சூப்பர் எம்எல்ஏ... ஒட்டுமொத்த இந்தியாவே இன்னைக்கு இவரதான் பாராட்டிக்கிட்டு இருக்கு... ஏன் தெரியுமா?

ஒட்டுமொத்த இந்தியாவே இன்று எம்எல்ஏ ஒருவரை பாராட்டி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்தியாவில் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளை பொறுத்தவரை பலர் ஹெல்மெட் அணிவது கிடையாது. அத்துடன் செல்போனில் பேசி கொண்டே டூ வீலர்களை ஓட்டுகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களில் பலரும் ஹெல்மெட் அணிவது இல்லை.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

கார் உள்ளிட்ட மற்ற வாகன ஓட்டிகளை பொறுத்தவரை அவர்களிடமும் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டும் பழக்கம் காணப்படுகிறது. இதுதவிர குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்து வகையான வாகன ஓட்டிகளிடமும் பொதுவாகவே காணப்படுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இவைதான் காரணங்கள். இதுதவிர சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையும் கிடைப்பது இல்லை. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்வதற்கு பலருக்கும் மனம் வருவதில்லை.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

சட்ட ரீதியில் ஏதேனும் சிக்கலை சந்திக்க வேண்டியது வருமோ? என்ற பயமே இதற்கு காரணம். ஆனால் சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு காவல் துறை தரப்பில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையிலோ எவ்விதமான தொந்தரவும் ஏற்படாது என உச்ச நீதிமன்றமும், அரசும் தெளிவுபடுத்தி விட்டன.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

இருந்தபோதும் இது தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அனைவரையும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த சூழலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சாலை விபத்தில் சிக்கிய மூன்று பேரின் உயிரை காப்பாற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். இதற்காக அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

ஒடிசா மாநிலம் சித்ரகொண்டா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பூர்ண சந்திர பாகா. இவர் சமீபத்தில் கான்வாய் வாகனங்களுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பயணித்த மூன்று பேர் விபத்தில் சிக்கி, சாலையோரமாக விழுந்து கிடந்ததை அவர் பார்த்தார். இதனால் உடனடியாக கான்வாயை நிறுத்தும்படி அவர் உத்தரவிட்டார்.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

இதன்பின் தன் காரில் இருந்து இறங்கி சென்று, விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவினார். அத்துடன் விபத்தால் காயமடைந்த மூவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வாகனத்தை கொடுத்தும் அவர் உதவினார். மேலும் அவர்களின் உடல் நிலை குறித்த அப்டேட்களை எம்எல்ஏ பூர்ண சந்திர பாகா தொடர்ச்சியாக கேட்டறிந்தார்.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

எம்எல்ஏ பூர்ண சந்திர பாகாவால் மீட்கப்பட்ட மூவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசாவின் மல்கான்கிரி அருகே உள்ள நாயக்குடா எனும் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று அந்த பகுதியில் ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று பேர் பயணம் செய்துள்ளனர்.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

அப்போதுதான் அவர்கள் விபத்தில் சிக்கினர். ஆனால் இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது தெரியவில்லை. எனினும் அவர்கள் மூவரும் சாலையோரமாக விழுந்து கிடந்தனர். அந்த சமயத்தில் எம்எல்ஏ பூர்ண சந்திர பாகா அவ்வழியாக வந்தபோதுதான் அவர்களை மீட்டார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களை அவர் மீட்டபோது எடுத்த வீடியோவை வைத்து பார்க்கையில், யாரும் படுகாயம் அடையவில்லை என தெரிகிறது.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

ஆனால் பைக்கில் பயணித்த மூவருமே ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. அத்துடன் இது விதிமுறை மீறலும் கூட. அத்துடன் அவர்கள் மூவரும் ஒரே பைக்கில் வந்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின்படி இதுவும் கூட போக்குவரத்து விதிமுறை மீறல்தான். இருப்பினும் அவர்களுக்கு தக்க சமயத்தில் எம்எல்ஏ பூர்ண சந்திர பாகா உதவியுள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்கும் முதலுதவி சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் முதற்கட்ட சிகிச்சை ஆகியவை மிகவும் முக்கியமானது. சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களுக்கு உதவ வேண்டும் என அனைவரும் உறுதி எடுத்து கொள்ள வேண்டும்.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது எளிமையானதுதான். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நபர்கள் எவ்வித தொந்தரவுகளுக்கும் ஆளாக மாட்டார்கள் என்பதை அரசு உறுதி செய்துள்ளது. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் இது இருக்கிறது.

நாடு முழுவதிலும் இருந்து குவியும் பாராட்டு... அப்படி இந்த எம்எல்ஏ என்ன செய்தார் தெரியுமா?

அத்துடன் 108 ஆம்புலன்ஸ் சேவையும் அனைத்து பகுதிகளிலும் எந்நேரமும் ஆக்டிவ் ஆக இருக்கிறது. எனவே சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால் உடனடியாக நீங்கள் 108 ஆம்புலன்ஸை அழைக்கலாம். தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும், சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை மறக்க வேண்டாம்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பரிசு தொகையையும் ஒரு சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Image Courtesy: OTV

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Odisha MLA Helps Accident Victims : Wins Praise - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X