இந்த வேகத்தில விமானம் ஓட்டுனா ஒருநாள்ல உலகத்தையே மூணு தடவ சுத்தி வந்திரலாம்; ஒரு விமானத்தின் சாதனை!
நியூயார்க் டூ லண்டனிற்கு 5 மணி 13 நிமிடங்களில் பறந்து வேகத்தில் சாதனை படைத்த நார்வே விமானம்.
நார்வே நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்கில் இருந்து இங்கிலாந்து தலைநகரான லண்டனுக்கு வெறும் 5 மணி 13 நிமிடங்களில் சென்றடைந்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

நார்வேஜியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்' என்ற விமானம் நியூயார்க்கில் இருந்து, லண்டனை நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் குறிப்பட்ட இரு நகரங்களுக்கான தூரத்தில் பறந்து, சுமார் 6 மணி 16 நிமிடங்களில் லண்டனை சென்றடைவது தான் வழக்கம். இதுவரை இப்படித்தான் இருந்து வந்தது.

ஆனால் குறிப்பிட்ட இந்த நேரத்தை விட 53 நிமிடத்திற்கு முன்னதாக அதாவது சரியாக 5 மணி 13 நிமிடங்களில் லண்டனை சென்றடைந்துள்ளது.
Trending On DriveSpark Tamil:

இதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ஏர்வேஸிற்கு சொந்தமான விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி 16 நிமிடத்தில் சென்றடைந்தது தான் அதிவேகமான சாதனையாக இருந்து வந்தது.
Recommended Video


அதை முறியடிக்கும் வகையில் ‘போயிங் 787-9 டிரீம் லைனர்' விமானம், முந்தைய சாதனையை விட மூன்று நிமிடங்களுக்கு முன்னதாக லண்டனை சென்றடைந்தது.

நியூயார்க்கிலிருந்து அந்த விமானம் மூலம் லண்டன் நகரை வந்தடைந்த பயணிகள் இந்த புதிய சாதனையை கேள்விப்பட்டவுடன், ஒருவர் ஒருவரை கட்டி தழுவி வாழ்த்துக்களை தெரிவித்து ஆராவாரம் செய்துகொண்டனர்.

மேலும் வான் போக்குவரத்தில் புதிய சாதனையாக அமைந்துள்ள இந்த பயணத்தை பெருமிதமாக கருதுவதாக நார்வேயன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஹரால்டு வேன்டேம் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சாதனைக்கு காரணமாக இருந்த ‘போயிங் 787-9 டிரீம் லைனர்' விமானி கூறும் போது, சாதனையை எதிர்பார்த்து விமானத்தை செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
Trending On DriveSpark Tamil:

நியூயார்க்கில் இருந்து புறப்பட்ட போது, வானின் காலநிலை சாதகமாக அமைந்துள்ளதாலே வழக்கமான காலவரையை விட 53 நிமிடங்கள் முன்னதாக லண்டனிற்கு சென்று சேர்ந்ததாக அவர் கூறினார்.

ஒருவேளை சாதனையை எதிர்பார்த்து விமானத்தை மேலெழுப்பி இருந்தால், அதிவேகமாக விமானத்தை ஓட்டி, 5 மணி நேரத்தில் லண்டனுக்கு சென்றடைந்திருக்க முடியும் என்றும் அந்த விமானி கூறினார்.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








