகின்றனர். ஆல்கஹாலின் அளவை குறிப்பிடும் இந்த அனலைசர் கருவி இல்லாத நேரங்களில் முகத்திற்கு முன்பாக ஊத சொல்லி, மதுவின் வாடையைக் கொண்டு ட்ரிங்க் அண்ட் டிரைவ் குற்றம் கண்டறியப்படுகின்றது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு, சமீபத்தில் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 (கொரோனோ) வைரஸே மிக முக்கிய காரணம் ஆகும். இந்த வைரஸின் தொற்று நாளுக்கு புதிய எண்ணிக்கையில் விரிவடைந்தேக் கொண்டு வருகின்றது. குறிப்பாக, தினந்தோறும் நூற்றுக் கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகின்றது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

அதேசமயம், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் முறையான மருந்துகளை உட்கொண்டு குணமாகியுள்ளனர். ஆனால், தற்போதுவரை இந்த வைரஸுக்கான அதிகாரப்பூர்வ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் திணறிய சூழ்நிலையே காணப்படுகின்றது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் நகரத்தில் மட்டும் காணப்பட்ட வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 124-க்கும் மேலான நாடுகளுக்கு பரவியிருக்கின்றது.

ஆகையால், இந்த வைரஸைக் கண்டு உலக மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

மேலும், இந்த வைரஸ் கூடுதல் மக்களை தொற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சில கடுமையான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், நாட்டின் பல பகுதிகளில் பொது இடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

இந்த நிலையிலேயே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது வாகன ஓட்டிகளை ஊத சொல்ல வேண்டும் என்றும் பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தும்படியும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்த நடைமுறையைதான் தற்போது மஹராஷாடிரா காவல்துறையும் கையாண்டிருக்கின்றது. இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்றை அம்மாநிலத்தின் கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் வினய் கர்கவோன்கர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

அதில் போலீஸாருக்கு, "கொரோனா வரைஸின் காரணமாக வாகன ஓட்டிகள் யாரையும் ப்ரீத் அனலைசர் கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், தொற்று உள்ள நபரிடம் அருகில் நின்று பேசுவதன் மூலமாகவே பரவுவதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, மஹாராஷ்டிரா மாநில போலீசுக்கு இத்தகைய உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

கொரோனா வைரஸ், அதன் தொற்றுடைய நபர் இரும்புவது மற்றும் தும்பவுதன் மூலமாக வெளியேறும் நீர் குமிழ்களின் மூலமாக பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இந்த நீர் குமிழ்கள் மற்றொருவரின் கைகளின்மீது படரும்போது, அந்நேரத்தில் தெரியாமல் மூக்கு அல்லது கண்களில் அவர் அந்த கைகளைப் பயன்படுத்து மிக சுலபமாக வைரஸ் தொற்று பரிமாற்றப்படுகின்றது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

இவ்வாறு, மிகுந்த ஆபத்துடைய வைரஸாக இந்த கொரோனா இருக்கின்றது. அதுமட்டுமின்றி, தற்போது கோவிட் தாக்கத்தினால் மஹாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று வரை இது 33 ஆக மட்டுமே இருந்தது.

இருப்பினும், பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடந்து தற்போது 39 பேரை தாக்கியிருக்கின்றது. இது விரைவில் புதிய எண்ணிக்கையை தொட்டுவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் மட்டுமின்றி அரசுக்கும் இருக்கின்றது.

தமிழகத்தை அடுத்து மஹராஷ்டிராவில் அதிரடி... குடி மகன்களுக்கான பரிசோதனை நிறுத்தம்..!

அதேசமயம், இந்த வைரஸை தடுப்பதற்கான அனைத்து பணிகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே போலீஸ் மற்றும் மக்களைக் காக்கும் விதமாக வாகன ஓட்டிகளிடம் ப்ரீத் அனலைசரை வைத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை அணியவும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2020, 11:24 [IST]
English summary
No Drink & Test Via Breath Analyser In Maharashtra. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+