ரூ27.5 லட்சத்திற்கு ஏலம் போன நம்பர் பிளேட்! அப்படி அது என்ன நம்பர் தெரியுமா?

நொய்டாவை சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டிற்காக ரூ27.5 லட்சம் செலவு செய்துள்ளது. இந்த நம்பர் பிளேட்டை அவர்கள் ஆன்லைன் ஏலம் மூலம் எடுத்துள்ளனர்.அப்படி என்ன நம்பர் பிளேட் அது? எதற்காக இதற்கு இவ்வளவு டிமாண்ட்?இவ்வளவு அதிக தொகை கொடுத்து நம்பர் பிளேட்டை வாங்கி எந்த காரில் பொருத்துகின்றனர்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நொய்டாவின் வாகனங்களுக்கு வழங்கப்படும் ஃபேன்ஸி நம்பர் பிளேட்கள் எல்லாம் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும். இதன் மூலம் இந்த நம்பரை யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்களுக்கு இந்த நம்பர் வழங்கப்படும். இப்படியாக சமீபத்தில் நடந்த ஒரு ஏலத்தில் குறிப்பிட்ட நம்பர் பிளேட் ரூ27.5 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. குறிப்பிட்ட ஆர்டிஓவில் அதிக தொகைக்கு ஏலம் போனது இந்த நம்பர் தான்.

Noida s Most Expensive Number Plates

நொய்டாவை சேர்ந்த ஏவியோரியான் என்ற நிறுவனம் தான் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு ஏலத்தில் UP16FH0001 என்ற எண்ணை எடுத்துள்ளது.இதற்கு ரூ27.5 லட்சம் செலுத்தியுள்ளது.இதை தனது புதிய மெர்சிடீஸ் பென்ஸ் காருக்கு வழங்கியுள்ளது. இது வரைநடந்ததிலேயே அதிகபட்ச ஏலம் இது தான் என அந்த ஆர்டிஓ அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் UP16FD0008 என்ற எண் ரூ11 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

பிரிமியம் நம்பர்களுக்க கடும் போட்டி இருக்கும் நிலையில் 001, 002, 003 போன்ற நம்பர்கள் ஏ கேட்டகிரியில் ஏலம் விடப்படுகிறது.இந்த நம்பர்கள் அதிக தொகைக்கு ஏலம்போகிறது. இதற்கு அதிக போட்டியும் இருக்கிறது தற்போது அதிக விலைக்கு போயுள்ள நம்பரும் அதிக தொகைக்கு ஏற ஏற மீண்டும் மீண்டும் ஏல தொகையை உயர்த்தியே அந்நிறுவனம் ஏலத்தை எடுத்துள்ளது.

Noida s Most Expensive Number Plates

இதற்கு முன்னர் இதே ஆர்டிஓவில் UP16EP0001 என்ற நம்பருக்கு ரூ32 லட்சம் வரை ஏலம் போனது ஆனால் ஏலத்தை எடுத்தவர் அதற்கான பணத்தை செலுத்த தவறியதால் அந்த நம்பர் ஒதுக்கீடு செய்யப்படவில்லை இதனால் இதை ஏலம் எடுத்த தொகையாக கருத முடியாது. ஆனால் தற்போது ரூ 27.5 லட்சத்திற்கு ஏலம் போயுள்ள நம்பருக்கு பணம் செலுத்தப்பட்டு வாகன பதிவெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. இதனால் இது தான் அதிக தொகை ஆகும்.

பொதுவாக ஏலத்திற்கு விடப்படும் ஃபேன்ஸி நம்பர்கள் பலவேறு கேட்டரிகளிளாக பிரிக்கப்படுகிறது முதல்லில் 0001,0002,0003 ஆகியவை முதல் கேட்டகிரியாகவும், 0010,0020,0030, ஆகிய சிரீஸ் நம்பர்கள் இரண்டாவது கேட்டகிரியாகவும், 0018,0027,0036 போன்ற சிரீஸில் வரும் நம்பர்கள் 3வது கேட்டகிரியாகவும், 0020,0030,0040 போன்ற நம்பர்கள் 4வது கேட்டகிரியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Noida s Most Expensive Number Plates

இந்த ஏலத்தில் பங்கேற்க ரூ33 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும். அதன் பிறகு ஆன்லைன் ஏலம் நடத்தப்படும். இந்த ஏலத்தில் எவ்வளவு பணத்திற்கு ஏலம் எடுக்கப்படுகிறதோ அதில் முன்பணத்தை கழித்து மீதியை செலுத்தி நம்பரை வாங்கிக்கொள்ளலாம். நம்பர் ஏலத்தில் எடுக்காதவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நம்பர் பிளேட் அதிக விலைக்கு ஏலம் போவது அடிக்கடி நடக்கும் விஷயம் தான்.இந்த வாகனத்தைத பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ரூ27.5 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது ஆச்சரியம் தான். இப்படியாக பேன்ஸி நம்பரை நபீங்கள் வாங்கினால் எந்த நம்பரை வாங்குவீர்கள்?

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2025, 10:45 [IST]
English summary
Noida most expensive number plates 0001 sold for 27 5 lakh
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X