பின்னாடி டோரை மூட முடியாம திணறியது இவ்ளோ பெரிய ஆளா! ஒன்றரை கோடி ரூபா சொகுசு கார் மானத்தையே வாங்கீருச்சு!
பிரபல நடிகர், நடிகைகள் விமான நிலையங்களுக்கு (Airports) வந்தால், கெத்து காட்டுவார்கள். அவர்களின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் மிடுக்காக இருக்கும். ஆனால் பிரபல நடிகை ஒருவருக்கு விமான நிலையம் ஒன்றில் மிகவும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நுஷ்ரத் பருச்சா (Nushrratt Bharuccha). தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர், புத்தம் புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) கார் ஒன்றை சமீபத்தில் வாங்கியுள்ளார். இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது.

எனவே இதன் விலை (Price) மிகவும் அதிகம். சொல்லப்போனால் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் ஒன்றாக இதனை குறிப்பிட முடியும். தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை 1.21 கோடி ரூபாயாக உள்ளது.
இத்தனைக்கும் இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. இன்சூரன்ஸ் (Insurance) போன்ற விஷயங்களை எல்லாம் சேர்த்த பிறகு, ஆன் ரோடு விலை இன்னும் ஒரு சில லட்சங்கள் கூடுதலாக வரும். எனவே கோடீஸ்வரர்களால் மட்டுமே பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்.

ஆனால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப ஏராளமான அதிநவீன வசதிகள் எல்லாம் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை எல்லாம் தவிர, 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் கார்டன் 18 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், பனரோமிக் க்ளாஸ் ரூஃப் என இந்த காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளின் பட்டியல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில், 76.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 425 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே ரேஞ்ச் (Range) விஷயத்திலும், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அசத்துகிறது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, விமான நிலையம் ஒன்றில், நுஷ்ரத் பருச்சாவை பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் சங்கடப்படுத்தி விட்டது. நுஷ்ரத் பருச்சா சமீபத்தில் விமான நிலையம் ஒன்றுக்கு குடும்பத்துடன் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரில் சென்றிருந்தார். அது மும்பை விமான நிலையம் போல் தெரிகிறது.
தன்னுடன் வந்த குடும்ப உறுப்பினர்களுக்கு பை பை சொல்லி விட்டு, விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு, காரின் பின் பகுதியில் உள்ள லக்கேஜ்களை வைக்க கூடிய பூட் பகுதியை நுஷ்ரத் பருச்சா மூட முயன்றார். ஆனால் அவரால் அதை மூடவில்லை. ஆனால் அந்த சமயத்தில் ஆட்டோமேட்டிக் டெயில்கேட் (Automatic Tailgate) வசதி சரியாக வேலை செய்யவில்லை.
எனவே பூட் கதவை நுஷ்ரத் பருச்சாவால் மூட முடியவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் முன்னிலையில் தர்மசங்கடம் ஏற்பட்டாலும் கூட, நுஷ்ரத் பருச்சா இந்த பிரச்னையை சிரித்து கொண்டே லாவகமாக கையாண்டு விட்டார். பின்னர் விமானத்திற்கு நேரம் ஆகி விட்ட காரணத்தால், பூட் கதவை மூடாமலேயே அவர் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமேட்டிக் டெயில்கேட் முழுவதுமாக மூடப்படும் வரை காரை ஓட்ட கூடாது. ஆனால் பூட் மூடப்படுவதற்கு முன்பாகவே கார் ஓட்டப்படுவதை, தற்போது பரவி வரும் நுஷ்ரத் பருச்சாவின் வைரல் வீடியோவில் (Viral Video) பார்க்க முடிகிறது. இது தவறான ஒரு விஷயம். இதற்கு அடுத்தபடியாக காரை நிறுத்தி விட்டு, பூட் கதவை மூட முயற்சி செய்யப்படுவதை நாம் வீடியோவில் பார்க்கலாம். இதுதான் சரியான விஷயம் ஆகும்.
ஆனால் பேக் ஒன்று, பூட் கதவு சரியாக மூடப்படாமல், தடையை ஏற்படுத்துவதை போல் தெரிகிறது. இடையூறு செய்த அந்த பையை சற்று உள்ளே தள்ளி வைத்திருந்தால், ஒருவேளை பூட் கதவு மூடப்பட்டிருக்கலாம். ஆனால் நுஷ்ரத் பருச்சா இதை சரியாக கவனிக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையே நுஷ்ரத் பருச்சா அங்கிருந்து சென்ற பின்னர், இன்னொருவர் வந்து பூட் கதவை மூடுவதற்கு முயற்சி செய்கிறார்.
ஆனால் அவராலும் பூட் கதவை மூட முடியவில்லை. எனவே ஆட்டோமேட்டிக் டெயில்லைட் சென்சார்களில் கூட ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எவ்வளவதான் விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, ஒரு சில பிரச்னைகள் ஏற்படவே செய்யும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








