உங்கள் குடும்பத்தில் இந்த நபர் வாகனம் ஓட்டினால் உங்களுக்கு ரூ25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்! ஏன் தெரியுமா?

அதிகரித்து வரும் குறைந்த வயதுடையவர்கள் வாகனம் ஓட்டும் சம்பவங்களை தடுக்க பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு நொய்டா காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கடந்தசெவ்வாய்க்கிழமை மாலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், மோட்டார் வாகனங்களை இயக்கும் சிறார்களால் ஏற்படும் சட்டவிரோதம் மற்றும் ஆபத்துகளை நொய்டா காவல்துறை எடுத்துக்காட்டுகிறது. இது குறித்த விரவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் எனவும். 25,000 வரையிலான அபராதம் விதிக்கவும், பாரதிய நியாய சந்ஹிதாவின் பிரிவு 125 இன் கீழ் சாத்தியமான சட்ட நடவடிக்கைகள் மற்றும் 12 மாதங்களுக்கு வாகனப் பதிவை ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Underage Driving Fine

மேலும், சட்டவிரோதமாக வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .நகர் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து தடுக்க போக்குவரத்துப் போலீஸாரின் கடுமையான சோதனைகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சட்டங்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான இது பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளது. சாலை பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோரின் பொறுப்பு முக்கியமானது என்பதை அதிகாரிகள் இதில் வலியுறுத்துகின்றனர். அங்கீகரிக்கப்படாத வாகன இயக்கத்தின் மூலம் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

எந்த சூழ்நிலையிலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட கூடாது எனவும் மற்றும் இது சட்டவிரோதமானது என்பதை காவல்துறையின் உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் போது ​​சாலை பாதுகாப்பை உறுதி செய்வதில் பெற்றோரின் முக்கிய பங்கை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

சிறார்களை வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதன் மூலம், பாதுகாப்பான சாலைகளைப் உருவாக்கவும், அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் பெற்றோர்கள் உதவலாம்.நாடு முழுவதும் சிறார்களை உள்ளடக்கிய பல குறிப்பிடத்தக்க விபத்துகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிப்பது குறித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகள் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பான சமூகத்திற்கான போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதையும் வகையில் செயல்ப்டடு வருகிறது.. நொய்டா காவல்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் வயது குறைந்த வாகனம் ஓட்டும் சம்பவங்களைக் குறைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் விபத்துகள் குறையும்.

இந்த கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம், அனைத்து சாலை பயனாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது தற்போது பெற்றோர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. நொய்டா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த சட்டம் அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் 18 வயதிற்குட்பட்ட லைசென்ஸ் இல்லாத சிறார்கள் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அதற்கு பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் சட்டம் ஏற்கனவே அமலில் இருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதே பால சிறுவர்கள் வாகனம் ஓட்டி வாகனம் விபத்தில் சிக்கி, விபத்தில் உயிர் பலி ஏற்பட்டால் சிறுவர்களின் பெற்றோர்கள் தான் சிறை செல்ல வேண்டியது இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் பொது சாலைகளில் உரிய உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை நிச்சயம் தடுக்க வேண்டும். அவர்கள் வாகனம் ஒட்ட பயிற்சி பெறுகிறார்கள ்என்றாலும் தனியார் இடத்தில் பாதுகாப்புடன் பயிற்சி வழங்க வேண்டும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2024, 19:02 [IST]
English summary
Noida Police announces strict penalties for underage driving, including fines and license restrictions, to enhance road safety and ensure parental compliance.
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+