யூஸ்டு காரை திருவிழா ரேஞ்சுக்கு நிகழ்ச்சி நடத்தி டெலிவரி எடுத்த பிரபலம்! வெள்ளை கலர் காரை வாங்க கருப்பு டிரெஸ்

இந்தியாவில் சொகுசு கார்களுக்கான (Luxury Cars) மவுசு நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. ஆனால் சொகுசு கார்களின் விலை மிகவும் அதிகம். எனவே யூஸ்டு கார் (Used Car) மார்க்கெட்டில், நிறைய பேர் சொகுசு கார்களை வாங்குகின்றனர். உண்மையில் யூஸ்டு கார் சந்தையில் தரமான சொகுசு கார்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. எனவே பிரபலமான மனிதர்கள் கூட, யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களை வாங்குகின்றனர். விராட் கோஹ்லி (Virat Kohli), யுவராஜ் சிங் (Yuvraj Singh), ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டால், விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் மற்றும் ஷில்பா ஷெட்டி போன்ற பிரபலங்கள் எல்லாம் யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு கார்களை வாங்கியுள்ளனர். இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலம் யூஸ்டு கார் மார்க்கெட்டில் சொகுசு காரை வாங்கியுள்ளார்.

Numeeta Lalu George Buys Used Audi A7

அவர் நுமீடா லாலு ஜார்ஜ் (Numeeta Lalu George) ஆவார். கேரள மாநிலம் கொச்சியை (Kochi) சேர்ந்த இவருக்கு, வீடியோ கிரியேட்டர் மற்றும் கராஜ் 07 (Garage 07) என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் போன்ற பல்வேறு முகங்கள் உள்ளன. இவர் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கியிருப்பது ஆடி ஏ7 (Audi A7) கார் ஆகும்.

இந்த கார் இந்திய சந்தையில் தற்போது விற்பனையிலேயே இல்லை. கடந்த 2015ம் ஆண்டிலேயே இந்த காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்தியாவில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது, 64.80-90.63 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) இந்த கார் விற்பனை செய்யப்பட்டது.

Used Audi A7

இருப்பினும் இந்த கார் இந்திய சந்தையில் மீண்டும் 'கம்பேக்' கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆடி ஏ7 கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும் என கூறப்படுகிறது. எனவே இந்த காரை புதியதாக வாங்க வேண்டும் என்றால், இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

இதன் காரணமாக யூஸ்டு கார் மார்க்கெட்டில் நுமீடா லாலு ஜார்ஜ் ஆடி ஏ7 காரை வாங்கியிருக்கலாம். அத்துடன் விலை குறைவு என்பதும் கூட, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நுமீடா லாலு ஜார்ஜ் வாங்கியிருப்பது யூஸ்டு கார் என்பதால், அதன் மதிப்பு எவ்வளவு? என்பது சரியாக தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆடி ஏ7 கார், செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படும் இதன் புதிய தலைமுறை மாடலில், 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி ஏ7 செடான் கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) போன்ற கார்களுக்கு எல்லாம் நேரடி போட்டியாக இருக்கும். ஆனால் இந்த கார் இங்கு மீண்டும் விற்பனைக்கு வருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே ஆடி ஏ7 காரை நுமீடா லாலு ஜார்ஜ் டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவில், காரை விற்பனை செய்த நிறுவனம் சிறப்பான டெலிவரி நிகழ்ச்சியை நடத்தி, நுமீடா லாலு ஜார்ஜிடம் காரை ஒப்படைத்ததை பார்க்கலாம். நுமீடா லாலு ஜார்ஜ் வெள்ளை நிறத்தில் காரை வாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் கருப்பு உடையில் வந்ததும் கவனம் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2025, 23:57 [IST]
English summary
Numeeta lalu george buys used audi a7 viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+