நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

இனி செல்லப் பிராணிகள் நாய் மற்றும் பூனைகளையும் ரயிலில் அழைத்துச் செல்லலாம். சூப்பரான வசதியை ரயில்வேத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்தியன் ரயில்வேஸ் அதன் ரயில் போக்குவரத்து சேவையுடன் சேர்த்து பல்வேறு சிறப்பு சேவைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தற்போது புதிய சேவையாக ரயிலில் பயணிக்கும் பயணிகள் அவர்களது செல்ல பிராணிகளையும் தங்களுடைய பிரயாணங்களில் அழைத்துச் செல்வதற்கான புதிய சேவையைத் தொடங்கியிருக்கின்றது.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

செல்லப் பிராணிகள் யானைகளாக இருந்தாலும் அழைத்துச் செல்ல முடியுமாம். ஆம், குதிரைகள், நாய்கள், பறவைகள் என அனைத்து விதமான செல்ல பிராணிகளையும் இனி ரயில்களில் அழைத்துச் செல்ல முடியும். ஆனால், நாய் மற்றும் பூனைகளை மட்டும் பயணிகள் அவர்களுடன் அழைத்துச் செல்ல முடியும். அதேவேலையில், விலங்குகளை அழைத்துச் செல்வதற்கென தனி விதிகளை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

அவை பற்றிய விபரம் இதோ:

பயணிகள் அவர்களது செல்ல பிராணியை (நாய் மற்றும் பூனை) பெட்டியில் வைத்திருக்க வேண்டும். மேலும், லக்கேஜ் அல்லது பிரேக் வேன் ஏதேனும் ஒன்றில் எடுத்துச் செல்லலாம்.

சில பயணிகள் அவர்களது செல்ல பிராணிகளை அவர்களுடனேயே வைத்திருக்க விரும்புவார்கள். இதுமாதிரியானோருக்கு உதவும் விதமாகவும் ஓர் ஆப்ஷனை இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது. இரண்டு அல்லது நான்கு பர்த்கள் கொண்ட ஏசி ஃப்ர்ஸ்ட் கிளாஸை முழுவதுமாக புக் செய்பவர்கள் எந்த தடையும் இன்றி தங்களது செல்ல பிராணிகளை தங்களுடன் அழைத்து செல்ல முடியும்.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

கட்டண விபரம்:

செல்ல பிராணிகள் அவற்றிற்கான பெட்டியில் பயணிக்கும் போது ஒரு கிலோவிற்கு ரூ. 30 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். உதாரணமாக உங்கள் செல்லப் பிராணி நாயாக இருக்கும் என வைத்து கொள்ளலாம். அதன் எடை சுமார் 4 கிலோ இருக்கும் என வைத்துக் கொள்வோம். இதனை நாய் பெட்டியில் வைத்து அழைத்து செல்ல ரூ. 120 கட்டணமாக செலுத்த வேண்டும்.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

அதுவே, உங்கள்கூடவே வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு ஒரு கிலோவிற்கு ரூ. 60 வரை கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக, பாசஞ்ஜர் கோச்சில் வைத்து உங்களது 5 கிலோ எடைக் கொண்ட நாயை அழைத்து செல்ல வேண்டும் என்றால், அதற்கு கட்டணமாக ரூ. 300 வரை செலுத்த வேண்டும்.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

அபராதம்:

நீங்கள் அறிந்தோ அல்லது அறியாமலே இந்த விதியை மீறி செயல்பட்டால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். லக்கேஜுக்கு வசூலிக்கப்படுவதைப் போல ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், ஆறு மடங்கு அதிகமாக ஒவ்வொரு கிலோவிற்கும் அபராதம் வசூலிக்கப்படும்.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த பெட்டிகளில் எடுத்துச் செல்லக் கூடாது:

பயணிகள் வழக்கமான ஏசி 2-டைர், ஏசி 3-டைர், ஏசி சேர் கேர், ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் செகண்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்டுகளில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இந்த விதியை மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

எந்தெந்த ரயில்களில் நாய் பெட்டி வசதி கிடைக்கின்றது?

இந்திய ரயில்வே அமைச்சகம் தற்போது குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டுமே இந்த நாய் பெட்டி வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட சில ரயில்களில் மட்டுமே நாய் பெட்டி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

பயணிகளுக்கான டிக்கெட்டை போல செல்லப் பிராணிகளுக்கும் அட்வான்ஸா புக் செய்யலாமா?

தற்போதைய நிலவரப்படி இந்தியன் ரயில்வேஸ் செல்லப் பிராணிகளுக்கான பர்த்தை புக் செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கவுண்டரில், ரயில் புறப்படும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் புக் செய்து கொள்ளும் வகையிலேயே தற்போது வசதி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நாய்-பூனைகளையும் இனி ரயிலில் அழைத்து செல்லலாம்... இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விபரம்!

பயணிகளே அவர்களின் செல்லப் பிராணிகளுக்கு பொருப்பு ஏற்க வேண்டும். உணவு, தண்ணீர் வழங்குவது எதுவாக இருந்தாலும் அப்பிராணிகளின் உரிமையாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய ரயில்வேயின் இந்த புதிய சேவை வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, செல்லப் பிராணிகளுக்காக வெளியில் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்போர்களுக்கு இந்த அறிவிப்பு ஓர் வரபிரசாதமாக அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த சேவையைப் பயன்படுத்திய பயணிகளும் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 15:04 [IST]
English summary
Now we can do train journey with our pet
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+