அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

கார், ஜீப் மற்றும் வேன் ஆகியவற்றிற்கான ஃபாஸ்டாக், அமேசான் ஆன்லைனில் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், அதன் உற்பத்திப் பொருட்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க, பெரும்பாலும் லாரி, சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களையேப் பயன்படுத்தி வருகின்றன. இதனால்தான், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயரும்போது, உணவு மற்றும் இதர பொருட்களின் விலையும் கூடவே உயர்ந்து விடுகின்றது.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இவ்வாறு, உள்நாட்டு சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்கினை வகிக்கும் லாரிகள், ஒவ்வொரு முறையையும் சுங்கச் சாவடியைக் கடந்துச் செல்லும்போது, சில மணி நேரங்கள் நின்று பணத்தைச் செலுத்திவிட்டுச் செல்லக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இதற்கு, சில சமயங்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதேபோன்று, ஒரே நேரத்தில் அதிகமான லாரிகள் சூழ்ந்துவிடுவதாலும், சுங்கச்சாவடியைச் சுற்றியிருக்கும் பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றது. ஆகையால், இதற்கு தீர்வு காணும் விதமாக, மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'ஃபாஸ்டாக்' எனப்படும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இத்திட்டத்தமானது, டோல்களில் நிற்காமலே பணத்தைச் செலுத்த உதவும். அவ்வாறு, காரின் வின்ட் ஷீல்டில் இதற்கான பிரத்யேக ஃபாஸ்ட்டாக் ஒட்டப்பட்டிருக்கும். இது, வாகனங்கள் ஒவ்வொரு முறையும் சுங்கச் சாவடிகளை கடக்கும்போது, தானகாவே டோலுக்கு உரிய பணத்தைச் செலுத்திவிடும்.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இதற்கு நாம் செய்யவேண்டியது, குறிப்பிட்ட ஃபாஸ்டாக்-கினை வங்கி கணக்குடன் இணைத்தால் போதுமானது. அதேசமயம், வங்கிக் கணக்கில் பணம் இருத்தலும் அவசியம். இந்த நடைமுறைகளைக் கடைபிடித்த வாகனம், டோலை கடுக்கும்போது தானாக, அதன் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படும்.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இத்தகைய ஃபாஸ்டாக்-கைத்தான் அமேசான் ஆன்லைன் வர்த்த நிறுவனம், விற்பனைச் செய்ய தொடங்கியுள்ளது. அவ்வாறு, கார், ஜீப் மற்றும் வேன்களுக்கான ஃபாஸ்டாக்-குகளை அந்த நிறுவம் விற்பனைச் செய்கின்றது.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இதனை, வாங்கும் வாடிக்கையாளர்கள், பிளே ஸ்டோரில் இருக்கும் 'மை ஃபாஸ்டாக்' என்ற ஆப்பினை டவுண்லோடு செய்யவேண்டும். பின்னர், அந்த ஆப்பில் வாகனம் குறித்த தகவலையும், வங்கி கணக்கையும் இணைக்க வேண்டும். இவற்றைச் செய்து முடித்த பின்னர், கடைசியாக குறுஞ்செய்தி வாயிலாக, ஃபாஸ்டாக், கார் மற்றும் வங்கியுடன் இணைந்தது குறித்த தகவல் கிடைக்கும்.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

பின்னர், இந்த ஃபாஸ்டாக்-கை காரின் வின்ட் ஷீல்ட் பகுதியில் ஒட்டி பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இது, வாகன ஓட்டிகள் மணிக் கணக்கில் நின்று, டோல் கட்டணத்தை செலுத்தும் அவலை நிலையைத் தவிர்க்க உதவும்.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

அதேபோன்று, அமேசானில் விற்பனையாகும் ஃபாஸ்டாக்-கில் குறிப்பிட்ட வங்கிகளை மட்டுமே இணைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், எச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் வங்கி, பேடிஎம் பேமண்ட் உள்ளிட்ட வங்கிகளை மட்டுமே இதில் இணைக்க முடியும்.

அமேசானில் விற்பனைக்கு வந்த ஃபாஸ்டாக்.... சிறப்பு தகவல்...!

இந்த ஃபாஸ்டாக்குகள் அமேசான் மட்டுமின்றி, பேடிஎம் ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளிலும் ஃபாஸ்டாக் விற்பனைச் செய்யப்படுகிறது. இத்துடன், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற 22 வங்கிகள் மற்றும் சில குறிப்பிட்ட சுங்க சாவடிகளிலும் இது விற்பனைக்கு கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2019, 17:02 [IST]
English summary
Now FASTags Can Purchase In Amazon. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+