கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலைகளில் மட்டும் நுழையவே முடியாது. அது ஏன்? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான் இந்த விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை பின்பற்றுவது கிடையாது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் உயிரிழப்பிற்கு ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதே காரணமாக உள்ளது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக போலீசாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

தமிழகத்தை பொறுத்தவரை ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பேரணி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் உள்பட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

இதுதவிர ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக போலீசார் அவ்வப்போது வித்தியாசமான சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இந்த வகையில் சேலம் மாநகர போலீசாரின் வித்தியாசமான நடவடிக்கை ஒன்று தற்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

கட்டாய ஹெல்மெட் விதி தொடர்பாக சேலம் மாநகரில் போலீசார் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் இந்த ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. இந்த சூழலில் சேலம் மாநகரின் ஒரு சில சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

சேலம் மாநகரை பொறுத்தவரை தமிழ் சங்க சாலை, சுந்தர் லாட்ஜ் சாலை போன்றவை முக்கியமான சாலைகளில் ஒன்றாக உள்ளன. இந்த சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்ல போலீசார் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளனர். மேலும் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வருவோரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஹெல்மெட் அணியாமல் வந்தால் இந்த சாலைகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். அப்போது ஹெல்மெட் அணிந்து பயணிப்பதன் அவசியத்தை அவர்களிடம் போலீசார் எடுத்துரைக்கின்றனர்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

சேலம் மாநகர போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை எனவும், விதிகளை மீறுவோர் மீதும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

அதன்பின் கட்டாய ஹெல்மெட் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என சேலம் மாநகர போலீசார் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் இந்த சாலையில் மட்டும் நுழையவே முடியாது... ஏன் தெரியுமா?

கட்டாய ஹெல்மெட் விதிகளை முறையாக அமல்படுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஹெல்மெட் அணிந்து பயணிக்கும்போது விபத்து நேரிட்டால், உயிரிழப்பை தடுக்க முடியும். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவரும் இதனை உணர வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No Helmet No Entry - New Initiative Of Salem Police. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X