ஆட்டோவில் இந்த ஒரு மாற்றத்தை செய்தேன்... ஒருநாளைக்கு ரூ.1,500 வரையில் ஈசியா சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது எலக்ட்ரிக் ஆட்டோவை சூரிய ஒளியின் மூலம் இயங்கக் கூடிய சோலார்-பவர் ஆட்டோவாக மாற்றியுள்ளார். யார் இந்த ஆட்டோ ஓட்டுனர் எவ்வாறு இதனை சாத்தியமாக்கினார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

பெட்ரோல் & டீசல் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட்ட நிகழ்வை பலமுறை பார்த்துள்ளோம். சிலர் பெட்ரோல் (அ) டீசல் எரிபொருளை அவ்வப்போது வாங்க முடியாத காரணத்தினால் எலக்ட்ரிக் வாகனமாக மாற்றியிருப்பர். ஆனால், எரிபொருள் என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்துவதும் செலவு மிகுந்த பணியே ஆகும்.

electric auto into solar auto

ஏனெனில் இவ்வாறான மிக பெரிய வேலைகளை எல்லா மெக்கானிக்குகளாலும் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. இதற்கென அரசாங்கத்தால் அங்கீகரிக்க கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களை தொடர்பு கொண்டே இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும். இவ்வாறான மாற்றங்களை செய்வோர் பெரும்பாலும், எரிபொருள் என்ஜின் வாகனத்தை எலக்ட்ரிக் வாகனமாக மாற்றுவர்.

ஆனால், ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா என பெயர் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி கொண்டுள்ளார். எங்களுக்கு தெரிந்தவரையில், எலக்ட்ரிக் வாகனம் ஒன்று இவ்வாறு சோலார் வாகனமாக மாற்றப்பட்டது இதுவே முதல்முறை. ஸ்ரீகாந்த் பட்ரா எதற்காக இவ்வாறான ஓர் வேலையை செய்தார் என அறிந்தால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஏனெனில், நம்மில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனத்தை வாங்குவதற்கு காரணமே அதனை எளிமையாக வீட்டிலேயே அல்லது அலுவலகத்திலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதாகும். ஆனால், தனது எலக்ட்ரிக் ஆட்டோவில் சார்ஜிங் பிரச்சனைகள் எழுந்த காரணத்தினாலேயே அதனை சூரிய ஒளியில் இயங்கும் சோலார் ஆட்டோவாக மாற்றிக் கொண்டுள்ளதாக ஸ்ரீகாந்த் பட்ரா தெரிவித்துள்ளார்.

electric auto into solar auto

ஆட்டோவின் பேட்டரியை சார்ஜ் செய்வதில் பிரச்சனை எழுந்ததினால் பேட்டரியில் சார்ஜ் பெரும்பாலான நேரங்களில் குறைவாகவே இருந்தது ஸ்ரீகாந்த்தை இவ்வாறான ஓர் முடிவை எடுக்க வைத்துள்ளது. 35 வயதான ஸ்ரீகாந்த் பட்ரா ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வருக்கு அருகே உள்ள நாயாகார்க் மாவட்டத்தை சேர்ந்தவர். கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டிவரும் இவர் ஆரம்பத்தில் டீசலில் இயங்கக்கூடிய ஆட்டோ-ரிக்‌ஷாவை சொந்தமாக வைத்திருந்துள்ளார்.

"டீசல் என்ஜின் ஆட்டோவை ஓட்டிய சமயத்தில் தனக்கு ஒரு நாளைக்கு ரூ.300-இல் இருந்து ரூ.400 வரையில் எரிபொருளுக்காக செலவாகியது" என கூறும் ஸ்ரீகாந்த் பட்ரா இதன் காரணத்திலேயே டீசல் ஆட்டோவை விற்று எலக்ட்ரிக் ஆட்டோவை வாங்கியுள்ளார். இதுகுறித்து யுடியூப் வீடியோ ஒன்றில் பேசிய ஸ்ரீகாந்த், "1.5 வருடங்களுக்கு முன்னர் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை வாங்கி நகரத்திற்குள் ஓட்ட ஆரம்பித்தேன்.

ஆனால், குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சனைகள் தினந்தோறும் எனது பெரிய கவலையாக மாறி எனது சேவையை மிகவும் பாதித்தது மற்றும் பகல் நேரங்களில் சரியாக ஆட்டோவை இயக்க முடியாமல் போனது" என கூறியுள்ளார். இந்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்பது ஸ்ரீகாந்த் பட்ராவுக்கு தெரியவில்லை. ஏனெனில், இவர் 8ஆம் வகுப்பு வரையில் மட்டுமே படித்துள்ளார்.

அதன்பின் தனது 11 வயது மகளின் அறிவுரையின்படி, தனது எலக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றியதாக கூறும் ஸ்ரீகாந்த் பாட்ரா, இப்போது தனது ஆட்டோ சிங்கிள் சார்ஜில் 140கிமீ தொலைவிற்கு இயங்குவதாகவும், இதன் காரணமாக தன்னால் ஒருநாளைக்கு ரூ.1,300இல் இருந்து ரூ.1,500 வரையில் சம்பாதிக்க முடிவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஸ்ரீகாந்த் பட்ராவுக்கு மட்டுமில்லை, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய பலரது மனகுமுறல் சார்ஜிங் பிரச்சனை ஆகும். இதனை சரிச்செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஸ்ரீகாந்த் கூறுவதுபோல், எலக்ட்ரிக் வாகனத்தை காட்டிலும் சோலார் வாகனங்கள் குறைந்த எரிபொருள் செலவை வழங்குபவையாக இருக்கலாம். ஆனால் சோலார் வாகனங்கள் அனைத்து விதமான பகுதிகளிலும், அனைத்து விதமான நேரங்களிலும் ஏற்றது அல்ல.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 19, 2023, 21:40 [IST]
English summary
Odisha auto driver converted his electric auto into solar powered auto
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+