பறக்கும் தட்டு, ஏரியா 51 ரகசியத்தை உடைக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா!!

By Saravana

உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசிய பிரதேசங்களில் ஒன்றாக மேற்கு அமெரிக்காவின் நெவடா பிரதேசத்தில் உள்ள ஏரியா 51 கருதப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் வந்து செல்லும் இடமாகவும், அமெரிக்காவின் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் மிகுந்த பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இத்தனை ஆண்டு காலம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும் பறக்கும் தட்டுகள் மற்றும் ஏரியா 51 பற்றிய விபரங்களை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மர்ம பிரதேசம்

மர்ம பிரதேசம்

மேற்கு அமெரிக்காவின் நெவடா பிராந்தியத்தின் மலைகள் சூழ்ந்த வறண்ட நிலப்பரப்பில் உள்ள ஒரு பகுதியைத்தான் ஏரியா 51 என்று குறிப்பிடுகின்றனர். இந்த பிரதேசத்தில் வெளியாட்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

 பறக்கும் தட்டு...

பறக்கும் தட்டு...

1947ம் ஆண்டு ஜூலை 7ந் தேதி மெக்சிகோ நாட்டின் ராஸ்வெல் பகுதியில் விபத்துக்குள்ளான பறக்கும் தட்டும், அதிலிருந்து மீட்கப்பட்ட வேற்றுகிரகவாசியின் உடலும், இந்த ஏரியா 51 பகுதியிலுள்ள ரகசியமான சோதனை கூடத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட்டதாக யூகத் தகவல்கள் வெளியாகின. இந்த கூற்றை ஆய்வாளர்களில் பலரும் நம்பி வருகின்றனர்.

ராணுவ சோதனை களம்

ராணுவ சோதனை களம்

இந்த நிலையில், 1955ம் ஆண்டு இந்த பகுதியில் ரகசியமான ராணுவ விமான ஆராய்ச்சி மற்றும் சோதனை மையம் அமைக்கப்பட்டதாகவும், அது முதல் இது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆயுதங்களை சோதனை செய்யும் தளமாகவும் இது விளங்குவதாக நம்பப்படுகிறது.

பிளாக் புரொஜெக்ட்ஸ்....

பிளாக் புரொஜெக்ட்ஸ்....

அமெரிக்காவின் பி-2 ஸ்பிரிட் குண்டு வீச்சு விமானம், U2 உளவு விமானம் போன்றவை இந்த பிளாக் புரொஜெக்ட்ஸ் திட்டத்தின் அடிப்படையில் இந்த ஏரியா 51 பகுதியில் வைத்து சோதனை நடத்தப்பட்டவையாக தெரிவிக்கப்படுகிறது.

டைம் டிராவல்

டைம் டிராவல்

இந்த நிலையில், இந்த சோதனை மையம் குறித்த விஷயங்கள் இத்தனை ரகசியம் காக்கப்படுவது குறித்து பலரும் ஆச்சரியமும் தெரிவித்த நிலையில், இங்கு முன்னைய காலத்தை நோக்கி பயணிப்பதற்கான டைம் டிராவல் தொழில்நுட்பம் சோதிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

ஆழம் பார்க்கும் அமெரிக்கா

ஆழம் பார்க்கும் அமெரிக்கா

ரஷ்யா உள்ளிட்ட எதிரி நாடுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களையும் ஏரியா 51 பகுதியின் க்ரூம் லேக் பகுதியில் வைத்து அமெரிக்கா சோதனை செய்து, அதன் திறனை பரிசோதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரகசிய ஆயுதங்கள்

ரகசிய ஆயுதங்கள்

இந்த பகுதியில் அபாயகரமான கழிவுகள் வெளியேற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு துறை விசாரணையையும் நடத்தியது.

மறைக்கப்படும் உண்மைகள்

மறைக்கப்படும் உண்மைகள்

இந்த பகுதியில் பறக்கும் தட்டுகள் வருவதாக வெளியானத் தகவல்களை சிலர் மறுக்கின்றனர். அமெரிக்க ராணுவத்தின் ரகசிய விமானங்கள் சோதனை செய்யப்பபடுவதை கண்டு சிலர் பறக்கும் தட்டுகளாக வர்ணிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹிலாரியின் உறுதிமொழி

ஹிலாரியின் உறுதிமொழி

இன்னும் சில மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நான் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால், பறக்கும் தட்டுகள் குறித்து இதுவரை மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிடுவேன் என்று ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் கூறியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒபாமா வாயால்....

ஒபாமா வாயால்....

இத்தனை ஆண்டு காலம் ஏரியா 51 பற்றி அமெரிக்க அதிபர்கள் வாய் திறந்ததில்லை. ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ஏரியா 51 என்ற இடத்தை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஏரியா 51 மற்றும் பறக்கும் தட்டுகள் குறித்த உண்மையை தற்போதைய அதிபர் ஒபாமாவே வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில்...

விரைவில்...

இதுதொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளரான ஸ்டீபன் என்பவர் கூறுகையில்," இந்த ஆண்டு பறக்கும் தட்டு குறித்த உண்மை வெளியாகும் என நம்புகிறோம். அடுத்த ஜனாதிபதி யாராக இருந்தாலும், பறக்கும் தட்டு பற்றிய உண்மையை வெளிப்படுத்திய ஜனாதிபதியாக ஒபாமா இருப்பார்," என்று அவர் கூறியிருக்கிறார்.

நோபல் பரிசுக்காக...

நோபல் பரிசுக்காக...

நோபல் பரிசை மனதில் வைத்து இந்த பறக்கும் தட்டு குறித்த அறிவிப்பை தனது பதவிக்காலம் முடிவதற்குள் ஒபாமா வெளியிடுவார் என்றும் ஸ்டீபன் கூறியிருக்கிறார். இதனால், அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க அரசால் மறைக்கப்பட்டு வந்த உண்மைகளில் சிலவற்றை வெளியுலகம் தெரிந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ரகசியம்...

ரகசியம்...

அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியம் வெளியிடுவது ஒருபுறம் இருந்தாலும், இந்த இடத்திலிருந்து தயாரான விமானம் ஒன்று சரிந்து கிடந்த ஒபாமாவின் புகழை தூக்கி நிறுத்தியது. அது என்ன என்பதை விரைவில் மற்றொரு செய்தித் தொகுப்பில் காணலாம்.

அணுகுண்டையும் ஊதித்தள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா விமானம் - ரகசியங்கள்!

அணுகுண்டையும் ஊதித்தள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா விமானம் - ரகசியங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Obama plans to reveal UFO secrets before leaving office.
Story first published: Friday, May 27, 2016, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X