ரயிலில் போகும் போது டிடிஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா?

ரயில்களில் டிடிஆர்களுக்கு எனத் தனியாக சீட்கள் ஒதுக்கப்படும்.

Recommended Video

புதிய டாடா பன்ச் மினி எஸ்யூவி

இரவு நேரங்களில் டிடிஆர்களின் உதவி தேவை என்றால் இந்த இடத்திற்குச் சென்றால் நேரடியாக அவரை சந்திக்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

இந்தியாவில் மிக முக்கியமாகப் போக்குவரத்து வசதி என்றால் ரயில் போக்குவரத்து. மக்கள் குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றது ரயில் போக்குவரத்து தான். அதுவும் ரயிலில் தான் விமானத்தில் கூட கிடைக்காத படுத்துத் தூங்கிக்கொண்டே பயணிக்கும் வசதி இருக்கிறது. இதனால் மக்கள் பலர் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

இன்று இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயங்குகின்றன. அதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் ரயிலில் டிக்கெட்களை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கான இருக்கை உறுதி செய்யப்படும்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஊழல் நடப்பதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு விதிமுறை கொண்டு வந்துள்ளது. ஐஆர்சிடிசி மூலம் ரயில்களுக்கான முன்பதிவுகள் எல்லாம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரயில் பயணத்தில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நபர் தான் பயணம் செய்கிறார்களா எனப் பரிசோதிக்க ஒவ்வொரு ரயிலுக்கும் 3-4 பெட்டிக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர்களை ரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

முன்பதிவிற்கான அனுமதி முடிந்ததும் சார்டிங் நடைபெறும் அப்பொழுது ரயிலில் ஒவ்வொரு சீட்டும் எந்தெந்த பயணிக்கு என ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். இந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்களுக்கான பயண அட்டவணை பிரிட் செய்யப்படும். அது டிக்கெட் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்படும் அந்த பட்டியலை வைத்து டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்களை சோதனை செய்வார்கள்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

இதில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட டிக்கெட் எடுத்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்ஏசி யில் உள்ள பயணிகளுக்கு டிக்கெட் பரிசோதர்களின் உதவி கட்டாயம் தேவைப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் எடுத்து அந்த ரயிலுக்கான சா்ட்டிங் முடியும் போதும் காத்திருப்பு பட்டியலிலிருந்தால் அந்த டிக்கெட் தானாக கேன்சல் ஆகிவிடும் அதை வைத்து பயணிக்க முடியாது.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

ஆனால் டிக்கெட் கவுண்டர்களில் எடுத்துக் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டிற்கு பயணிக்க அனுமதியுள்ளது. பயணத்தின் போது யாராவது பயணிகள் வரவில்லை என்றால் அந்த சீட் வேறு பயணிக்கு ஒதுக்கும் உரிமை டிக்கெட் பரிசோதகர்களுக்கு உண்டு அதே போல ஆர்ஏசியில் உள்ள பயணிகளுக்கு பெர்த் இருந்தால் பெர்த்தை ஒதுக்கும் அதிகாரமும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இருக்கிறது.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

இதில் பெரும்பாலும் ரயில் கிளம்பிய இடத்திலிருந்தே ரயிலில் ஏறியவர்களுக்குப் பெரிய பிரச்சனையில்லை சில நிமிடங்களிலேயே டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் சோதனைசெய்ய வந்துவிடுவார்கள் அப்பொழுது அவர்களுக்கான சீட் மாற்றம் மற்றும் பெர்த் வசதி குறித்துக் கேட்டுக்கொள்ளலாம்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

ஆனால் இரவு நேரங்களில் ரயில் ஏறுபவர்கள் பலர் இரவு நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்களைத் தேடி அலைவார்கள். இது வெகு சில நேரங்களே நடக்கும் என்றாலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் சிக்கினால் அவர் பாடு திண்டாட்டம் தான். இரவில் ஏறுபவர்களுக்குக் காத்திருப்பு அல்லது ஆர்ஏசி மட்டுமல்ல, இரவு நேரத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பெர்த்தில் மற்றவர் படுத்துத் தூங்குவது, உள்ளிட்ட பிரச்சனைகளுக்காகவும்டிக்கெட் பரிசோதகரின் உதவி தேவைப்படும்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

இந்த நேரத்தில் மக்கள் பலர் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் எங்கு இருக்கிறார் என்று குழப்பி என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தான் இந்த பதிவை எழுதுகிறோம். பொதுவாக ரயில்களில் பயணிக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்குக் குறிப்பிட்ட பயணத்தின் போது ஒரு சீட் ஒதுக்கப்படும்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

அந்த சீட் வேறு பயணிகளுக்கு ஒதுக்கப்படாது. அதனால் இந்த சீட்டிற்கு சென்றால் நீங்கள் நேரடியாக டிக்கெட் பரிசோதகரைப் பார்த்துவிட முடியும். எந்தெந்த ரயில்களில் எந்தெந்த கோச்களில் இந்த டிக்கெட் பரிசோதகர்களுக்கான சீட் ஒதுக்கப்படும் எனக் காணலாம் வாருங்கள்

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

சதாப்தி, ராஜஸ்தானி உள்ளிட்ட ரயில்களில் ஒவ்வொரு ஸ்லீப்பர் கோச்சிலும் 7ம் நம்பர் சீட் டிக்கெட் பரிசோதகர்களுக்காக ஒதுக்கப்படும். இது போக இரண்டாம் வகுப்பு சீட்டிங் கோச் என்றால் D1, D3, D5 மற்றும் D7 ஆகிய கோச்களில் முதல் சீட் டிக்கெட் பரிசோதகர்களுக்காக ஒதுக்கப்படும்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

கரீப்ரத் ரயில்களை பொருத்தவரை G1,G3,G5,G7 ஆகிய பெட்டிகளில் 7வது சீட் டிக்கெட் பரிசோதகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவோ ஏசி பெட்டியாக இருந்தால் B1 மற்றும் BE1

ஆகிய கோச்களில் 7ம் நம்பர் சீட் டிக்கெட் பரிசோதகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பொருத்தவரை ஏ1 கோச்சில் 5வது சீட்டும், மற்ற கோச்களில் 7வது சீட்டும், ஒதுக்கப்படும் ஒரு டிக்கெட் பரிசோதகர் 3-4 கோச்கள் வரை சோதனை செய்ய வேண்டும். இது போக ரயில்களில் ரயில்வே போலீசாருக்கும் தனியாக சீட் ஒதுக்கப்படும் அதன்படி அவர்களுக்கு 63ம் எண் சீட் ஒதுக்கப்படும்.S1, S3, S5 என ஒற்றை இலக்க கோச்களில் உள்ள 63ம் எண் சீட் ரயில்வே போலீசாருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

ரயிலில் போகும் போது டி டி ஆர் திடீரென காணாமல் போனால் எப்படிக் கண்டு பிடிக்க வேண்டும் தெரியுமா . . .

நீங்கள் இரவு நேரம் அல்ல அவசரமாக டிக்கெட் பரிசோதகர் அல்லது ரயில்வே காவலர்களின் உதவியை நீங்கள் நாட வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் கோச்களில் அருகில் உள்ள கோச்களில் இந்த சீட் நம்பரில் போய் பார்த்தால் அவர்களை எளிதில் அணுகிவிடலாம்.

Article Published On: Saturday, August 20, 2022, 14:22 [IST]
English summary
Now how to find TTE in running train know their seat number
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+