உங்க காசுக்கு வச்சுட்டாங்க வேட்டு! லேன் மாறினால் ரூ1500 அபராதம் விதிக்க போறாங்க!
சாலையில் போக்குவரத்தை சுமூகமாக்கி நெரிசலைக் குறைப்பதற்கான முயற்சியில், நொய்டா போக்குவரத்து காவல்துறை மூன்று முக்கிய சாலைகளில் லேன் டிரைவிங் விதிகளை அமல்படுத்த உள்ளது. இந்த முயற்சி அடிக்கடி ஏற்படும் பம்பர்-டு-பம்பர் போக்குவரத்தை குறைப்பதையும், நெரிசலின் போது சாஃப்டான பயணத்தை உறுதி செய்வதையும் இது வழிமுறைப்படுத்துகிறது. இந்த புதிய வழிமுறைகளை மீறுபவர்கள் ரூ. 1,500 அபராதம் விதிக்கப்படுவார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
அடிக்கடி லேன் மாறுவது போக்குவரத்து விதிமுறை மீறல் ஆகும். இந்த விதிமுறை மீறல் தினசரி போக்குவரத்து நெரிசல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது மற்றும் விபத்து ஆபத்துகளை அதிகரிக்கும். இதனால் திட்டமிடப்படாத லேன் மாற்றத்திற்கு எதிரான கடுமையான அணுகுமுறையை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக தற்போது அபராதம் விதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த அமலாக்கத்திற்காக இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் அதிக போக்குவரத்துக்கு நெருக்கடிக்கு பெயர் பெற்ற முக்கிய இடங்கள் அடங்கும். அவற்றில் அமிதி பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள சர்க்கா ரவுண்டானா, கார்டன்ஸ் கேலரியா மால் மற்றும் பிலிம் சிட்டிக்கு இடையிலான பகுதி மற்றும் தலித் பிரேர்ணா ஸ்தலத்திற்கு அருகிலுள்ள பிளையிங் ரெஸ்டாரண்ட் இடத்திற்கு அருகிலுள்ள பகுதி ஆகியவை அடங்கும்.
இந்த இடங்கள் வாகனங்கள் அதிகமாக திட்டமிடப்படாமல் லேன் மாற்றும் இடமாகக் கருதப்படுகின்றன. இதனால் இடையூறுகள் மற்றும் நெரிசல் ஏற்படுகிறது. லேன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம், அதிகாரிகள் குறிப்பாக போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும் நேரங்களில், போக்குவரத்து மிகவும் ஒழுங்கான ஓட்டத்தை எளிதாக்க விரும்புகிறார்கள்.

திடீர் லேன் மாற்றங்களால் ஏற்படும் சவால்களை சமாளிக்க இதை செய்துள்ளனர், இப்படியாக லேன் மாறுவதால் பெரும்பாலும் பின்பக்க மோதல்கள் மற்றும் பக்கவாட்டு மோதல்களைத் தூண்டுகிறது, நொய்டா போக்குவரத்து காவல்துறை கட்டுப்படுத்தப்பட்ட லேன் மாற்ற மண்டலங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. போக்குவரத்து துணை ஆணையர் (போக்குவரத்து) லகன் சிங் யாதவ், இந்த மண்டலங்கள் கண்டறியப்பட்ட நெரிசல் இடங்களுக்கு சுமார் 500 மீட்டர் முன்பே அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் ஓட்டுநர்கள் ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் லேன் மாற்ற முடியும். இதனால் திடீர் பிரேக்கிங் மற்றும் அதன் விளைவாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மேலும், புதிய லேன் ஒழுக்க விதிகளுக்கு மக்கள் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த, மீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்க கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்கள் விரைவுப் பாதையில் இத்தகைய மீறல்களை கண்காணிக்கும் திறன் இல்லாமல் இருக்கிறது.

அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் அமலாக்க திறன்களை மேம்படுத்த இந்த அமைப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் ஓட்டுநர்கள் குறிப்பிட்ட லேன் மாற்ற பகுதிகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துகிறார்கள். மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த விதி முதலில் அடையாளம் காணப்பட்ட சாலைகளைத் தாண்டியும் பொருந்தும். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைப்பதில் இந்த விதிமுறை அமலாக்கம் வெற்றிகரமாக இருந்தால், மற்ற சாலைகளிலும் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி எஸ். வேல்முருகன் கூறும்போது வேகமாகச் செல்லும் வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றிற்காக வெவ்வேறு லேன்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் விரைவுப் சாலைகளில் லேன் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த முயற்சி நொய்டாவில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்கானசிறந்த யுக்தியாக பிரதிபலிக்கிறது. அதிக போக்குவரத்துக்கு பெயர் பெற்ற முக்கிய இடங்களை இலக்காகக் கொண்டு தந்திரோபாய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், நொய்டா போக்குவரத்து காவல்துறை அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஓட்டுநர் சூழலை உருவாக்க முயற்சிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து : நொய்டா போக்குவரத்து காவல்துறை லேன் மாறாமல் ஓட்டும் விதிகளை அறிமுகப்படுத்துவது நகரத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான நல்ல நடவடிக்கையாகும். ஓட்டுநர்கள் இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப டிரைவிங் முறையை மாற்றியமைக்கும் போது, போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது மற்றும் விபத்து ஏற்படும் ஆபத்து கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் மிகவும் ஒழுங்கான மற்றும் வரைவான போக்குவரத்து ஏற்படும்.


Click it and Unblock the Notifications









