டோல்கேட்ல இனி வண்டி நிறுத்த வேணாம்! தடை கம்பிய எல்லாம் எடுக்க போறாங்க!
இந்தியாவில் சுங்கசாவடிகளில் இனி வாகனங்களை நிறுத்தாமல் செல்லபுதிய தொழிற்நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தொழிற்நுட்பத்தை முதற்கட்டமாக 8 சுங்கசாவடிகளில் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றியாகும்பட்சதத்தில் மற்ற சுங்கசாவடிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்க கட்டணம் செலுத்த ஃபாஸ்ட் டேக் கார் டு நடைமுறையில் இருக்கிறது. இந்த கார்டை கொண்டு வந்ததன் நோக்கமே சுங்கசாவடிகளில் இந்த கார்டை பயன்படுத்தி மக்கள் விரைவாக கடந்து செல்ல வேண்டும் என்பது தான். ஆனால் இன்றும் சுங்கசாவடிகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த பிரச்சனையை சமாளிக்க 2 விதமான விஷயங்களை மத்திய அரசு கையில் எடுத்தது அதில் ஒன்று சாட்டிலைட் மூலம் வாகன நகர்வை கண்காணித்து அதற்கு ஏற்றார் போல சுங்க கட்டணம் விதிப்பது மற்றும் சுங்கசாவடிகளில் நம்பர்பிளேட்களை கண்காணிக்கும் கேமராக்களை பொருத்தி நம்பர் பிளேட்டில் உள்ள தகவல் மூலம் சுங்க கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்தது.
இதில் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கருவி சிறப்பாக வேலை செய்ததால் தற்போது மத்திய அரசு இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராக்கள் பெரும்பாலான சுங்கசாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் 8 சுங்கசாவடிகளில் வாகனம் நின்று செல்லும் தடையை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

இந்த சுங்கசாவடி வழியாக வாகனம் செல்லும் போது ஆர்ஃப்ஐடி வழியாக ஃபாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்தி சுங்ககட்டணத்தை கழிக்க முயற்சி செய்யும். முடிவில்லை என்றால் நம்பர் பிளேட்டை கண்காணிக்கும் கேமராவை வைத்து அந்த வாகனத்திற்கான சுங்க கட்டணத்தை வசூலிக்கும். இதற்காக சோதனை முயற்சியாக 8 சுங்கசாவடிககளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
இதில் தமிழகத்தில் வாலஜாபேட்டை - பூந்தமல்லி இடையே ஸ்ரீபெரும்புத்தூர் பகுதியில் உள்ள நெமிலி சுங்க சாவடியை தடையில்லாத சுங்கசாவடியாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் இந்த சுங்கசாவடியில் உள்ள தடைகள் அகற்றப்படும். இதை கடந்து செல்லும் வாகனங்கள் நிற்காமலேயே செல்ல முடியும். சுங்ககட்டணம் கேமராவில் பதிவாகும் தகவல்களை வைத்து கண்காணிக்க உதவியாக இருக்கும்.
ஒரு வேலை ஃபாஸ்ட்டேக் கார்டில் பணம் இல்லாமல் அந்த சுங்கசாவடியை கடந்து சென்றால் அடுத்த சுங்கசாவடியைகடக்க முடியாமல் கார்டு பிளாக்காகிவிடும். மீண்டும் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே சுங்கசாவடியை கடந்து செல்ல முடியும்.தொடர்ந்து ஒருவர் சுங்கசாவடியை கடந்து சென்று பணம் செலுத்தாமல் இருந்தால் அவருக்கு ஆன்லைன் மூலம் நோட்டீஸ் அனுப்பபடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க தக்கது தான் வெளிநாடுகளில் இந்த தொழிற்நுட்பம் நீண்ட ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியா போன்ற அதிக நெருக்கடி மிகுந்த நாடுகளில் இது நிச்சயம் தேவை!


Click it and Unblock the Notifications








