ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாங்கனு சொல்றது இதைதானா!! புது கார் உள்பட எல்லாமே மனைவி பெயரில்!

எத்தனை கார் & பைக்குகளை வாங்கி இருப்பினும், மனைவிக்காக புதியதாக கார் அல்லது பைக் வாங்வது என்றாலே எப்போதுமே அது ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்கள் கூட தங்களது மனைவிக்கு விலையுயர்ந்த வாகனத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளதை பார்த்திருக்கிறோம். பணக்காரர்களுக்கே அப்படியென்றால், ஓட்டல் நடத்திவரும் சாதாரணமான மிடில்-கிளாஸ் கணவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் நபர், மனைவியின் பிறந்த நாளுக்காக அவருக்கு பிராண்ட்-நியூ காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் அந்த கணவர் ஒரு தாபா உணவக உரிமையாளர் ஆவார். வட இந்திய கலாச்சாரமான தாபா உணவகம் நம் தமிழ்நாட்டிலும் வேகமாக அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் தாபா ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஓடிசா மாநிலத்தின் பிரம்மாபுரில் இந்த நபர் தாபா ஓட்டலை நடத்தி வருகிறார்.

odisha restaurant owner gifts fortuner

கொஞ்சம் சிறிய உணவக ஓட்டலாக இருப்பினும், சுற்று வட்டார பகுதியில் இவரது 'பாக்யஸ்ரீ' ஓட்டல் பிரபலமானதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த ஓட்டலின் பெயரில் இன்ஸ்டாகிராமில் மணிக்கு ஒருமுறை வெளியிடப்படும் பதிவுகள் ஆகும். ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள், ஓட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லும் இடத்தில் இருப்பவர்கள் உடன் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதை இந்த நபர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்றை நிச்சயமாக தான் வாங்குவேன் என கூறியிருந்தார். அதன்படி, மனைவியின் பிறந்த நாளின் போது பிராண்ட்-நியூ ஃபார்ச்சூனர் காரை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெற்றுள்ள இந்த தாபா ஓட்டல் ஓனர் அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

odisha restaurant owner gifts fortuner

முற்றிலும் கருப்பு நிறத்திலான இந்த ஃபார்ச்சூனர் காரை மனைவி மற்றும் மகன் உடன் ஷோரூமுக்கு சென்று இவர் டெலிவிரி பெற்றுள்ளார். இவரது மனைவியின் பெயரான பாக்யஸ்ரீயில் தான் ஓட்டல் இயங்கி வருகிறது. மற்றப்படி, இந்த தம்பதியினர் வாங்கியிருப்பது ஃபார்ச்சூனர் காரின் எந்த வேரியண்ட் என்பதை அறிய முடியவில்லை.

இந்திய சந்தையில் 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த ஆப்ஷனில் ஃபார்ச்சூனர் காரை இந்த நபர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஃபார்ச்சூனர் 4x2 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.35.37 லட்சத்தில் இருந்தும், ஃபார்ச்சூனர் 4x4 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.42.72 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சமீபத்தில்தான் மைல்ட்-ஹைப்ரீட் (Mild-Hybrid) வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 'நியோ டிரைவ்' (Neo Drive) என்கிற வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.44.72 லட்சத்தில் இருந்து ரூ.50.09 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் கார்களில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 204 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் ஃபார்ச்சூனர் மைல்ட்-ஹைப்ரீட் காரில் மைல்ட்-ஹைப்ரீட் உதவி சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மைல்ட்-ஹைப்ரீட் உதவி சிஸ்டத்தில் பெல்ட் மூலமாக செயல்படக்கூடிய ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் லித்தியம்-இரும்பு பேட்டரி உள்ளிட்டவை அடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியர்கள் அதிகம் விரும்பக்கூடிய கார்களுள் டொயோட்டா ஃபார்ச்சூனரும் ஒன்றாகும். ஆதலால், பிறந்தநாளின் போது பரிசாக வழங்குவதற்கு ஃபார்ச்சூனர் ஆனது மிகவும் ஏற்ற கார் ஆகும். ஆனால், சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான காரை தாபா ஓட்டல் நடத்தும் இந்த நபர் வாங்கி இருப்பதுதான் சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 20:42 [IST]
English summary
Odisha restaurant owner gifts toyota fortuner car to his wife on her birthday
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+