இவ்வளவு பெரிய விபத்துக்கு இந்த சின்ன தப்பு தான் காரணமா? சிபிஐ விசாரணை துவங்கும் முன்பே உண்மை வெளியானது!

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு விடப்பட்டுள்ள நிலையில்,இந்த விபத்து குறித்த முக்கியமான காரணம் ஒன்று வெளியாகியுள்ளது. எலெக்ட்ரானிக் இன்டெர்லாக்கிங் சிஸ்டத்தில் உள்ள குழப்பம் தான் இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் இதற்குப் பின்னால் சதி வேலை கூட நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

கடந்த 2 தேதி ஒடிசா மாநிலம் பாலசூர் பகுதியில் கொல்கத்தா சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூர்- ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 288 பேர் பலியாகினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

odisha train tragedy caused by electronic interlocking

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வளவு பெரிய கோரச் சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த ரயில்களில் கவர் தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கான காரணம் எனக் கூறப்பட்டு வந்தது ஆனால் ரயில்வே நிர்வாகம் இதை முற்றிலுமாக மறுத்துவிட்டது கவர்ச்சி தொழில்நுட்பத்தால் இந்த ரயில் விபத்தைத் தடுத்து இருக்க முடியாது எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ரயில் விபத்து ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டதாகும் இதை கவச் தொழில்நுட்பத்தால் தடுக்க முடியாது. தற்போது இந்த ரயில் ஏன் தடம் புரண்டது என்பதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அளித்த பேட்டியில் ரயில்வே கமிஷனர் நடத்திய விசாரணையில் எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட குளறுபடியே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

odisha train tragedy caused by electronic interlocking

அது என்ன எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் முறை? எலெக்ட்ரானிக் இன்டர் லாக் இன் முறை என்பது இரண்டு ஸ்டேஷனுக்கு நடுவே உள்ள ரயில் தண்டவாளத்தில் எந்த ரயிலை அனுமதிக்க வேண்டுமென இது ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகளும் சேர்ந்து கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சிக்னலின் சிஸ்டம் தான் இந்த எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் முறை.

உதாரணமாக மதுரை-கூடல் நகர் ரயில் நிலையங்களை எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து கூடல் நகர் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் மதுரையில் உள்ள கட்டுப்பாட்டறைக்கும் கூடல் நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே உள்ள தொடர்பின் மூலம் தான் ரயில் போக்குவரத்து நடத்தப்படுகிறது.

odisha train tragedy caused by electronic interlocking

மதுரையிலிருந்து ஒரு ரயில் கூடல் நகரைத் தாண்டி செல்ல வேண்டும் என்றால் முதலில் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள அதிகாரி இந்த இன்டெர் லாக்கின் முறையில் கூடல் நகருக்குச் செல்லும் பாதையை லாக் செய்வார். கூடல் நகருக்கு செல்லும் பாதை ஒரு முறை லாக் ஆகிவிட்டால் அந்த ரயில் கூடல் நகரைக் கடந்த பின்பு தான் அன்லாக் ஆகும்.

அதுவரை கூடல் நகரில் உள்ள ரயில்வே அதிகாரியால் அந்த பாதையை லாக் செய்ய முடியாது. அதாவது அந்த பாதையில் அவர் வேறொரு ரயிலை விட முடியாது. இதனால் ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்பே இருக்காது. ஒரு முறை லாக் செய்யப்பட்டு விட்டால் எதிர்த் திசையில் ரயில் வருவதைத் தடுக்க முடியும்.

இந்த இன்டர் லாக்கிங் சிஸ்டம் முறையால் ரயில் எதிரெதிரே வந்து மோதிக் கொள்ளும் விபத்தை தடுக்க முடியும். இந்த முறை தான் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட விபத்து நடந்த இடத்திலும் இதே இன்டர் லாக்கின் முறை தான் பயன்படுத்தப்பட்டது. இதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தற்போது ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.

