ரோட்ல இந்த குறியீட்டை பாத்தா உடனே இடத்தை காலி பண்ணீருங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா!

நாம் சாலைகளில் பயணம் செய்யும்போது, போக்குவரத்து விதிமுறைகளை விளக்கும் குறியீடுகளை உள்ளடக்கிய பல்வேறு போர்டுகளை பார்க்கலாம். ஆனால் நம்மில் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? என்பது முழுமையாக தெரிகிறது. பெரும்பாலானோருக்கு இது தொடர்பான அறிவு குறைவாக இருப்பது வேதனையான விஷயம்.

இந்தியாவில் நடைபெற்று வரும் சாலை விபத்துக்களுக்கு ஒரு வகையில் இதுவும் முக்கியமான காரணம்தான். எனவே நமது வாசகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பலருக்கும் அர்த்தம் தெரியாத ஒரு முக்கியமான குறியீடு பற்றிய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

No Stopping Road Sign

சாலைகளில் பயணம் செய்யும்போது, நீல நிற பின்னணியில், X வடிவிலான க்ராஸ் மார்க் உள்ள போர்டை நீங்கள் பார்த்திருக்கலாம். இதில் X வடிவிலான க்ராஸ் மார்க், சிகப்பு நிறத்தில் இருக்கும். இந்த போர்டு இருக்கும் பகுதிகளில் எக்காரணத்தை கொண்டும், வாகனங்களை நிறுத்தி விடாதீர்கள்.

'நோ ஸ்டாப்' என்பதுதான், இந்த போர்டுக்கான அர்த்தம். இந்த போர்டு உள்ள பகுதியில் ஒரு வினாடி கூட நீங்கள் வாகனத்தை நிறுத்த கூடாது. வாகனத்தை நீங்கள் தொடர்ந்து ஓட்டி கொண்டே செல்ல வேண்டும். வாகனங்கள் வேகமாகவும், அதே சமயம் பாதுகாப்பாகவும் செல்வதற்காகதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

National Highway

இந்த போர்டு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில், வாகனங்கள் அனைத்தும் வேகமாக பயணிக்கும். அங்கே நீங்கள் திடீரென்று வாகனத்தை நிறுத்தினால், அது பயங்கரமான விபத்திற்கு முக்கியமான காரணமாக அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் ஒரு வினாடி கூட வாகனத்தை நிறுத்த கூடாது என எச்சரிக்கும் வகையில், இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் அங்கே தனது வாகனத்தை நிறுத்தியிருந்தால், விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகதான், வாகனங்கள் வேகமாக பயணம் செய்யக்கூடிய பகுதிகளில், இந்த எச்சரிக்கை போர்டுகளை வைத்திருப்பார்கள்.

நீல நிற பின்னணியில், சிகப்பு நிறத்தில் X வடிவ க்ராஸ் மார்க் உள்ள போர்டுகளுக்கு என்ன அர்த்தம்? என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும் என நம்புகிறோம். எனவே இனிமேல் இந்த போர்டை பார்த்தால், எக்காரணத்தை கொண்டும் அங்கு வாகனத்தை நிறுத்தி விட வேண்டாம். தொடர்ந்து பயணித்து கொண்டே இருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைகளில் எச்சரிக்கை பலகைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளன? அதற்கான அர்த்தம் என்ன? என்பதை புரிந்து கொண்டாலே சாலை விபத்துக்களை நம்மால் ஓரளவு குறைத்து விட முடியும். ஆனால் அர்த்தம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதற்கு ஏற்ப செயல்படுவதும் அவசியம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 3, 2023, 17:00 [IST]
English summary
No stopping road sign all you need to know
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+