புதிய ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச்களில் செம அப்டேட்... விபத்து நடந்தா உடனே தகவல் சொல்லிவிடும்...
ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச்களை நேற்று அறிமுகப்படுத்தியது. அதில் புதிதாக க்ராஷ் டிடெக்ஷன் என்ற அம்சத்தையும் சேர்த்து அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? இதனால் என்ன பயன் கிடைக்கும்? இதற்கு நாம் முதலில் என்ன செய்ய வேண்டும்? இது குறித்த தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி தனது புதிய தயாரிப்புகளை வெளியிடுவது வாடிக்கை. அதன்படி நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளான ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

இதற்கும் ஆட்டோமொபைலுக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா? இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோனில் க்ராஷ் டிடெக்ஷன் என்ற ஒரு புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த தொழிற்நுட்பம் நீங்கள் கார் அல்லது பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கிவிட்டால் அது குறித்து அது தானாகவே நீங்கள் முன்னரே சேமித்து வைத்த 10 எண்களுக்கு எச்சரிக்கை மெசெஜை அனுப்பிவிடும்.

இதை ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளரின் ஒரு பாதுகாப்பு அம்சமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ஐபோன் 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 8, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகிய வாட்ச்களிலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த க்ராஷ் டிடெக்ஷன் அம்சம் எப்படி வேலை செய்கிறது என்றால் இது 3 கருவிகளிலிருந்து கிடைக்கும் டேட்டாக்களை வைத்து இதை அறிகிறது. ஐபோனிலிருந்து கிடைக்கும் பாரோ மீட்டரிலிருந்து கிடைக்கும் கேபின் பிரஷர் குறித்த தகவல், ஜிபிஎஸ் கருவியிலிருந்து வேகம் திடீரெனக் குறைவது குறித்த தகவல், மற்றும் மைக் மூலம் விபத்து நடக்கும் போது ஏற்படும் சத்தம் ஆகியவற்றைக் கணக்கிட்டு இந்த க்ராஷை கணிக்கிறது.

ஆப்பள் வாட்சை பொருத்தவரை கைரோஸ்கோப் மற்றும் ஆக்ஸிலரோமீட்டர் உள்ளிட்ட கருவிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் இந்த க்ராஷ் டிடெக்ஷனை செய்கிறது. இப்படியாக க்ராஷ் டிடெக்ட் செய்யப்பட்டவுடன் போன் அல்லது ஆப்பிள் வாட்ச்சின் திரையில் க்ராஷ் டிடெக்ட் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 10 எண்களுக்கு எம்ஜென்சி மெசெஜை அனுப்பவுள்ளது எனக் காட்டும்.

ஒரு வேலை அந்த நபர் சிறிய விபத்தில் சிக்கினாலோ அல்லது விபத்தில் சேதாரம் இல்லாமல் தப்பித்திருந்தாலோ 10 நொடியில் இந்த மெசெஜை கேன்சல் செய்ய முடியும். அவர் எந்த விதமான செயலும் செய்யாமல் இருந்தால் குறிப்பிட்ட நபர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அவர் முன்னரே பதிவு செய்து வைத்திருந்த நம்பர்களுக்கு எச்சரிக்கை மெசெஜ்கள் பறக்கும். இது மட்டுமல்ல இதன் மூலம் விபத்தில் சிக்கியவர் எமர்ஜென்ஸி காலையும் செய்ய முடியும்.

இந்த க்ராஷ் டிடெக்ஷனிற்கான அல்காரிதம் ஃபுரோபஷனல் க்ராஷ் டெஸ்ட் லேப்களில் பயணிகள் காரின் க்ராஷ் டேஸ்டில் உள்ளத் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது காரின் முன்புறம் விபத்து நடப்பது,பின்புறம் விபத்து நடப்பது, பக்கவாட்டில் விபத்து நடப்பது என எல்லாத் தகவல்களும் சேர்த்து வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த அல்காரிதம் சுமார் 10 லட்சம் மணி நேரம் ரியல் வேல்டு டிரைவிங் மற்றும் க்ராஷ் டேட்டாவின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த க்ராஷ் டிடெக்ட் செய்யப்பட்டால் முதலில் வாட்ச் அல்லது போனில் காட்டப்படும் எமர்ஜென்ஸி நோட்டிஃபிகேஷனை அவரே கேன்சல் செய்யவில்லை என்றால் 10 நொடியில் எச்சரிக்கை மெசெஜை, குறிப்பிட்ட லோகேஷன் உடன் அனுப்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications