'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

வாகன ஓட்டிகளுக்கு சில விதிமீறல்களில் இருந்து விளக்கு அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

நாடு முழுவதும் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உச்சபட்ச அபராதத்திற்கான மாற்றங்களே முக்கிய காரணாக இருக்கின்றது.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக பிடிபடும் வாகன ஓட்டிகளுக்கு போலீஸார், குறைந்தது மூன்று விதமான விதிமீறல்களுக்காவது அபராதத்தை வழங்கிவிடுகின்றனர். அவ்வாறு, அவர்களுக்கு வழங்கப்படும் அபராதம், அவர்களின் வாகனங்களுடைய விலைக்கு இணையானதாக காணப்படுகின்றது.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

இந்தளவிற்கு அபராதம் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த சட்ட திருத்தமானது, முழுக்க முழுக்க இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

அதேசமயம், உச்சபட்ச அபராதத்தைக் காரணம் காட்டி போலீஸார், அத்துமீறலில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில் சிஎன்என் நியூஸ் 18 நடத்திய ஆபரேஷன் சம்பவம் வெளியாகியிருந்தது. அதில், நீதிமன்ற ஊழியர் ஒருவர் போக்குவரத்து அபராதத்தில் இருந்து தப்பிக்க இளைஞருக்கு உதவி செய்யும், முறைகேடு குறித்த அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருந்தது.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

இதுபோன்ற அதிர்ச்சி மற்றும் சுவாரஷ்யம் நிறைந்த சம்பவங்கள் கடந்த 1ம் தேதி முதல் இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

அந்தவகையில், சமீபத்தில் கால்களில் செருப்பு அணிந்திருந்ததற்காக இளைஞர்களுக்கு அபராதச் செல்லாண் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், சமீபத்தில் சட்டைப் பட்டன் போடவில்லை என்ற காரணத்திற்காகவும், ஓட்டுநர்களுக்கான சீருடை அணியவில்லை என்பதற்காகவும் அபராதம் வழங்கப்பட்ட சம்பவம் கூடுதல் களோபரத்தை ஏற்படுத்தியது.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

இந்நிலையில், இனி இதுபோன்று காரணங்களுக்காக பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் போலீஸாருக்கு அறிவுறுத்தும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலை இந்தி எழுத்துக்கள் அடங்கிய புகைப்படத்துடன் அந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதனை நீங்கள் கீழே காணலாம்...

அந்த பதிவின்படி, போக்குவரத்து விதிமீறல்களாக கருதப்பட்ட சீருடை அணியாமல் இருப்பது, பனியன் மற்றும் லுங்கியுடன் காட்சியளிப்பது, கூடுதல் மின் விளக்கு பொருத்துவது, காரை அழுக்காக வைத்திருப்பது (வின்ட் ஸ்கிரீனில் தூசி படிந்திருத்தல்), ஷூ அல்லாத காலணியை அணிவது உள்ளிட்டவற்றில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

மேலே நாம் பார்த்த விதிமீறல்கள் மோட்டார் வாகன சட்டத்தில் பல ஆண்டுகளாக பங்கு வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தான், செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் வலியுறுத்தியது. ஆனால், இதில் இருந்து தற்போது விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

'விதிமீறினாலும் அபராதம் விதிக்காதீர்கள்' போலீசுக்கு வந்த புதிய உத்தரவு!!!

அதேசமயம், இந்த விதிமீறலுக்கு அபராதமாக ரூ. 1,000 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதமானது முதல் முறை விதிமீறலில் ஈடுபடும்போது வழங்கப்படும். தொடர்ச்சியாக இரண்டாவது முறை இதே விதிமீறலில் ஈடுபட்டால், அவர்களுக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கவும் புதிய மோட்டார் வாகன சட்டம் கூறுகின்றது.

போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராதச் சட்டம் வந்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தியதால், நிதின் கட்காரி போன்றே, ஹரியானா போலீஸ் டிஜிபி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

ஹிரியானா மாநில போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதத்தை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஏனென்றால், அதன் உரிமையாளர் "இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ. 16 ஆயிரம்தான். ஆனால், போலீஸார் எனக்கு கொடுத்துள்ள அபராதமோ ரூ. 23,000" என வேதனை தெரிவித்திருந்தார்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய களோபரத்தை ஏற்படுத்தியநிலையில், மிக வேகமாகவும் வைரலாகியது. இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடாத வரை வாகன ஓட்டிகளை மடக்கி ஆய்வு செய்ய வேண்டாம் என ஹரியானா காவல்துறையினருக்கு, அம்மாநில போலீஸ் ஜெனரல் இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

இதுகுறித்து ஹிரியானா மாநிலத்தின் டிஜிபி கூறியதாவது, "ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், சிக்னலை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களை வாகன ஓட்டிகள் அரங்கேற்றம் செய்யாத வரை, அவர்களை மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டாம்" என்றார்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்குதான் ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணை குருகிராம் போலீஸார் வழங்கியிருந்தனர். அவ்வாறு, அவர் செய்த குற்றங்களாக போலீஸார் கூறியதை பின்வருமாறு பார்க்கலாம்...

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

பதிவு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்

காற்று மாசுபாட்டை மீறுதல் தலைக்கவசம் இல்லாதது, ஆகியவை அடங்கும்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

என பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக கூறி போலீஸார் இத்தகைய பெருமளவிலான அபராதத்தை வித்திருந்தனர். இச்சம்பவம், பெரும் வைரலானதை அடுத்து அம்மாநில போலீஸாருக்கு டிஜிபி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

ஹரியானா மாநில போலீஸார், புதிய உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதியின்படி இதுவரை 343 பேருக்கு செல்லாண்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ரூ. 52.32 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட வெறும் நான்கே நாட்களில் கிடைத்த தொகையின் விவரமாகும்.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

போக்குவரத்து தொடர்பான பல்வேறு குற்றங்களைத் தடுக்கும் விதமாக, கடுமையான தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இதில் மரணத்திற்கு ரூ .5 லட்சம் இழப்பீடு மற்றும் மோட்டார் வாகன விபத்தில் கடுமையான காயத்திற்குள்ளாவர்களுக்கு ரூ .2.5 லட்சம் வழங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்

இந்த புதிய திட்டம் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத ஓர் இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாநிலங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

இந்த சூழலில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்தது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

இத்தனைக்கும் 'ஆசியாவின் டெட்ராய்டு' என வர்ணிக்கப்படும் சென்னையை தன்னகத்தே கொண்டிருப்பது தமிழகம்தான். சென்னை நகரை சுற்றி, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் 'ஆசியாவின் டெட்ராய்டு' என்ற அடைமொழியை சென்னை பெற்றுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

இருந்தபோதும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான பெரிய அளவிலான அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த குறைகள் அனைத்தையும் தமிழக அரசு தற்போது போக்கியுள்ளது. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை இன்று (செப்டம்பர் 16) வெளியிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் சில முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

இதில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்படி வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

இதுதவிர தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், மற்றொரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அளிக்கப்படவுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்கள் மத்தியில், இந்த அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். குறிப்பாக பேருந்து போன்ற பொது போக்குவரத்து முறையை மின்சார மயமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சோதனை அடிப்படையில் எலெக்ட்ரிக் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2019, 13:52 [IST]
English summary
No Fine For Wearing Slippers While Riding. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+