1.5 கோடி ரூபாய் காரை ஸ்டேஷனுக்கு தட்டி தூக்கிய காவலர்! சொகுசு காருல வந்தா எதுவும் பண்ண மாட்டாங்கனு நினைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருப்பதால் தற்போது காவல்துறை மாநிலம் முழுவதும் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு, காவலர்கள் மேற்கொண்ட வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று பதிவெண் இல்லாமல் வந்திருக்கின்றது. இதைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், அந்த காரில் வந்தவரிடத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சொகுசு காரில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன், சொகுசு காரிலும் பதிவெண் பொருத்தப்படவில்லை. இதற்கான காரணத்தையும் டிரைவர் விளக்க தவறிவிட்டார்.
இதன் விளைவாகவே காவல்துறை பதிவெண் இல்லாத அந்த ஆடம்பர காரை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி பதிவெண் இல்லாமல் எந்தவொரு வாகனமும் சாலையில் நடமாடக் கூடாது என்பது விதியாகும். இந்த விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இந்த மாதிரியான நடவடிக்கையையே தற்போது ஒடிசா காவல்துறையினர் எடுத்திருக்கின்றனர். குறிப்பாக, மாநிலத்தில் தேர்தல் நடத்தைகள் அமலில் இருப்பதனால் சிறு தவறுகூட அரங்கேறக் கூடாது என்பதில் காவல்துறை தீவிரமாக இருக்கின்றது. இதன் விளைவாகவே உச்சபட்ச நடவடிக்கையாக அந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது.
பொதுவாக இதுமாதிரியான விதிமீறல்களுக்கு முதலில் அபராதமே விதிக்கப்படும். தொடர்ச்சியாக இதே விதிமீறலில் ஈடுபடுவார்கள் என்றால் மட்டுமே பறிமுதல் போன்ற அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காரணத்தினாலும், சரியான விளக்கத்தைக் கொடுக்காதனாலேயே கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாகனத்தில் பதிவெண் இல்லாமல் பயணிக்கக் கூடாது என்கிற படிப்பினையை வாகன உரிமையாளர்களுக்கு கற்பித்திருக்கின்றது.

ஒடிசா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி (Mercedes Benz GLS 400d ) ஆகும். இதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரையே எந்தவொரு தயவும் காட்டாமல் காவல்துறை பறிமுதல் செய்திருக்கின்றது.
காரை பறிமுதல் செய்த காவலர்கள் "ஏன் காரில் பதிவு எண் பொருத்தப்படவில்லை என்பதற்கான உரிய காரணத்தையும், ஆவணத்தையும் காட்டினால் மட்டுமே அந்த காரை விடுவிப்போம் என திட்டவட்டமாக" கூறிவிட்டனர். "இல்லையெனில், காரை பறிமுதல் செய்ததோடு அந்த காரை ஓட்டி வந்தவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றும் போலீஸார் கூறியிருக்கின்றனர்.
தொடர்ந்து, "வாகனங்களை பதிவெண் இன்றி இயக்க வேண்டாம்" என்றும் ஒடிசா காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது. ஒருவேளை வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் பிளேட் பொருத்த காத்திருக்கின்றீர்கள் என்றால் அதற்கான ஆவணத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வாகன தணிக்கையின்போது காவலர்கள் கேட்டால் அதைக் காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அந்த வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி ஓர் உயர்நிலை 7-சீட்டர் எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காரில் 3.0-லிட்டர் இன்லைன்-6 டீசல் எஞ்சினே பொருத்தப்பட்டு உள்ளது. இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைந்து 326 பிஎச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தை உரிய பதிவெண் இல்லாமல் இயக்குவது மிகப் பெரிய போக்குவரத்து விதிமீறல் செயல் ஆகும். சமூக விரோத செயல்களில் ஈடுபடவே பலர் இவ்வாறு செய்கின்றனர். இதன் காரணத்தினாலேயே பதிவெண் இல்லாதது, சரியாக தெரியாத பாதிக்கப்பட்ட பதிவெண்ணைக் கொண்டிருப்பது மற்றும் ஸ்டைலான எழுத்துக்களை பதிவெண்ணாக பயன்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்கள்மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








