அந்த படம் மட்டும் வரட்டும்! மொத்த தமிழ்நாடும் இவங்க அழகுல மயங்க போகுது! சொகுசு கார்ல தேவதை மாரி வந்தது அவங்களா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த சொகுசு கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes Benz CLA). ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரின் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் இந்த காரை இன்னமும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், பிரபல நடிகையான நோரா ஃபதேஹி (Nora Fatehi) முக்கியமானவர் ஆவார். கனடாவில் பிறந்தவரான இவர், தற்போது இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நோரா ஃபதேஹி தலைகாட்டியுள்ளார்.

Nora Fatehi

பாகுபதி தி பிகினிங் மற்றும் தோழா ஆகிய திரைப்படங்களில் தலா ஒரு பாடலில் தோன்றியதன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு சற்று பரிட்சயமானவராகவே நோரா ஃபதேஹி உள்ளார். இதை தொடர்ந்து காஞ்சனா 4 திரைப்படத்தில் நடிக்க நோரா ஃபதேஹி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, தமிழ் திரையுலகிலும் நோரா ஃபதேஹி ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக நோரா ஃபதேஹியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், நாங்கள் மேலே குறிப்பிட்ட மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரில் இருந்து, நோரா ஃபதேஹி இறங்கி நடந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

Nora Fatehi Spotted In Mercedes Benz CLA

இந்த காரை நோரா ஃபதேஹி பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் பல முறை அவரை இந்த காருடன் பார்க்க முடிந்துள்ளது. குறிப்பாக திரைப்படங்களின் ஷூட்டிங்கிற்கு செல்லும் சமயங்களில் எல்லாம், நோரா ஃபதேஹி இந்த மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரைதான் பயன்படுத்தி வருகிறார்.

ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை. கடைசியாக விற்பனையில் இருந்த சமயத்தில் 31.72 லட்ச ரூபாய் முதல் 77.69 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-Showroom Price) இந்த கார் விற்பனை செய்யப்பட்டது.

இந்த காருக்கு பதிலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் (Mercedes Benz A-class Limousine) கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் காரின் ஆரம்ப விலை 46.05 லட்ச ரூபாயாக உள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த செய்தியில் நாம் பேசி கொண்டுள்ள நோரா ஃபதேஹி கார் காதலர் ஆவார். ஏனெனில் அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ மட்டுமல்லாது, இன்னும் நிறைய கார்கள் உள்ளன. இதில், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520டி (BMW 5 Series 520d) மிகவும் முக்கியமானது ஆகும்.

இந்த விலை உயர்ந்த கார்களுக்கு மத்தியில், மிகவும் எளிமையான ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ (Volkswagen Polo GT TSI) கார் ஒன்றையும், நோரா ஃபதேஹி வைத்துள்ளார். ஆனால் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ காரும் இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு சில நடிகைகள் சொகுசு கார்களில் பயணம் செய்வார்கள். ஆனால் காரை ஓட்டுவதற்கு தனியாக டிரைவரை பணியில் வைத்து கொள்வார்கள். ஆனால் நோரா ஃபதேஹியோ சொகுசு கார்களை ஓட்டுவதிலும் திறமை மிக்கவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 25, 2025, 23:23 [IST]
English summary
Nora fatehi spotted in mercedes benz cla viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+