12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
விமானத்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கு தனி சீட்டு ஒதுக்கப்பட கூடாது என விமான சேவை நிறுவனங்களுக்கு டிஜிஏ புதிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் குழந்தைகள் விமான பயணத்தின் போது பாதிக்கப்படக்கூடும் அல்லது தொலைந்து போக கூட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
விமானங்களில் குடும்பத்துடன் பயணிக்கும் போது விமானத்திற்கு உள்ளே அமரும் சீட்டை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். விமான சேவை நிறுவனங்கள் பல முக்கியமான இடங்களில் உள்ள சீட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நாம் விரும்பும் சீட்களில் விமானங்களில் சென்று அமர முடியாது.

இந்நிலையில் குடும்பத்துடன் விமானங்களில் பயணிப்பவர்கள் குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து வருவார்கள். குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளையும் புக் செய்திருப்பார்கள். இப்படியாக அவர்கள் டிக்கெட்டுகளை புக் செய்த நிலையில் சில நேரம் பெற்றோர்களும், குழந்தைகளும் விமான பயணம் முழுவதும் தனித்தனியாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
விமான சேவை நிறுவனங்கள் பணத்திற்காக குறிப்பிட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்தது போக, மீதம் இருக்கும் சிட்டுகளை மட்டுமே இலவசமாக வழங்கும். இப்படியாக இலவச டிக்கெட்டுகளை வழங்கும்போது ஆங்காங்கே ஒரு ஒரு சீட்டுகள் இருந்தால் மூன்று பயணிகள் பயணம் செய்யும்போது அனைவரும் தனித்தனியாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இந்நிலையில் இந்த சூழ்நிலையை கண்காணித்த டிஜிசிஏ அமைப்பு தற்போது இந்தியாவில் செயல்படும் அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி குழந்தைகளுக்கு தனி சீட்டு வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெற்றோருடன் மட்டுமே குழந்தைகளை அமர வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதாவது விமானத்தில் பயணம் செய்யும் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாரும் தனி சீட்டில் அமர அனுமதிக்க கூடாது எனவும் அவர்களுக்கு விமான சேவை நிறுவனங்கள் தனியாக சீட்களை ஒதுக்க கூடாது எனவும் குறைந்தபட்ச ஒரு பெற்றோராவது அருகில் இருக்கும் படி சீட்டை ஒதுக்க வேண்டும் என புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதுவும் ஒரே பிஎன்ஆர் நம்பரில் டிக் புக் செய்யப்பட்ட டிக்கெட்டில் இருக்கும் ஒரு பெற்றோருடன் மட்டுமே குழந்தையை அமர வைக்க வேண்டும் என இந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுவனங்கள் குழந்தைகளுக்கான டிக்கெட் புக் செய்யப்பட்டால் அவர்கள் அருகில் பெற்றோருக்கும் கட்டாயம் ஒரு சீட் ஒதுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விமான சேவை நிறுவனங்கள் விமான பயணத்தின் போது குழந்தைகளை தனி சீட்டில் அமர செய்வதால் அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. சில குழந்தைகள் பயத்தில் அமர்ந்திருக்கிறார்கள். விமான பயணம் என்பதே சற்று குழந்தைகளுக்கு பயமுறுத்தும் விதமாக இருக்கும் என்பதால், இந்த நேரத்தில் பெற்றோர் அருகில் இருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.
இதை கருத்தில் கொண்ட டிஜிசிஏ அமைப்பு இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை உடனடியாக அமலுக்கும் கொண்டு வந்துள்ளது. இனி விமான சேவை நிறுவனங்கள் 12 வயது வரை உள்ள குழந்தைகளை நிச்சயம் பெற்றோருடன் மட்டுமே அமர வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் விமானத்தில் பயணிக்கும் போது குழந்தை தனியாக அமர வேண்டும் என்ற கவலை உங்களுக்கு தேவையில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான பயணத்தின் போது குழந்தைகளுக்கு தனி சீட் வழங்காமல் பெற்றோருடன் மட்டுமே அவர்களை அமர வைக்க வேண்டும் என்ற விதிமுறை நிச்சயம் வரவேற்கத்தக்கது. இது பல ஏர்லைன் நிறுவனங்களால் அந்த இடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் அவ்வப்போது நடைபெற்றாலும், இதற்கான தனி விதிறை தனியாக இல்லை. இதை தற்போது டிஜிசிஏ அமைப்பு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








