சிலை மாதிரி இருக்காங்க! இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா! நல்லா உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது!

இந்தியாவின் பிரபல மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport). தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த காரின் அதிநவீன சொகுசு வசதிகள் (Features) மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் வழங்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை அடுக்கி கொண்டே போக முடியும். எனவே முக்கியமான வசதிகளை மட்டும் இங்கே தெரிவிக்கிறோம்.

அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, 13.10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 13.70 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவற்றை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் முக்கியமான வசதிகளாக குறிப்பிடலாம்.

Nushrratt Bharuccha Spotted In Range Rover Sport

இதுதவிர சக்தி வாய்ந்த இன்ஜின் வழங்கப்படுவதாலும், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை பிரபலங்கள் அதிகமாக விரும்புகின்றனர். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. இதில், 3.0 லிட்டர் P400 பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஒன்றாகும்.

அதிகபட்சமாக 398 பிஎஸ் பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 3.0 லிட்டர் D350 டீசல் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனையும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் பெற்றுள்ளது. இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 351 பிஎஸ் மற்றும் 700 என்எம் ஆகும்.

Nushrratt Bharuccha With Her Range Rover Sport

இந்த 2 இன்ஜின்கள் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் 4 சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தி செலுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை பெரிதும் விரும்பி வாங்குகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கியுள்ளார். அவர் நுஷரத் பருச்சா (Nushrratt Bharuccha) ஆவார். இவரை பற்றிய செய்திகளை நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அவ்வப்போது வாசித்திருக்கலாம். ஏனெனில் இவர் மிகவும் தீவிரமான கார் ஆர்வலர் ஆவார்.

இவர் மஹிந்திரா தார் (Mahindra Thar) காரில், ஆஃப் ரோடு சாகசங்களை செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் அதிகமாக பரவியது. பொதுவாக பெரும்பாலான பாலிவுட் நடிகைகள் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை மட்டுமே விரும்புவார்கள்.

கார்களை ஓட்டுவதில் எல்லாம் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் நுஷரத் பருச்சா இதற்கு அப்படியே விதிவிலக்கு. இவர் கார்களை ஓட்டுவதில் மட்டும் வல்லவர் கிடையாது. அதில் சாகசம் செய்வதிலும் வல்லவர். பிரபலமான பாலிவுட் நடிகையான இவர் பெயர் தற்போது செய்திகளில் மீண்டும் ஒரு முறை அடிபட தொடங்கியுள்ளது.

இவர் வாங்கியுள்ள புதிய கார்தான் இதற்கு காரணம். நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை நுஷரத் பருச்சா சமீபத்தில் வாங்கியுள்ளார். அந்த காரில் அவர் ஒரு இடத்திற்கு வந்து இறங்கிய வைரல் வீடியோ, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

நுஷரத் பருச்சா வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் விலை 1.40 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.75 கோடி ரூபாய் வரை வரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) ஆகிய சொகுசு கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் திகழ்ந்து வருகிறது.

நுஷரத் பருச்சா பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தினாலும் கூட, தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான வாலிபராஜா திரைப்படத்தில் கூடி நுஷரத் பருச்சா நடித்திருந்தார். சந்தானம் (Santhanam) உள்பட முன்னணி நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் அவருடன் நடித்திருந்தனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 23, 2024, 18:02 [IST]
English summary
Nushrratt bharuccha spotted in range rover sport viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+