இனி யாரும் ஒரு பைசா கூட கட்ட வேணாம்! டோல்கேட் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு! ரொம்ப சந்தோஷம்யா!
இந்தியாவில் ஃபாஸ்டேக் (FASTag) திட்டம், முதன் முதலில் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணத்தை (Toll Fee) செலுத்த ஃபாஸ்டேக் பயன்படுகிறது. யூபிஐ செயலிகள் (UPI Apps) மற்றும் மை ஃபாஸ்டேக் செயலி (My FASTag App) போன்றவற்றை பயன்படுத்தி, ஃபாஸ்டேக் கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஒரு ஃபாஸ்டேக் அட்டை 5 ஆண்டுகள் செல்லுபடியாகும். இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 98 சதவீத வாகனங்கள், ஃபாஸ்டேக் மூலமாகதான், டோல்கேட் கட்டணத்தை செலுத்தி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI - National Highways Authority Of India) அதிரடியாக உத்தரவிட்டது.

இதன்பின் ஃபாஸ்டேக் பயன்பாடு அதிகரித்து, தற்போது 98 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஃபாஸ்டேக் இல்லை என்றால், தற்போதைய நிலையில் 2 மடங்கு அதிக டோல்கேட் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. அப்படி 2 மடங்கு அதிக டோல்கேட் கட்டணத்தை செலுத்தி கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி.
ஆம். இனி ஃபாஸ்டேக் இல்லை என்றாலோ அல்லது ஃபாஸ்டேக் செயல்படாமல் போனாலோ, நீங்கள் 1.25 மடங்கு அதிக டோல்கேட் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். ஆனால் இதற்கு யூபிஐ பண பரிவர்த்தனையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இது மிகவும் எளிமையான ஒரு நடைமுறைதான். எனவே ஃபாஸ்டேக் இல்லாதவர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக கருதப்படுகிறது.

வரும் நவம்பர் 15ம் தேதியில் இருந்து, இந்த திட்டம் அமலுக்கு வரும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் நாங்கள் கண்டிப்பாக கூற வேண்டும்.
அதாவது செயல்பாட்டில் உள்ள ஃபாஸ்டேக் இருந்தும் கூட, டோல்கேட்டில் இருக்க கூடிய எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் சிஸ்டத்தின் குளறுபடி காரணமாக, ஒருவரால் டோல்கேட் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றால், அவரிடம் கட்டணம் எதுவும் வசூல் செய்யாமல், டோல்கேட்டை கடக்க அனுமதிக்க வேண்டும் எனவும் டோல்கேட் நிர்வாகங்களுக்கு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், டோல்கேட்டில் உள்ள இயந்திர கோளாறு காரணமாக உங்களால் டோல்கேட் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால், நீங்கள் இலவசமாகவே டோல்கேட்டை கடந்து செல்ல முடியும். இதுவும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த 2 அறிவிப்புகளுமே மகிழ்ச்சி அளிக்க கூடியவைதான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதுடன் கூடவே, தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தையும் வெகுவாக உயர்த்த வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தேசிய நெடுஞ்சாலை பயணங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் மாறும்.


Click it and Unblock the Notifications








