இந்தியாவின் எதிர்காலம் இப்படி சீரழிகிறதே!! விலையுயர்ந்த கார்களில் இளைஞர்கள் செய்த செயல் - வைரல் வீடியோ
நொய்டாவில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவிற்காக சுரங்கப்பாதையில் போக்குவரத்தை இடையில் நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், இதற்காக அந்த இளைஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் குறித்த தகவல்களையும் இனி பார்க்கலாம்.
இண்டர்நெட் மோகம் இன்றைய கால தலைமுறையினர் இடையே தலை விரித்தாடுகிறது. சிறு வயது சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் என மற்றவர்களின் கைகளில் செல்போன் இல்லாமல் பார்ப்பது அபூர்வமாக மாறிவிட்டது. இதனாலேயே புதியது புதியதான மொபைல் செயலிகள் அவ்வப்போது பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட த்ரெட் மொபைல் செயலியின் அறிமுகத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

டுவிட்டரின் நகல் என கூறப்படும் த்ரெட் ஆனது இன்ஸ்டாகிராமின் கீழ் செயல்பட உள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் கணக்கிலேயே த்ரெட் செயலியில் கணக்கை உருவாக்கி கொள்ளலாம். இவ்வாறு, இன்ஸ்டாகிராம் செயலி நாளுக்கு நாள் வளர்ச்சியை கண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு கூட, ரீல் என்ற பெயரில் டிக்டாக் போன்றதான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வசதி கொண்டுவரப்பட்டது.
ரீல் அம்சம் இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்ட புதியதிலும், இது டிக்டாக்கை போன்று உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வளவு ஏன், இந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கை கொண்ட மெட்டா குழுமத்தின் சிஇஓ மார்க் ஸுக்கெர்பெர்க் அபராதம் செலுத்தி இருந்தார். ஆனால் இன்று இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோ அபரிதனமானது.

குறிப்பாக, டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே, உத்திர பிரதேச மாநிலம், நொய்டாவில் இளைஞர்கள் சிலர் தங்களது கார்களை சுரங்கப்பாதை போக்குவரத்தை பாதியில் நிறுத்தி இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவை காட்சிப்படுத்தி உள்ளனர்.
ஆனால் அந்த இளைஞர்களுக்கு இந்த மகிழ்ச்சி நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. ஏனெனில் இளைஞர்கள் சிலர் சுரங்கப்பாதைக்குள் இவ்வாறு செய்வதை வேறொரு நபர் தனது மொபைலில் காட்சிப்படுத்தி உத்திர பிரதேச மாநில போலீஸ் மற்றும் நொய்டா போலீஸாரை குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட, போலீஸார் அந்த இளைஞர்களுக்கு சுமார் ரூ.12,500ஐ அபராதமாக விதித்துள்ளனர்.

இதுகுறித்து நொய்டா போலீஸார் தங்களது டுவிட்டர் பக்கத்தில், "மேற்கண்ட புகாரை அறிந்து, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட வாகனங்களின் மீது, விதிகளின்படி மின் செல்லான் (அபராதம் ரூ.12,500) விதிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான குற்ற செயல்களை கண்டால் பொதுமக்கள் போலீசாரை தொடர்புக் கொள்ள அவசர உதவி எண்ணும் அந்த டுவிட்டர் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா கார்களில் சுரங்கப்பாதையில் போக்குவரத்தை இடையில் நிறுத்தியுள்ளனர். கார்களின் ஹெட்லைட்களின் ஒளியிலும், ஏற்கனவே பொருத்தப்பட்டு இருந்த விளக்கு வெளிச்சத்திலும் சுரங்கப்பாதையின் உட்புறம் கண்ணை கவரக்கூடிய ஓவியங்களுடன் இருந்ததினால், இந்த இடத்தை ரீல் வீடியோவை காட்சிப்படுத்துவதற்காக இந்த இளைஞர்கள் தேர்வு செய்துள்ளனர்.
@uptrafficpolice - कृपया सूचनार्थ एवं आवश्यक कार्यवाही हेतु। @noidatraffic
— UP POLICE (@Uppolice) July 7, 2023
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இண்டர்நெட் மோகம் இளம் தலைமுறையினர் பலரை இவ்வாறு தவறான செயல்களை செய்ய வைக்கிறது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், இவ்வாறு நடந்துக் கொள்வது தவறு என்பதே பலருக்கு தெரிவதில்லை. உங்களால் பலரது பயணம் தடைப்படலாம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசரகால ஊர்திகளின் சேவை தாமதமாகலாம்.


Click it and Unblock the Notifications









