Just In
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடக்கடவுளே... பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு குறைக்குமா? மத்திய அமைச்சர் சொன்ன பதில் இதுதான்...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அரசு குறைக்குமா? என்ற கேள்விக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு கலால் வரியை குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசலின் விலையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு வரியை குறைக்குமா? என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது, ''தற்போதைக்கு அப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை'' என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறுகையில், ''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருக்கும்போது நாம் விலைகளை அதிகரிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாக இருக்கும்போது, இங்கேயும் விலைகளை குறைக்க வேண்டும்.

இதுதான் சந்தை நடைமுறை. எண்ணெய் நிறுவனங்கள் இதைதான் பின்பற்றுகின்றன. நாங்கள் அவர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளோம்'' என்றார். மேலும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரிதும் நம்பியுள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடைசி 300 நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை 60 நாட்கள் உயர்ந்துள்ளது. அதே சமயம் பெட்ரோலின் விலை 7 நாட்களும், டீசலின் விலை 21 நாட்களும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''கிட்டத்தட்ட 250 நாட்களில் நாங்கள் விலைகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ இல்லை'' என்றார்.

ஆனால் தற்போதைக்கு கலால் வரி குறைக்கப்படாது என அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது வாகன ஓட்டிகளை கவலையடைய செய்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகள் காரணமாகதான் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

எனவே வரிகளை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும்பட்சத்தில் பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறையும். ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு பெரிதாக பலன் இல்லை.

எனவே வாகன ஓட்டிகள் தொடர்ந்து அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை நிரப்ப வேண்டியதாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.