அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

மத்திய அரசு பிறப்பிக்காத உத்தரவை கூறி, காவல் துறையினர் அபராதம் வசூலித்து வந்த நிலையில், குழப்பங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இருந்தாலும் பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. எனவே ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலைக்கு வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டுள்ளது.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

இது பொருளாதார சூழல்களை முன்வைத்து வழங்கப்பட்ட தளர்வுகள்தானே தவிர, கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. எனவே வெளியிடங்களுக்கு பயணம் செய்யும்போது முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். முக கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

எனினும் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிவதில் ஒரு சில குழப்பங்கள் உள்ளன. அதாவது காரில் தனியாக பயணிக்கும்போதும் முக கவசம் கட்டாயமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. காவல் துறையினரை பொறுத்தவரை, காரில் தனியாக பயணம் செய்தாலும் கட்டாயம் என கூறி வந்தனர். இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வந்தனர்.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

ஆனால் காரில் தனியாக செல்லும்போது முக கவசம் எதற்கு? என ஓட்டுனர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், டெல்லி காவல் துறையினர் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு, காரில் தனியாக சென்றாலும் முக கவசம் அணிவது கட்டாயம் என வெளிப்படையாகவே அறிவித்தனர். இதனை மீறியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காரில் பயணம் செய்யும் ஒருவர் பொது இடத்தில் இருப்பதாகவே கருதப்படுவார். எனவேதான் அபராதம் விதித்து வருகிறோம்'' என்றனர். ஆனால் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் அரசாங்கம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணிவது கட்டாயமா? என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், அப்படி எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. எனவே இனி காரில் தனியாக செல்லும்போது முக கவசம் அணியவில்லை என காவல் துறையினர் அபராதம் விதித்தால், சட்டப்பூர்வமாக அப்படி ஒரு உத்தரவு இல்லை என தைரியமாக கூறுங்கள்.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

காரில் தனியாக செல்லும்போது முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்க கூடாது என அரசு தெரிவித்துள்ளது. காரை ஓட்டிக்கொண்டு தனியாக பயணம் செய்யும் நபர் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அப்படில்லாம் எந்த உத்தரவும் இல்ல... ஃபைன் போட்டா கட்டிராதீங்க... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், ''சுகாதார துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், காரில் தனியாக பயணம் செய்யும் நபர் முக கவசம் அணிவது கட்டாயம் என்று எந்த உத்தரவையும் கொண்டிருக்கவில்லை'' என்றனர். எனவே காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டாலும், இனி அபராதம் விதிக்க முடியாது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No Fines For Not Wearing Face Mask While Driving Alone: Union Health Ministry - Details. Read in Tamil
Story first published: Friday, September 4, 2020, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X