உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வேயில் அமைகிறது!

By Saravana Rajan

கடலுக்கடியில் உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை நார்வே நாட்டில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டதால், இந்த திட்டம் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உலகின் புதிய செயற்கை அதிசயமாக அமையப்போகும் இந்த புதிய மிதக்கும் சுரங்கப்பாதை குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

மெகா திட்டம்

மெகா திட்டம்

நார்வே நாட்டின் இ39 நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்டியன்சான்ட் மற்றும் டிரோன்டீம் என்ற இடங்களுக்கு இடையில் இரு நிலத்திட்டுகளுக்கு இடையே குறுகிய கடல் பகுதியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

பயண நேரம்

பயண நேரம்

இந்த மிதக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், கிறிஸ்டியன்சான்ட் மற்றும் டிரோன்டீம் இடையிலான 21 மணி நேரமாக இருக்கும் பயண நேரம், பாதியாக குறையுமாம்.

சவால்

சவால்

தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் நிலத்திட்டுக்களுக்கு இடையிலான நீர்வழித்தடம் அதிக ஆழமிக்கதாக உள்ளது. அதில், பாலம் அமைப்பது மிக சவாலான காரியம் என்பதுடன், அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் மூலமாக சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும்.

மிதக்கும் பாலம்

மிதக்கும் பாலம்

ஆனால், தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் மிதக்கும் பாலம் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகள் இல்லாமல் செய்ய முடியும். 4,000 அடி நீளமுடைய ராட்சத கான்கிரீட் குழாய்களை நீருக்கடியில் அமைத்து, அதனை பலூன் போன்ற மிதவைகளில் இணைத்து தொங்கவிடப்பட உள்ளது.

 ஸ்திரத்தன்மை...

ஸ்திரத்தன்மை...

கடல் அலைகளின் ஆவேசம், நீரோட்டம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற அனைத்து நிலைகளிலும் இந்த சுரங்கப்பாதை பாதிக்கப்படாத வகையில், சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

இருவழித்தடம்

இருவழித்தடம்

இரண்டு ராட்சத கான்கிரீட் குழாய்களுடன் இந்த சுரங்கப்பாதை நீளும், ஒவ்வொரு சுரங்கப்பாதை குழாயிலும் இரண்டு வழித்தடங்கள் இருக்கும். ஒன்று போக்குவரத்திற்கும், ஒன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்படும்.

கப்பல் போக்குவரத்து

கப்பல் போக்குவரத்து

இந்த சுரங்கப்பாதை நீருக்கடியில் 65 அடி முதல் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனால், இந்த பகுதியில் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் எந்தவொரு சிக்கலும் இருக்காது.

முதல் கட்டம்

முதல் கட்டம்

முதல் கட்டமாக ஒப்பேடல் மற்றும் லாவிக் என்ற இரண்டு நிலப்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது இந்த இரு கிராமங்களுக்கு இடையில் 20 நிமிடத்தில் படகு மூலமாக கடக்கலாம். ஆனால், நேரடி சாலை இணைப்பு இல்லை. இதைத்தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதை அடுத்தடுத்த நிலத்திட்டுகளும் விரிவுப்படுத்தப்படும்.

திட்ட மதிப்பீடு

திட்ட மதிப்பீடு

இந்த மிதக்கும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு 19 பில்லியன் டாலர் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது 25 மில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

திட்ட காலம்

திட்ட காலம்

இந்த பாலத்தை அமைப்பதற்காக கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அது முடிந்தவுடன் 7 முதல் 9 ஆண்டுகளில் மிதக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்படுமாம். மேலும், 2035ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை: சுவிட்சர்லாந்தில் திறக்கப்படுகிறது!

உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை: சுவிட்சர்லாந்தில் திறக்கப்படுகிறது!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Norway to build world’s first floating underwater traffic tunnels.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X