இனி ஒரு நயா பைசா கூட டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டாம்! யாரும் எதிர்பாக்காத நேரத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு!
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் (Expressways) பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்கு டோல்கேட் கட்டணங்கள் (Toll Fees) பெரும் தலைவலியாக இருக்கின்றன. முறையான அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் டோல்கேட்களில் கட்டண கொள்ளை நடைபெற்று வருவதாக வாகன உரிமையாளர்கள் பலரும் மிக நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே டோல்கேட்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அரசு இதற்கு இன்னும் செவி சாய்க்கவில்லை. எனவே டோல்கேட்கள் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் உள்ளன.
அத்துடன் டோல்கேட்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து கட்டண உயர்வும் அமலுக்கு கொண்டு வரப்பட்டு கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், டோல்கேட் கட்டண விவகாரத்தில், வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles - EVs) பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
இதற்கென எலெக்ட்ரிக் வாகன கொள்கை (Electric Vehicle Policy) அமலுக்கு கொண்டு வரப்பட்டு, அதன் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த வரிசையில் மஹாராஷ்டிரா மாநில அரசு தற்போது தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2025-ஐ அறிவித்துள்ளது.

இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கைக்கு, மஹாராஷ்டிரா மாநில அமைச்சரவை, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்கீழ், அடல் சேது (Atal Setu), மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே (Mumbai-Pune Expressway) மற்றும் சம்ருதி மஹாமார்க் (Samruddhi Mahamarg) ஆகிய சாலைகளில், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பஸ்கள் இனி டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
அதாவது இந்த 3 சாலைகளிலும், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பஸ்கள், இனி டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த 3 சாலைகளில் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பஸ்களுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மற்ற மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, 50 சதவீதம் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மற்ற மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இனி பாதி டோல்கேட் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு இன்னும் பல்வேறு சலுகைகளையும் மஹாராஷ்டிரா மாநில அரசு வழங்கியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அரசு தனது புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கைக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கை வரும் 2030ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹாராஷ்டிரா மாநில அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இது அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம். இது காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க பெரிதும் உதவி செய்யும் என்பதும் எங்களது கருத்து.
Note: Images Used Are For Representation Purposes Only


Click it and Unblock the Notifications








