புதிய ஏவுகணையை சோதித்து உலக நாட்டாமையின் பொட்டில் அறைந்த குழந்தைசாமி!

By Saravana

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து உலக நாட்டாமையாக விளங்கும் அமெரிக்காவை பொட்டில் அறைந்திருக்கிறது வடகொரியா.

தனது எதிரிகளான தென்கொரிய தலைநகர் சியோலையும், அமெரிக்காவையும் நினைத்த மாத்திரத்தில் தாக்குவதற்கு இந்த ஏவுகணையை பயன்படுத்தும் வல்லமையும், வாய்ப்பையும் தற்போது பெற்றிருப்பதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நீர்மூழ்கியிலிருந்து...

நீர்மூழ்கியிலிருந்து...

ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்றிலிருந்து இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது வடகொரியா.

வெற்றி, வெற்றி...

வெற்றி, வெற்றி...

"இந்த ஏவுகணையை சோதித்திருப்பது கண்களை அகல விரிய செய்யும் அளவுக்கான மிகப்பெரிய வெற்றி. தென்கொரிய தலைநகர் சியோல் அல்லது அமெரிக்கா என எந்தவொரு பகுதியையும் தாக்குவதற்கு தேவைப்படும்போது பயன்படுத்த முடியும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் தெரிவித்துள்ளார்.

பயண தூரம்

பயண தூரம்

இந்த புதிய ஏவுகணையை 30 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது என்றும் சில நொடிகளில், இலக்கு தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீர்மூழ்கியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறைந்தது 300 கிமீ தூரம் பயணித்தால் மட்டுமே வெற்றிகரமான சோதனையாக கருதப்படுகிறது.

 எதிரிகளுக்கு ஆபத்து

எதிரிகளுக்கு ஆபத்து

நீர்மூழ்கியிலிருந்து ஏவுகணைகளை ஏவும் தொழில்நுட்பத்தில் வடகொரியா பெற்றிருக்கும் வல்லமை தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எதிரிநாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. எதிரிகளின் கண்களில் மண்ணை தூவி இந்த ஏவுகணையை செலுத்தும் வாய்ப்பு உள்ளதே அவர்களது கலக்கத்திற்கு காரணம்.

நேரில் பார்த்த அதிபர்

நேரில் பார்த்த அதிபர்

இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்து பார்க்கும் நிகழ்வை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பைனாகுலர் மூலமாக தளத்தின் அருகிலிருந்து நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஏவுகணை அனைத்து தொழில்நுட்பங்ப அம்சங்களிலும் வெற்றி பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத சோதனை

அணு ஆயுத சோதனை

இந்த ஏவுகணையில் அணு ஆயுதத்தை வைத்து தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு நாட்டு ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன.

ஐ.நா.சபை கண்டனம்

ஐ.நா.சபை கண்டனம்

வடகொரியா புதிய ஏவுகணையை நீர்மூழ்கியிலிருந்து சோதனை செய்திருப்பது சர்வதேச ஆயுத ஒப்பந்தங்களை மீறிய செயல் என்று, இந்த ஏவுகணை சோதனைக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

 பாலிஸ்டிக் ஏவுகணை

பாலிஸ்டிக் ஏவுகணை

பாலிஸ்டிக் ஏவுகணைகள் நீண்ட தூர இலக்கை சென்று தாக்கும் திறன் கொண்டவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமையுடையது.

இலக்கு

இலக்கு

முன்கூட்டியே திட்டமிட்ட பயணப்பாதையில் அரை வட்ட வடிவில் பயணித்து இலக்கை தாக்கும். ஏவிய பின்னர் இதன் பயணப்பாதையை மாற்ற இயலாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனாலும் கவலைப்படாத வடகொரியா!

நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனாலும் கவலைப்படாத வடகொரியா!

Source: Daily Mail

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
Story first published: Tuesday, April 26, 2016, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X