பஸ்,லாரி டிரைவர்களுக்கு சுங்கசாவடியில் இலவச டீ! மாநில அரசு அறிவித்த அதிரடி திட்டம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கனரக வாகன டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். சாலையில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்க இப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றால் டிரைவர்கள் கவனம் சிதறாமல் தூக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இது கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசு தற்போது வரவுள்ள சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

odisha free tea

இதையஎடுத்து இன்று முதல் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஒடிசா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அருகே தாபா அருகில் அந்தந்த பகுதி ஆர்டிஓ சார்பில் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு இலவசமாக டீ வழங்க அம்மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நம் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சாஹு வெளியிட்டுள்ளார்.

சூடான இந்த டீஅருந்தினால் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை தூக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும் டிரைவர்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது. இதற்காக அம்மாநிலத்தில் உள்ள ஆர்டிஓ க்கள் சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டல்கள் மூலம் டீ ஏற்பாடு செய்து டிரைவர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளனர்.

odisha free tea

இதற்காக ஒவ்வொரு ஆர்டிஓவிற்கும் ரூபாய் 5000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து அவர்கள் வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி வரை இந்த இலவச டீ வழங்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் டிரைவர்களுக்கு இலவச டீ மட்டுமல்லாமல் தங்கள் டிரைவிங்கில் சிறிது நேரம் ஓய்வும் கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் புத்துணர்வு பெற்று மீண்டும் தூக்க கலக்கம் இல்லாமல் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தேசிய நெடுஞ்சாலை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இலவச டீ வழங்கும் பொறுப்பை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை தான் அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் நடக்கிறது. இந்த நேரத்தில் தான் டிரைவர்களுக்கு அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை இருக்கிறது. இதை சரி செய்யவே டிரைவர்களுக்கு இந்த நேரத்தில் ஓய்வு வழங்கி அவர்கள் புத்துணர்வு பெற இலவசமாக டீயும் வழங்க ஓடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் சாலை பாதுகாப்பு வார முன்னெடுப்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இப்படியாகத்தான் ஒடிசா மாநில அரசு வித்தியாசமான இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. இதற்கு கனரக வாகன ஓட்டுனர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மற்ற மாநில அரசுகளும் இது போன்ற வித்தியாசமான முன்னெடுப்புகளை முன்னெடுத்து பொதுமக்களுக்கு மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சாலை பாதுகாப்பு வார விழாவை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழகத்திலும் இது போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் ஜனவரி 1ம் தேதி முதல் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை பாதுகாப்பு வார விழா என ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை வைத்து பேரணி நடத்துவது சாலைகளில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என பதாகைகளை தூக்கி நிற்பதை விட இது போன்ற செயல்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. பல ஆண்டுகளாக இப்படியான விழிப்புணர்வை செய்தும் எந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாததால் சரியான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும்

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2023, 11:17 [IST]
English summary
Odisha free tea initiative for drivers to mitigate road accidents
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+