அரசு அதிகாரிகளுக்கு இனி அரசாங்க கார்கள் கிடையாது.. செலவை குறைக்க முதல்வர் அதிரடி..
அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரசாங்க கார்களை ரத்து செய்து விடலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரசாங்க கார்களை ரத்து செய்து விடலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. செலவை குறைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், இந்த திட்டம் வெகு விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக, அரசாங்க கார்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் வருங்காலத்தில் அதனை ரத்து செய்து விட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவைகளை, அதிகாரிகளுக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநில அரசுதான், இந்த புதிய திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. ஏனெனில் கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும், அரசு அதிகாரிகள் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. இது அனைத்தும் மக்கள் வரிப்பணம்தான்.

எனவேதான் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கார்களை ரத்து செய்து விடலாமா? என கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. முன்னதாக அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க அரசு அதிகாரிகள் உதவ வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கார்கள், தற்போது அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இது போதாதென்று, பல்வேறு அரசு துறைகளின் சார்பில், ஒவ்வொரு மாதமும் சுமார் 500 கார்கள், வாடகைக்கு வேறு எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு காருக்கும் ஒரு மாதத்திற்கான வாடகை மட்டும் சுமார் 25,000 ரூபாய்.

இந்த கார்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது 80 கிலோ மீட்டர்கள் மட்டுமே இயக்கப்படும். கூடுதலாக இயக்கப்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 40 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். அரசு அதிகாரிகளின் கார்களுக்கே இவ்வளவு செலவிட்டால், மக்கள் நலத்திட்டங்களை எப்படி செயல்படுத்துவது?

எனவேதான் அரசு அதிகாரிகளுக்கு அரசாங்க கார்கள் வழங்குவதை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக ஓலா, உபேர் போன்ற டாக்ஸி சேவைகளை வழங்கலாமா? என கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலமாக வாகனங்களுக்கான செலவினம் பாதியாக குறையும் என அம்மாநில அரசு நம்புகிறது.

அதாவது ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகள் மூலம் வீட்டில் இருந்து அதிகாரிகள் பிக் அப் செய்து கொள்ளப்படுவார்கள். அதன்பின் அலுவலகம் முடிந்ததும், மீண்டும் வீட்டில் டிராப் செய்யப்பட்டு விடுவார்கள். இடையில் வேண்டுமானாலும், டாக்ஸியை பயன்படுத்தி கொள்ளலாம்.

எனினும் இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து மட்டுமே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த கேப் (cab) சர்வீஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்த ஆய்வில், பாதுகாப்பு, சௌகரியம், நேரம் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக இருக்கும். ஏனெனில் இந்த 3 அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றாலும், அதிகாரிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா? அவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா? என்பது சந்தேகமே.

முன்னதாக டெல்லி மாநிலத்தில், அரசு அதிகாரிகள் சிலர் அரசாங்க கார்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. அதாவது ஒரு சில அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க கார்களை பயன்படுத்தி வருவதாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

எனவே ஒரு அரசு அதிகாரி, ஒரு அரசாங்க காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என டெல்லி மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அத்துடன் அரசு அதிகாரிகளின் கார்கள் எங்கெங்கு செல்கிறது? என்பதை கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
{document1}


Click it and Unblock the Notifications
