பறக்கும் தட்டுல போற ஃபீல் கிடைக்குமா! சென்னைல ஏறினா இறங்க போற இடம் வந்ததே தெரியாது.. மதுரை-பெங்களூரும் போலாம்!

இந்தியாவின் முன்னணி தனியார் பேருந்து சேவை நிறுவனமாக நியூகோ (NueGo) இருக்கின்றது. இந்த நிறுவனம் தன்னுடைய போக்குவரத்து சேவையில் மின்சார பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக, இருக்கை வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் பேருந்துகளை மட்டுமே அது இயக்கி வருகின்றது. இது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையிலேயே அது முதல் முறையாக ஏசி ஸ்லீப்பர் பேருந்து சேவையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், இந்தியாவிலேயே மின்சார ஏசி பேருந்தை ஸ்லீப்பர் வசதியுடன் சேவைக்குக் கொண்டு வரும் முதல் நிறுவனமாக நியூகோ மாறி இருக்கின்றது.

அது பயன்படுத்த இருக்கும் ஏசி ஸ்லீப்பர் எலெக்ட்ரிக் பேருந்துகளின் படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இத்துடன், இந்த ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளை இயக்க இருக்கும் ரூட்களையும் நியூகோ வெளியிட்டிருக்கின்றது. பெங்களூரு- சென்னை, சென்னை -மதுரை, பெங்களூரு -மதுரை, விஜயவாடா- விசாகப்பட்டினம், ஹைதராபாத் -ராஜமுந்திரி மற்றும் டெல்லி- அம்ரித்சர் இந்த இன்டர்சிட்டி வழித்தடங்களிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் ஏசி ஸ்லீப்பர் பேருந்து சேவையை நியூகோ நிறுவனம் தொடங்கி இருக்கின்றது.

Nuego launches electric sleeper bus cabin

இந்தியாவில் நியூகோ நிறுவனத்தின் பேருந்து சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நிறுவனத்தின்கீழ் அமர்ந்து செல்கின்ற மாதிரியான இருக்கை வசதிக் கொண்ட பேருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆகையால், ஸ்லீப்பர் பேருந்துகள் இல்லாமல் இருந்தது பெருத்த குறையாகவே இருந்தது.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த குறையை போக்கியுள்ளது, நியூகோ. இதன் வாயிலாக தன்னுடைய சந்தை இருப்பை அந்த நிறுவனம் மேலும் வலுவானதாக மாற்றி இருக்கின்றது. சீட்டர் பேருந்துகளாக இருந்தாலும் நியூகோ பயன்படுத்திய அந்த பேருந்துகள் அதிக சொகுசான டிராவலுக்கு உகந்த எலெக்ட்ரிக் பேருந்துகளாகவே அவை இருந்தன.

Nuego launches electric sleeper bus service

நான்றாக சாய்ந்து தூங்குகின்ற வகையில் ரெக்லைன் செய்துக் கொள்ளும் வசதி, செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதி என பல்வேறு அம்சங்கள் அந்த பேருந்தில் வழங்கப்பட்டன. இதையே மிஞ்சக் கூடிய சகல வசதிகளைக் கொண்ட பேருந்தையே தற்போது படுக்கும் வசதியுடன் நியூகோ பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

படுத்துக் கொள்ள மட்டுமல்ல தேவைப்பட்டால் இதில் காலை நீட்டியவாறு அமர்ந்துக் கொண்டும் பயணிக்கும் முடியும். இதற்காக இருக்கைகளில் இருப்பதைப் போன்ற குஷன்கள் முதுகிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. அவை முதுகின் வளைவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட குஷன்களைக் கொண்டிருப்பதால் சாயும்போது மிக சௌகரியமான அனுபவத்தை வழங்கும்.

Nuego electric sleeper bus berth pic

இந்த வசதி நீண்ட நேரம் அமர்ந்துக் கொண்டே பயணிக்க ஏதுவாக இருக்கும். இதுமட்டுமல்ல தலைக்கு மேலே அதிக இட வசதி இருப்பதால் உயரமானவர்களாலும் அமர்ந்து பயணிக்க முடியும். இத்துடன் கூடுதல் பிரீமியமான டிராவல் ஃபீலை வழங்கும் பொருட்டு ஆம்பியன்ட் எல்இடி லைட், நவீன சுகாதார வசதிகள், யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட், புக் படிக்க வசதியாக லைட், பொருட்களை வைப்பதற்கான பாக்கெட் போன்றவற்றையும் பயணிகளுக்காக இந்த மின்சார பேருந்தில் வழங்கியிருக்கின்றனர்.

இதுமட்டுமல்ல இந்த எலெக்ட்ரிக் பேருந்து பல்வேறு பாதுகாப்பு சிறப்பம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இசிஏஎஸ் வசதிக் கொண்ட ஃபுல் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் உடல் உருள்வதைத் தவிர்க்கக் கூடிய பொறியியல் முறை உள்ளிட்டவையும் இந்த பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அம்சங்களே பயணிகளுக்கு பறக்கும் தட்டில் மிதக்கின்ற மாதிரியான ஃபீலை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. அதாவது, அலுங்கல்-குலுங்கள் இல்லா பயண அனுபவத்தை இந்த அம்சங்கள் வழங்கும். குறிப்பாக, பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய வசதிகளையும் இந்த பேருந்தில் நியூகோ வழங்கி இருக்கின்றது.

இத்துடன், கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமிரா, ஜிபிஎஸ் லைவ் டிராக்கிங் போன்றவையும் இந்த பேருந்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. நியூகோ-வின் இந்த பேருந்தில் ஓர் முழு சார்ஜில் 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆகையால், சென்றுக் கொண்டிருக்கும் வழியில் சார்ஜ் தீர்ந்துவிட்டு நின்றுவிடுமோ என நினைக்க வேண்டாம்.

இவர்கள் தற்போது சேவையை தொடங்கி இருப்பது இதற்கும் குறைவான இடைவெளியைக் கொண்ட இன்டர்சிட்டிகளையே ஆகும். ஒருவேளை இந்த பேருந்து வழியில் நின்றுவிட்டாலும் அதை அவர்களால் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்து ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களால் மீண்டும் பயணத்தைத் தொடங்கிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிர்வுகள் அற்ற மற்றும் மிகவும் அமைதியான பயண அனுபவத்தையும் இந்த பேருந்து வழங்கும் என நியூகோ தெரிவித்திருக்கின்றது. அத்தோடு, காற்றையும் இந்த பேருந்துகள் மாசுப்படுத்தாது. ஆகையால், நியூகோ நிறுவனத்தின் புதிய சேவைக்கு இன்டர்சிட்டி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 11:57 [IST]
English summary
Nuego launches indias first fully electric sleeper bus for sustainable intercity travel
மேலும்... #electric bus #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X