இந்த இன்டெர்லாக் சிஸ்டம் என்பது தற்போது கண்டுபிடிக்க புதிய முறையெல்லாம் இல்லை.இது பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறைதான் ஆனால் அப்பொழுது மேனுவலாக இந்த இன்டர்லாக் முறை இருந்தது. அந்த காலத்தில் இந்த இன்டெர்லாக் என்பது ஒரு சாவி மூலம் லாக் செய்து அந்த சாவியை ரயிலில் உள்ள ஓட்நரிடம் ஒரு வளையம் போன்ற அமைப்பில் கட்டி அனுப்புவார்கள்.

அந்த ரயிலில் ஓட்டுநர் அடுத்த ஸ்டேஷனுக்கு சென்ற பிறகு இந்த சாவியை ஸ்டேஷன் மாஸ்டர் இன் பொறுப்பில் இருப்பவளும் ஒப்படைப்பார். அவர் இந்த லாகிங் முறையை அடுத்து ரிலீஸ் செய்ய முடியும். இப்படியாக இந்த இன்டர் லாக்கிங் தற்போது நவீனப்படுத்தி எலெக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்பொழுது இந்த சாவியை அடுத்த ஸ்டேஷனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் கிடையாது. ஒருமுறை இங்கு லாக் செய்துவிட்டால் அடுத்த ஸ்டேஷனில் உள்ள இந்த லாக்கிங் சிஸ்டம் தானாக லாக் ஆகிவிடும் அதை அன்லாக் செய்ய முடியாது. ரயில் கடந்த பின்பு தான் அதை அன்லாக் செய்ய முடியும்.

இதில் ஒரே நேரத்தில் இரண்டு சிஸ்டமும் அன்லாக்கோ அல்லது லாக்கோ ஆகிவிட்டால் தானாக அனைத்து சிக்னல்களும் சிவப்பு நிறத்திற்குச் சென்று விடும்படி செட் அப் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் சிக்னல் எல்லாம் சிவப்பு நிறத்திற்குச் சென்று விடும் ரயில்கள் எல்லாம் தற்போது இருக்கும் நிலையிலேயே நின்று விடும். இதனால் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்பதற்காக இந்த சிஸ்டம் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.

இரண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு நடுவே அதிகமான தூரம் இருந்தால் ஒரு ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பி மற்றொரு ஸ்டேஷன் வந்த பின்பு தான் எதிர்த் திசையில் வர முடியும் என்ற நிலை இருந்தால் அதிக நேரம் ரயில் காத்திருக்க வேண்டும். இதற்காக இரண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே லூப் லைன் என்ற செட்டப் இருக்கும் அதாவது மெயில் இருந்து பக்கவாட்டில் சிறிது தூரம் வரை லுப் லைன் தண்டவாளங்கள் இருக்கும்.

ஒரு ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பியதும் அது லூப் லைன் வரை சென்று மெயின் லைனில் இருந்து மாறி லூப் லைனில் காத்திருக்கும். எதிர்புறம் மற்றொரு ரயில் கடந்து சென்ற பிறகு இந்த ரயில் லூப் லைனில் இருந்து மீண்டும் மேல் லைனுக்கு மாறி தொடர்ந்து அடுத்த ஸ்டேஷனுக்கு பயணிக்கும். இந்த நடைமுறை இந்தியா முழுவதும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த லூப் லைன் உள்ள பாதைகளில் ஒரு ரயில் லூப் லைனுக்கு மாற வேண்டுமா அல்லது மெயின் பாதையிலேயே செல்ல வேண்டுமா என்பது எலெக்ட்ரானிக் பைண்டிங் சிஸ்டம் மூலம் ரயிலின் ஓட்டுநருக்குத் தெரிவிக்கப்படும். குறிப்பிட்ட விபத்தில் சரக்கு ரயில் லூப் லயனில் நின்றுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்வதற்குப் பதிலாக லூப் லைனில் தடம் புரண்டுள்ளது. இது எப்படி நடந்தது என்று தான் விசாரணை நடந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரானிக் பாய்ண்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைபாடா அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது சதி வேலை இருக்கிறதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த விபத்து குறித்த பல தவறான தகவல் வெளியாகி வருகிறது. இதை மக்கள் நம்பக் கூடாது. போலியான தகவல்கள புறம் தள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 5, 2023, 11:00 [IST]
English summary
Odisha train tragedy caused by electronic interlocking know what it is
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X