வடகொரியான்னா கெத்துன்னு நினைச்சுட்டு இருந்தாங்க! ஆனா இந்த சம்பவத்தை பார்த்து உலகமே சிரிக்குது!

இஸ்ரோவிற்கு போட்டியாக வடகொரியா விண்ணில் ஏவ முயன்ற ராக்கெட் ஒன்று கடைசியாக தீபாவளி ராக்கெட் போல் ஏவிய அடுத்த சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறிய சம்பவம் தற்போது நடந்துள்ளது. இது உலகம் முழுவதும் மிகப்பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோ விண்வெளியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. நிலவிற்கு சந்திரயான் 3 விண்கலத்தை எடுத்துச் சென்று தரை இயக்கியது. முதல் தற்போது வரை ஏகப்பட்ட சாதனைகளை அடுக்கிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த விண்வெளி சாதனையை பார்த்து பொறாமைப்படும். பல்வேறு நாடுகள் தாங்களும் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.

north korea rocket launch

இப்படியாக இஸ்ரோவுக்கு போட்டியாக வடகொரியா நாடும் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்நாடு செய்யும் பல முயற்சிகள் தோல்விகளையே சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு வடகொரிய அரசு விண்ணில் ஏவ முயன்ற இரண்டு ராக்கெட்டுகள் வெடித்து சிதறின.

அதன் பிறகு ஒரு வெற்றிகரமான ஏவுதலுக்கு பிறகு வடகொரிய அரசு கண்காணிப்பு சேட்டிலைட்டை விண்வெளியில் நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது கண்காணிப்பு சேட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்புவதற்காக வடகொரிய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து இன்று அதற்கான ஏவுதலை திட்டமிட்டு இருந்தது.

north korea rocket launch

ஆனால் இந்த ஏவுதல் தோல்வியில் முடியும் என உலகில் உள்ள பல்வேறு விண்வெளி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். முக்கியமாக ஜப்பான் அரசு இதற்கு எதிர்ப்பு கூட தெரிவித்து வந்தது. வடகொரியா விண்வெளி ஆய்வை மிக மோசமாக கையாண்டு வருவதாகவும் விண்வெளிக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதாகவும் கண்டனங்களை கூட கூறியிருந்தது.

இதையெல்லாம் மீறி வடகொரிய அரசு இன்று திட்டமிட்டபடி ஏவுதலை நடத்தியது. இதில் ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்ட அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே நடுவானில் இந்த ராக்கெட் வெடித்து சிதறியது. ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் இன்ஜினை சரியாக செயல்படாமல் இந்த ராக்கெட் வெடிப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது.

இந்த ராக்கெட்டில் வடகொரிய அரசு அந்நாட்டின் ராணுவ பயன்பாட்டிற்கான உளவு பார்க்கும் சேட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்ப முயற்சி செய்தது. ஆனால் இந்த ராக்கெட் தீபாவளி ராக்கெட் போல கிளம்பிய அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறி வான வேடிக்கை காட்டியது. தென்கொரியா அரசும் வடகொரியாவின் இந்த ஏவுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

தென்கொரிய விண்வெளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தற்போது வடகொரிய அரசு ஏவி ராக்கெட் ஏவிய அடுத்த ஒரு சில நொடிகளிலேயே ராக்கெட்டில் உள்ள பல்வேறு உதிரி பாகங்கள் கழண்டு கடலில் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள். அந்த ராக்கெட்டின் கட்டமைப்பை மிக மோசமாக இருந்ததாகவும், அதன் காரணமாக தான் இது வெடித்து சிதறியுள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ராக்கெட் ஏவுதலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஐநா சபையில் உலக நாடுகள் மத்தியில் ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்வெளியை நாசமாக்காத வகையில் பல்வேறு சோதனைகளை பூமியிலேயே செய்து அதன் பிறகு தான் ராக்கெட்டை விண்ணிற்கு ஏவ வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால் வடகொரிய அரசு அதையும் மீறி விண்வெளியை சேதம் செய்யும் வகையில் ராக்கெட் ஏவுதலை நடத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வடகொரிய நாடு என்பது உலகில் மற்ற நாடுகளுடன் ஒத்துப் போகாமல் தனித்துவமாக இயங்கும் நாடாக இருக்கிறது. ஆனால் இந்த நாட்டில் போதிய அளவு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ராக்கெட் ஏவுவதற்கான விஞ்ஞானிகள் இல்லாததால் மோசமான விளைவை ஏற்படுத்தி வருகிறது. மற்ற விஷயங்களைப் போல தற்போது விண்வெளி விஷயங்களிலும் வடகொரிய அரசு தன் விளையாட்டை ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2024, 10:54 [IST]
English summary
North korea rocket launch satellite explosion in mid flight
மேலும்... #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+