Just In
- 10 hrs ago
மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- 13 hrs ago
3 இருக்கைகள் உடைய ஸ்டியரிங் வீல் இல்லா கார்... இந்த காரின் உட்பகுதியை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது!!
- 14 hrs ago
பஜாஜ் சேத்தக்கிற்கு சரியான போட்டி தயார்!! டிஏஒ 703 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
- 15 hrs ago
ஹோண்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!
Don't Miss!
- News
மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை...முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் - சத்யபிரதா சாகு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும்…
- Sports
ரஸல், பேட் கம்மின்ஸ் போராட்டம் தோல்வி.. இறுதிவரை பரபரப்பு.. சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி
- Finance
கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..!
- Movies
சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
500 ரூபாய் அபராதம் கேட்ட போலீஸ்... பணம் இல்லாததால் கணவர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்... ஆடிப்போன கர்நாடகா
போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதம் செலுத்த பணம் இல்லாத காரணத்தால், கணவர் முன்னிலையில் பெண் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தனது மாங்கல்யத்தை கழற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதத்தை செலுத்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால், அவர் தனது மாங்கல்யத்தை கழற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

காவல் துறையினருடனான வாக்குவாதம் கை மீறி சென்ற நிலையில், விரக்தியின் உச்சத்தில் அவர் இதனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பெயர் பாரதி விபூதி என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கட்டில் வாங்குவதற்காக தனது கணவருடன், அவர்களது மோட்டார்சைக்கிளில் நகர மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த தம்பதியினரிடம் 1,800 ரூபாய் மட்டுமே இருந்தது. இதில், 1,700 ரூபாய்க்கு அவர்கள் கட்டில் வாங்கினர். எஞ்சிய 100 ரூபாயை காலை உணவு சாப்பிடுவதற்கு செலவழித்து விட்டனர். இதன்பின் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது நகர பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி அவர்களிடம் காவல் துறையினர் கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் பணம் இல்லை எனவும், இருந்த பணம் செலவாகி விட்டதாகவும் காவல் துறையினரிடம் பாரதி விபூதி கூறியுள்ளார். அத்துடன் தங்களை அங்கிருந்து செல்வதற்கு அனுமதிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு காவல் துறையினர் ஒப்பு கொள்ளவில்லை என தெரிகிறது. எனவே காவல் துறையினருக்கும், பாரதி விபூதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலர் குவிய தொடங்கியுள்ளனர்.

இதன் இறுதியில் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற பாரதி விபூதி, தனது மாங்கல்யத்தை கழற்றி, காவல் துறை அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை விற்று போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராத்தை எடுத்து கொள்ளும்படி அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது காவல் துறை உயர் அதிகாரிகள் ஒரு சிலர் அந்த வழியாக சென்றுள்ளனர். சாலையோரமாக நடந்து கொண்டிருந்த இந்த பிரச்னையை அவர்கள் கவனித்துள்ளனர். இதன்பின் இந்த பிரச்னையில் உயரதிகாரிகள் தலையிட்டு, பாரதி விபூதியையும், அவரது கணவரையும் அங்கிருந்து செல்வதற்கு அனுமதி வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியாவில் காவல் துறையினர் விதித்த அபராதத்தால் விரக்தியடைந்து பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வது என்பது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இரு சக்கர வாகனத்தை வாகன ஓட்டிகள் அடித்து நொறுக்கியது, தீ வைத்து கொளுத்தியது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
Note: Images used are for representational purpose only.